அன்று Phnom Kulen எனப்படும் மலைப்பிரதேசம் செல்வதாகத் தான் ஏற்பாடு. இந்த மலைப் பகுதிக்கு நண்பகல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி உண்டு. எனவே அதற்கு முன்னர் சென்று திரும்பினால் தான் உண்டு. அத்தோடு சியாம் ரீப் நகரில் இருந்து போக 50 கிலோ மீட்டர் தூரம் பிடிக்கும். எனவே சீக்கிரமாகவே நமது பயணத்தை ஆரம்பிக்க எண்ணி காலை ஏழு மணிக்கெல்லாம் Nokor Kok Thloek நட்சத்திர ஹோட்டலில் அமைந்திருந்த சுற்றுலாப் பணியகம் சென்று இந்த இடத்துக்குச் செல்வதற்கான 20 அமெரிக்க டொலர் செலவிலான ரிக்கெட் எடுத்து விட்டுப் பயணத்தை ஆரம்பித்தோம். வார நாள் என்பதால் அலுவலகத்துக்குப் பயணிப்போர் தொகை மெல்ல மெல்ல பெருந்தெருக்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சியாம் ரீப்பில் இருக்கும் பெரும் பொது மருத்துவமனையான ஏழாம் ஜெயவர்மன் International Hospital ஐயும் கடந்து நம் பயணம் தொடர்ந்தது. நவீன பாலங்கள் எங்கணும் கூட ஐந்து தலை நாகங்களின் உருவத்தலைகளைப் பொறித்திருக்கின்றார்கள். மாமரங்களின் விளைச்சல் வீதியின் இருமருங்கும் தென்படுகின்றது.
அதிகம் வெயிலற்ற கணச்சூட்டில் எமது கார் Kulen மலைப்பிராந்தியத்தில் தாவியது. திடீரென்று எம் காரை மறித்து கற்பூரச் சூடம் காட்டிப் பிரார்த்தித்தார்கள் வழியில் தென்பட்ட மக்கள். இன்று காலை நாம் தான் முதலில் மலைக்குப் பயணிக்கும் வாகனம் அதனால் தான் இப்படிச் சூடம் காட்டிப் பிரார்த்திக்கின்றார்கல். இது ஒவ்வொரு நாளும் தொடரும் வழக்கம் என்றார் சாரதி.
இருபக்கமும் புதர் மண்டிய காட்டின் நடுவே ஒழுங்கற்ற பாதையினூடாக நீண்டதொரு பயணமாக அமைந்து மலை முகட்டைத் தொட்டோம். எமது காரை நிறுத்தியதும் தாமதம், பாசிமணி மாலைகள், கம்போடிய கைவினைப் பொருட்கள் சகிதம் வறுமைப்பட்ட கம்போடிய சிறுவர்கள் எம்மை மொய்த்தனர். அவர்களை ஒருவாறு சமாளித்து ஒரு புதர்ப் பக்கமாக என்னை சாரதி கூட்டிக் கொண்டு போனார். அங்கே தென்பட்டது சிறு ஓடை கலக்க மேடாக இருந்த பாறைகள் எங்கணும் தென்பட்ட லிங்க வடிவங்கள்.
இலிங்கங்களைக் கண்டு விட்டு அவ்விடத்தை விட்டகன்று மலையுச்சியிலே விளங்கிய ஒரு பெரும் ஆலயம் நோக்கிச் சென்றோம்.
