கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர் பேரரசில் (Khmer Empire) பல்லவ மன்னர்களில் ஆதிக்கம் குறித்தும் விரிவாகத் தரலாம் என்றிருக்கின்றேன்.
கம்போடியாவில் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் குறித்து அறிவதற்கு முன்னர் இந்தப் பல்லவ மன்னர்கள் குறித்த எளிய அறிமுகம் ஒன்று அவசியமாகின்றது. பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்த அறிமுகத்தை இந்தியாவில் அவர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் இருந்து கொடுக்கும் போது முழுமை பெறும் என்பது என் எண்ணம். இதற்காக சிட்னி தமிழ் அறிவகம் ஊடாக "தென் இந்திய வரலாறு" (டாக்டர் கே.கே.பிள்ளை முதற்பதிப்பு 1960), "தென்னாடு" ( கா.அப்பாத்துரை எம்.ஏ.எல்.டி, முதற்பதிப்பு 1954 ), தமிழக வரலாறும் பண்பாடும் (வே.தி.செல்லம் (முதற் பதிப்பு 1995) ஆகிய நூல்களை வாசித்து உசாத்துணையாக்கிக் கொண்டேன்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு பல்லவ மன்னர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழகத்தின் வடக்கில் ஆட்சி செலுத்தினார்கள். பல்லவ மன்னர்களின் பிறப்புக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடையே இருக்கின்றது.
வடக்கேயிருந்து தென்னாடு வந்தவர்களில் சகர், பார்த்தியர் ஆகியோருடன் பகலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பகலவர் என்ற இனத்தவரும் இருந்தார்கள். பல்லவர்கள் இவர்களின் பிரிவே என்பார் ஒரு சாரார். ஆனால் இவர்கள் ஆந்திரப்பேரரசில் சிற்றரசர்களாகவும் அத்துடன் அவர்களின் கொடியின் சின்னம் ஏறத்தாளச் சோழர்களின் புலிக்கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே பல்லவ மன்னர்கள் சோழர்களுடன் தொடர்பு கொண்ட திரையர் என்போர் ஆவார் என்று சொல்லப்படுகின்றது. பல்லவர், திரையர், தொண்டமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒருபொருட் சொற்களாகும். முதல் தொண்டமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான்.
இன்னொரு கருத்தாக வரலாற்றாசிரியர் சி.இராசநாயகம் அவர்களின் குறிப்புப்படி மணிமேகலை காப்பியத்தை ஆதாரம் காட்டி மணிபல்லவத்து நாககன்னிகைக்கும் தொண்டமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் களவொழுக்கத்தில் தோன்றிய தொண்டை மண்டலத்து ஆட்சியாளன் இளந்திரையன் வழி தோன்றியவர்களே பல்லவர்கள் என்றும் மணிபல்லவத்து "பல்லவ" என்ற சொல்லை வைத்து காஞ்சியில் ஆட்சியைத் துவக்கினான் என்று சொல்கின்றார். பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்து மா.இராசமாணிக்கனார் எழுதிய விரிவான கட்டுரை, வரலாறு என்ற இணையத்தளத்தில் இங்கே கிடைக்கின்றது.
மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றார்கள். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக்கொண்டார்கள்.
பல்லவ மன்னர்களுக்கு முற்பட்ட காலமானது களப்பிரர்களது பிடியில் இருந்ததால் பெளத்தம், சமண சமயங்களின் ஆதிக்கமே முன்னர் இருந்து வந்தது. பல்லவர்கள் முதலில் பிராகிருதத்திலும், பின்னர் சமஸ்கிருதத்திலும், இறுதியில் தமிழிலுமாகப் பட்டயம் இயற்றியிருக்கின்றார்கள்.
பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்து சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப் பேரரசர் பலர் தாமே கலைஞராக இருந்து ஓவியம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்த்தார்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டிட சிற்பக்கலை புதிய பரிமாணம் பெற்று விளங்கியது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்து மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்களும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் ஆலயமும் பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பைச் சான்று பகிர்கின்றன.
தென்னிந்திய கீழைத்தேய நாடுகளான பர்மா, மலாயா, சுமாத்திரா, ஜாவா, போர்னியோ, சையாம், பூணாம், காம்பூஜா (கம்பூச்சியா அல்லது கம்போடியா), சம்பா ஆகிய நாடுகளோடு ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட வணிகத் தொடர்பு நாளடைவில் தென் இந்திய மக்களும், நாகரீகமும் இந்த நாடுகளில் பரவ வழியேற்பட்டது.
தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் காம்போஜ அரசு முன்னர் பூனானின் (Funan) (வியட்னாமிய மொழியில் Phù Nam) ஆட்சியில் இருந்தது. காம்போஜ அரசகுலத்தினை நிறுவியோர் கம்பு முனிவர் மரபினர் எனக்கூறுவர். காம்போஜ நாட்டில் சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்தன. பவவர்மன் என்ற அரசர் தன் தம்பி சித்திரசேனர் உதவியால் சுமார் கி.பி.590 இல் பூனான் (Funan) அரசனைப் போரில் முறியடித்தார். பவமன்னர், சித்திரசேனர் ஆகியோரது கல்வெட்டுக்களும், கி.பி ஏழாம் நூற்றாண்டிலுள்ள பல்லவ மன்னர்களது கல்வெட்டுக்களும் பலவகையிலும் ஒத்திருக்கின்றன. பவமன்னர் சிவபக்தர் என்ற காரணத்தினால் நாட்டில் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தது மட்டுமன்றி நாட்டிலுள்ள பல கோயில்களிலும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்து மதப்பாடல்களைப் பாடும் படியும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் பண்ணும்படியுமான வழக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பின் வந்த அவர் தம்பி மகேந்திர வர்மன் அண்மையில் இருந்த இந்து நாடான சம்பாவோடு (now southern and central Vietnam) நட்புக் கொண்டிருந்தார்.
மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த ஈசானவர்மன் மத ஆசாரங்களைக் கண்காணிப்பதற்காக பேரறிஞராகிய வித்தியா விசேட ஆசாரியரை நியமித்திருந்தாராம். கி.பி 548 இலும் கி.பி 549 இலும் உள்ள கல்வெட்டுக்கள் இதைச் சொல்லி நிற்கின்றன. வித்தியா விசேடர் ஒரு கோயில் கட்டி அதில் சிவலிங்கத்தையும், ஹரிஹரர் சிலையையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தோ சீனாவில் சிவன், விஷ்ணு , சிவனும் விஷ்ணுவும் ஒருங்கே அமையப்பெற்ற ஹரிஹர ஆகிய மும்மூர்த்திகளின் ஆராதனைகள் உயர்நிலையில் இருந்தன என்பதற்கு இவ்வாறான உருவச்சிலைகளும், சாசனங்களும் சான்றாகின்றன.
கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி தமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.
காம்போஜ நாட்டின் பிற்கால அரசராகிய இரண்டாம் சூர்யவர்மனது ஆட்சியில் (கி.பி 1112- 53)அங்கோர் வாட் என்னும் சிறப்புமிக்க கோயிற்கட்டடப் பணி நடைபெற்றது. தென் இந்திய முறைப்படி கட்டப்பட்ட அவ்வாலயம் திருமால் கோயிலாகும். அதில் மகாபாரதம், இராமாயணம், ஹரிவம்சம் முதலான உருவச்சிலைகள் உள்ளன. அங்கோர் வாட் சிற்பப்பணிகள் போராபுதூர் சிற்பங்களை விட மேலானவை என்பது ஆய்வாளர் கூற்று.
ஆரம்பத்தில் சைவ, வைணவ மதங்களின் எழுச்சியும், செழுமையுமாக இருந்த கம்போடியாவின் சமயப்பண்பாடு நாளடைவில் உள்நாட்டு ஆட்சி, அரசியல் மாற்றங்களால் பெளத்த மத வழிபாட்டிற்கு தாவியது. ஆனாலும் சாதாரண குடிமக்கள் தவிர்ந்த உயர்தர வகுப்பினரிடையே இன்னும் இந்து மத ஆசாரக்கொள்கைகளும், நம்பிக்கைகளும் இறுக்கமாக இருந்துவந்தது. கம்போடியாவின் தற்போதய தலைநகர் நொம்பெங்(Phnom Peng) இல் மன்னரின் புரோகிதர்கள் இன்னாளிலும் அலுவலர்களுக்கு பணியேற்புரை நடத்துவதோடு ஏனைய சடங்குகளையும் பின்பற்றி வருகின்றார்கள். தென் இந்தியக் கிரந்த எழுத்துக்களிலே எழுதப்பட்ட சற்றுப் பிழையுற்ற சமஸ்கிருத மொழியே ஊடக மொழியாக இருந்திருக்கின்றது. தற்போது கம்போடிய நாட்டு மக்களாகிய கமெரர்கள், இந்தியர்கள் ஆகியோரின் பண்பாட்டுக் கலவையாக ஒரு பொதுப்பண்பாடு உருவெடுத்தாலும் இதன் அடிப்படை மூலம் இந்திய வழி நாகரிகமே என்பதில் ஐயமில்லை.
