வழியோரக்கடைகளில் ஏதாவது சாப்பிட்டு வயிற்றில் வம்பை விலைக்கு வாங்க என் மனம் இடங்கொடாததால் விலை அதிகம் என்றாலும் ஒரு உயர்தர உணவகத்தைத் தேடிச்செல்வது நல்லது என்று நான் முன்னரே கார்ச்சாரதியிடம் சொன்னதை நினைவில் வைத்துத் தான் அவர் இந்த ஹோட்டலுக்கு இட்டுச் சென்றார்.

(ஆதாரம் : மலபர் ஹவுஸ் தகவல் தளம்)

நல்ல வசதிகளோடு விளங்கி கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்புடைய வாசஸ்தலமாக மலபார் ஹவுஸ் விளங்கிவருகின்றது. டொலரோ யூரோவையோ மணிப்பையில் கொண்டுபோவோருக்குத் தான் லாயக்கு.
ஒரு நட்சத்திர உணவகம் என்பதால் வெள்ளைத் தலைகள் தான் அதிகம் தென்பட்டன. எனக்குப் பிடித்த முன்பே திருவனந்தபுரத்தில் ருசித்த கறிமீன்வறுவலுடன் சாப்பாடு கிடைத்தது. சாப்பிடும் போது ஏதோ செயற்கைத் தன்மையை உணரமுடிந்தது. சாதாரண உணவகங்கள் என்றாலும் அவற்றில் சுவை அதிகம். இங்கேயோ அதிகம் விலை கொடுத்து சப்பென்று சாப்பிட்டமாதிரி என்று நினைத்துக் கொண்டேன்.

அவரைத் தொந்தரவு செய்யாமல் நடை தூரத்தில் இருந்த கொச்சின் துறைமுகத்தை நோக்கி நடை போட்டேன். அப்போது தான் வழி நெடுக உள்ள துறைமுகத்தை அண்டிய உண்வகங்களைக் காண நேர்ந்தது. அவற்றைக் கடக்கும் போது மூக்கின் நாசியை தயாரித்துக்கொண்டிருக்கும் கடலுணவின் மணம் கைது செய்துகொண்டிருந்தது.
மலபார் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வகை வகையான மீன், இறால், நண்டு இத்தியாதி கடலுணவுகள் வாரியிறைக்கப்பட்டுக் குவியல் குவியல்களாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. அவற்றை அங்கேயே வாங்கிப் பக்கத்தில் உள்ள அந்த நடைபாதையோர உணவகங்களில் கொடுத்தால் சுவையான கறியை உடனேயே சமைத்துத் தருகின்றார்கள். அடடா நல்லதொரு அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே என்று மனம் புழுங்கியது.
கொச்சின் கடற்கரையைத் தொட்டு அழுத்தமாக முத்தம் கொடுத்தவாறே பாரிய கப்பல்கள் அணிவகுக்கின்றன. Chinese net எனப்படும் நீண்டவலைக்கட்டமைப்பும் , ஆங்காங்கே சிற்றரசர்கள் போல தெல்லுத் தெல்லாகச் சிறுபடகுகளும் தென்படுகின்றன.
போர்த்துக்கேயர் பாவித்த பீரங்கி ஒன்று கடற்கரை நடைபாதையை விட்டுவிலகிய முட்புதர் ஒன்றில் தென்படுகின்றது. எதுவித கவனிப்பாரும் இன்றிக் கடல் மேல் விழி வைத்துக் கரள் கட்டிய தேகத்தோடு காத்திருக்கின்றது அது.
இந்தத் துறைமுகம் எந்தவிதமான தங்கி இளைப்பாறும் தரத்தில் உள்ள கடற்கரையாக இல்லாமல் கடல்வணிகத்தின் கேந்திரமாகவே தென்படுகின்றது. ஆனாலும் காதலர்கள் உட்பட கூட்டம் கூட்டமான சனத்திரளுக்குக் குறைவில்லை.
அடுத்த பதிவில் மேலும் சில படங்களுடன் கொச்சின் பற்றிய பார்வை தொடரும்.

அடுத்த பதிவில் மேலும் சில படங்களுடன் கொச்சின் பற்றிய பார்வை தொடரும்.
வீண்டும் காணாம்......