இவற்றை எல்லாம் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி இருந்த நீர்வீழ்ச்சி நோக்கி நடந்தோம். குறுகலான தொங்கு பாதை ஒன்று இந்த நீர்வீழ்ச்சி போகும் வரை அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் போவதே சவாலாக இருந்தது. ஆனாலும் அந்த வேதனையும் கடந்து போனால் அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றின் இல்லையில்லை இரண்டு நீர்வீழ்ச்சிகள் தரிசனம் கிட்டும். ஒன்று நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரமும் 20 இலிருந்து 25 மீட்டர் குறுக்களவும் கொண்டது. இன்னொன்று 15 இலிருந்து 20 மீட்டர் நீளமும் 10 - 15 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்த இயற்கை எழிலை அள்ளிப் பருகிவிட்டு மீண்டும் பாறைகளில் தாவி வரும் போது ஒரு பாசிபடர்ந்த பாறை காலை வாரி விட்டது. சறுக்கிக் கொண்டே போய் விழுந்தேன். முன்னால் போன சாரதி திரும்பவும் பாய்ந்து வந்து கைலாகு கொடுத்து ஏற்றி விட்டார். அங்கேயிருந்த உணவுச் சாலை ஒன்றுக்குச் சென்றோம். எனக்கு கோக் மட்டும் போதுமாக இருந்தது ;). முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பு ரத்தத் திட்டுக்களாகத் தெறித்திருந்தது. வாகனச் சாரதி அந்த உணவுச் சாலையில் இருந்த பெண்ணை அழைத்து ஏதோ பேசினார். அவள் எங்கே போய் விட்டு வரும் போது இலையில் ஏதோ வெள்ளைக் களிம்புடன் வந்து என் காலில் இருந்த காயத்தின் மேல் களிம்பினைப் பரவ விட்டாள். அவளுக்கு நன்றி சொல்லி விட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தோம்.
திரும்ப வரும் வழியெங்கும் அந்த மலைப்பிரதேசத்தில் விளையும் காய், கனிகள் மூலிகைகளாகக் கடைத் தொகுதிகள் நிரம்பியிருந்தன.
உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் கையேடு
விக்கிபீடியா
12 comments:
me the first!
back after read post...:)
முதல் படத்தை பாத்த உடனே கம்போடியாவையே பாத்த மாதிரி இந்ருதிச்சு அதனால கட்டுரையை படிக்க லேட்டாயிடுத்து...:)
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
ஏழாம் ஜெயவர்மன்தான் கம்போடியா முழுக்க பிரபலமான ஆள்போல...
ஆமா கம்போடியாவை பாக்கணும்கிற எண்ணம் உங்களுக்கு எப்ப இருந்து ஆரம்பிச்சுது...
வாங்கோ தமிழன்
அதென்ன முதல் படத்தை பார்த்து திகைச்சு போனீங்கள் ;). ஏழாம் ஜெயவர்மன் தான் இன்னும் அங்கே ஹீரோ. கம்போடியா போன்ற நாடுகளில் எமது இந்து சமயத்தின் பரம்பல் எப்படி இருக்கு என்ற ஆர்வக் கோளாறு தான் என் பயணத்தின் மூல காரணி.
வழக்கம் போல படங்களும் செய்திகளும் அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சதங்கா
\\எம் காரை மறித்து கற்பூரச் சூடம் காட்டிப் பிரார்த்தித்தார்கள் வழியில் தென்பட்ட மக்கள். இன்று காலை நாம் தான் முதலில் மலைக்குப் பயணிக்கும் வாகனம் அதனால் தான் இப்படிச் சூடம் காட்டிப் பிரார்த்திக்கின்றார்கல். இது ஒவ்வொரு நாளும் தொடரும் வழக்கம் என்றார் சாரதி.
\\
ஆகா இப்படி எல்லாம் கூட இருக்கா!!!
வழக்கம் போல படங்களும் பதிவும் கலக்கல் ;)
தல
இப்போ கால் எப்படி இருக்கு!!?? ;)
முதலாவது படத்தில் நிற்பவரது ரீ சேட்டில் டக்ளஸ் என எழுதப் பட்டிருக்கிறது. மேலதிக விளக்கம் கோரப் படுகிறது. :)
//கோபிநாத் said...
தல
இப்போ கால் எப்படி இருக்கு!!?? ;)//
வாங்க தல, சுகம் விசாரிச்சுட்டு சிரிப்பான் போடுறீங்களே. இப்போ கால் ஒகே ;). வருகைக்கு நன்றி தல
//கொழுவி said...
முதலாவது படத்தில் நிற்பவரது ரீ சேட்டில் டக்ளஸ் என எழுதப் பட்டிருக்கிறது. மேலதிக விளக்கம் கோரப் படுகிறது. :)//
யோய் கிழவி
எதுக்கு அந்த மனுசனை வம்புக்கிழுக்கிறீர் ;)
Post a Comment