மேற்கண்ட ஆய்வுக்குறிப்புக்கள் இந்திய, இலங்கை ஆராய்ச்சியாளர்களின் பார்வையாக பதியப்பட்டிருக்கின்றது. நான் கம்போடியாவில் சந்தித்த வரலாற்று அனுபவங்கள் எவ்வளவு தூரம் முன் சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களோடு இயைந்திருக்கின்றன என்பதை தொடரும் பதிவுகளில் பொருத்தமான படங்கள், நான் குறிப்பெடுத்துக் கொண்ட அம்சங்கள் மூலம் தரவிருக்கின்றேன். அந்த வகையில் அடுத்து வரும் பகுதி கைமர் பேரரசில் இருந்த மன்னர்கள் குறித்த பார்வையாக அமையவிருக்கின்றது.
உசாத்துணை:
1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003
Sunday, April 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
ஆஹா அழகான...படங்கள்..
அதுவும் அந்த முதல் படத்தில்
ஒரு மன்னர் படிக்கட்டில் நிற்கிறாரே..
அடடா!
இது மொக்கை இல்லை!
உண்மையாவே நல்லா இருக்கு!
அற்புதமான பதிவு. புகைப்படங்களும், கட்டுரையும் சிறப்பாக இருக்கின்றன. பாராட்டுக்கள்
மலேசியாவில் சமீபத்தில் தான் லெம்பா புஜாங்க் என்னும் ஒரு அகழ்வாராய்ச்சி, அருங்காட்சியகம் சென்று வந்தேன்.
அங்கே கண்ணுற்ற, கல் சிற்பங்கள் நீங்கள் காட்டியிருப்பதுப் போல் தான் இருக்கிறது.
அது சோழர்களால் கட்டப்பட்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், கட்டிடக் கலை பல்லவர்கள் பானியயை ஒத்திருப்பதுப் போல் தெரிகிறது.
விரைவில் அந்த படங்களை வலையேற்றுகிறேன்.
நன்றி..
//சுரேகா.. said...
ஆஹா அழகான...படங்கள்..
அதுவும் அந்த முதல் படத்தில்
ஒரு மன்னர் படிக்கட்டில் நிற்கிறாரே..
அடடா!
இது மொக்கை இல்லை!//
வாங்க சுரேக்கா
காற்சட்டை போட்ட மன்னரா ;-) என்ன கொடுமை சார்.
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
அற்புதமான பதிவு. புகைப்படங்களும், கட்டுரையும் சிறப்பாக இருக்கின்றன. பாராட்டுக்கள்//
வணக்கம் டொக்டர்
இந்தப் பயணமே பதிவு எழுதுவதை முன்னிறுத்தி அமைந்ததால் இயன்றவரை விரிவாகக் கொடுக்க ஆசைப்பட்டேன். வாசித்துத் தங்கள் கருத்தைத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
நல்ல பதிவு... நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... :)
பரவாயில்லையே.. நிறைய தகவல்களை சேர்த்திருக்கிறீர்ர்களே.. மிகவும் உபயோகமாகா இருக்கிறது. நேரில் பார்த்த அனுபவம் போல். :-)
அன்புள்ள பிரபா ,
minTamil@googlegroups.com -ல்
தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்! என்ற இழையைப் பார்க்கவும்.
விஜய்குமார் என்பவர் ஆரம்பித்த இழை பல செய்திகளைக் கூறும்.தற்போது சில சிக்கல்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.அவசியம் பார்க்கவும்.பல்லவ , சோழர் கால கட்டடக்கலை தென் கிழக்கு ஆசியாவில் அதன் தாக்கம் முதலியவை விவரிக்கப்பெற்றது.
இதை இந்த இடுகையை ரசித்த அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்
அன்புடன்
சிங்கை நாதன்.
தல
அழகான படங்கள்...அருமையான விளக்கங்கள் ;)
பதிவு தானே என்று சதரணமாக நினைக்கமால் நிறைய படித்து சொல்லியிருக்கிறிர்கள் ;))
தல இன்னா தல தான் ;))
உள்ளேன் ஐயா!
//பேரரசன் has left a new comment on your post "
அருமையான புகைபடங்கள் ...
பகிர்விற்கு மிக்க நன்றி.. //
வணக்கம் நண்பர் பேரரசன்
தங்களின் பின்னூட்டல் சிறிய திருத்தத்துடன் வெளியிடப்படுகின்றது. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
அன்புடன்
கானா.பிரபா
//TBCD said...
மலேசியாவில் சமீபத்தில் தான் லெம்பா புஜாங்க் என்னும் ஒரு அகழ்வாராய்ச்சி, அருங்காட்சியகம் சென்று வந்தேன்.//
வணக்கம் நண்பா
உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன், சீக்கிரம் போடுங்க
//Haran said...
நல்ல பதிவு... நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... :)//
நன்றி தம்பி கரன் ;)
//மை ஃபிரண்ட் ::. said...
பரவாயில்லையே.. நிறைய தகவல்களை சேர்த்திருக்கிறீர்ர்களே.. மிகவும் உபயோகமாகா இருக்கிறது. நேரில் பார்த்த அனுபவம் போல்.
:-)//
வாங்க சிஸ்டர்
எதிர்காலத்தில் இவ்விடங்களுக்குப் போவோருக்கு உபயோகமா இருக்கட்டும்னு தான் வரலாற்றுப் பின்னணியைக் கொடுக்கின்றேன், வருகைக்கு நன்றி
//அன்புள்ள பிரபா ,
minTamil@googlegroups.com -ல்
தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்! என்ற இழையைப் பார்க்கவும்.
அன்புடன்
சிங்கை நாதன்.//
வணக்கம் அன்புக்குரிய சிங்கை நாதன்
தாங்கள் பரிந்துரைந்த குழுமத்தை மேலோட்டமாகப் பார்த்தேன், நிறைய விடயங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. ஆறுதலாக, விபரமாகப் படிக்கவேண்டும். பரிந்துரைத்தலுக்கு மிக்க நன்றி.
ம்ம்..சுவாரசியமா இருக்கு!!
அழகான படங்கள் மற்றும் அருமையான ஆரய்ச்சியோடு சேர்ந்த அற்புதமான பதிவு!
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! B-)
Mikavum arumayana pathivu. Veku Naatkalaha naan therinthu Kolla Aavalaka Iruntha Vidayam. Aavaludan Aduththa pathivai Ethirparkiren.
பிரபா!
இந்த மண்ணில் காலடிபட நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள். படங்கள் இலகு தமிழ் விளக்கங்கள்
நன்றாக உள்ளன. நான் பார்க்க விரும்பும் மண்ணில் இதுவும் ஒன்று.
இதே காலகட்டக் கட்டடங்கள் ஐரோப்பாவில் அழியாமல் பாதுகாக்கப்படும் போது நமது நாடுகளில்
இந்தளவு தூரம் அழிய விட்டுள்ளார்களே.. என்பது வருத்தமே!
// கோபிநாத் said...
தல
அழகான படங்கள்...அருமையான விளக்கங்கள் ;)//
நன்றி தல, கடமை தல ;-)
//இலவசக்கொத்தனார் said...
உள்ளேன் ஐயா!//
ஆஹா, வகுப்பு ஒழுங்கா வர்ரீங்களே, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
//சந்தனமுல்லை said...
ம்ம்..சுவாரசியமா இருக்கு!!//
வருகைக்கு நன்றி சந்தன முல்லை, சுவாரஸ்யமான பயணம் தான் எழுதத்தூண்டியது.
நல்ல பதிவு.
வணக்கம் பிரபா ... காண கிடைக்காத புகைபடங்களுடன் ...வரலாற்று குறிப்புகளுடான நல்ல பதிவு ..நன்றிக்ள
கம்போடியாவிலா...மிக சமீபகாலம் வரை அந்த நாட்டு பாராளுமன்ற நிகழ்வுகள் தேவாரம் திருவாசகம் பாடபட்டு தான் தொடங்கபட்டதாகா? அது உண்மையா?
உலாத்தல் மிக நன்றாக நடக்கின்றது போல. படங்களும் பல்லவர்கள் பற்றிய தகவல்களும் கம்போடியா பற்றிய தகவல்களும் அருமை. மிக்க நன்றி.
//CVR said...
அழகான படங்கள் மற்றும் அருமையான ஆரய்ச்சியோடு சேர்ந்த அற்புதமான பதிவு!//
மிக்க நன்றி காமிரா கவிஞரே ;)
// Anonymous said...
Mikavum arumayana pathivu. Veku Naatkalaha naan therinthu Kolla Aavalaka Iruntha Vidayam. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, இயன்றளவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு எழுதுகின்றேன்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
இந்த மண்ணில் காலடிபட நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள்.//
உண்மைதான் அண்ணா, இந்து கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் ஆர்வமுடையோருக்கு இப்பிரதேசம் நிறையத் தீனி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அழிந்த சுவடுகளே இவ்வளவு பிரமிக்க வைக்கின்றன. முழுமையானவை இன்னும் எவ்வளவு தூரம் வியக்கவைத்திருக்கும். இன்னும் சொல்வேன்.
//Alien said...
நல்ல பதிவு.//
மிக்க நன்றி நண்பரே
//சின்னக்குட்டி said...
கம்போடியாவிலா...மிக சமீபகாலம் வரை அந்த நாட்டு பாராளுமன்ற நிகழ்வுகள் தேவாரம் திருவாசகம் பாடபட்டு தான் தொடங்கபட்டதாகா? அது உண்மையா?//
வணக்கம் சின்னக்குட்டியர்
நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து அங்கிருக்கும் போது செவி வழி அறியவோ, காணவோ வாய்ப்புக் கிடைக்கவில்லை. காரணம் நான் சென்றது தலைநகர் அல்ல, கலாச்சார நகரான சியாம் ரிப். வேறு பல விடயங்கள் எங்களோடு ஒத்திருக்கின்றன. அவற்றைப் பின்னர் தருகின்றேன்.
//குமரன் (Kumaran) said...
உலாத்தல் மிக நன்றாக நடக்கின்றது போல. படங்களும் பல்லவர்கள் பற்றிய தகவல்களும் கம்போடியா பற்றிய தகவல்களும் அருமை. மிக்க நன்றி.//
வணக்கம் குமரன்
வாசித்துத் தங்கள் கருத்தை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
வணக்கம் பிரபா
உங்கள் வலைதளத்திற்கு புதிது நான்,ஆனாலும் அடிக்கடி வந்திருகிறேன்.
றேடியோஸ்பதியின் ரசிகை.
நன்று..அழகான படங்கள்...அருமையான தேடலுடன் கூடிய விளக்கங்கள் ..
வாழ்த்துக்கள் நண்பரே..
வணக்கம் சக்தி
உங்களைப் போன்ற நண்பர்களின் உற்சாகப்படுத்தல் இன்னும் எழுத தூண்டுகோலாய் அமையும். மிக்க நன்றிகள்
அழகான படங்களுடன்,தெளிவான தமிழில் விளக்கக் கட்டுரை...
நன்றி பிரபா.
வணக்கம் சுந்தரா
பதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்
kalakkal padhivu. ippadhaan paakkaren.
பல்லவர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொன்டார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திர பிராமணர்கள். மற்ற தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று தங்கள் கல்வெட்டுக்களில் பொறித்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். இது உங்கள் பதிவுக்கு பயன்படலாம்.
வருகைக்கு நன்றி சர்வேசன் மற்றும் உமையாணன்
இந்தத் தொடரை கடந்த நாலு வாரமாக இடை நடுவில் விட்டுவிட்டேன், அதை இந்த வாரம் முதல் மீண்டும் தொடர்கின்றேன்.
உமையாணன்
உங்கள் மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி
அருமையான பதிவு நண்பரே
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தயாளன்
அருமையான தகவல்கள், படங்கள்..
கானா அண்ணா எனக்கு மிகவும் பிடித்த சாம்ராஜியங்களில் பல்லவ சாம்ராஜ்யம் இரண்டாம் இடம். பதிவு அருமை.
anna really superb!.. Thanks for a nice post. :)
Post a Comment