நம் கார் Banteay Samré ஆலயத்தைக் கண்டதும் தன் ஓட்டத்தை நிறுத்தி நின்று நிதானித்தது. Banteay Samré ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் மத்தில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டாம் சூர்யவர்மன் கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாலயத்தின் கட்டிடப்பணி இரண்டாம் யசோவர்மனாலேயே நிறைவுற்றது. Samré என்பது இந்தோசீனாவின் பூர்வீகக் குடிகளின் பெயராகும். முழுமையாக விஷ்ணு ஆலயமாகவே எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடமுறையை Angkor Wat என்னும் வகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்தியிருக்கின்றார்கள். நீண்டதொரு சமநிலைப்படுத்தப்பட்ட கட்டிட அமைப்போடு Angkor Wat ஆலயத்தின் கட்டிடங்களை நினைவுபடுத்தும் கட்டிட அமைப்போடும், கலை அமைப்போடும் உருவாக்கப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க முடிகின்றது.
உசாத்துணை: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்
16 comments:
அருமை. இவை எல்லாம் பார்த்தால் இதைக் கட்டியவல்களின் கலைத் தாகம் உணர முடிகிறது.
எப்போது பார்ப்பேனோ எனத் தோன்றுகிறது.
நன்றி. வணக்கம்.
அருமை பிரபா.உண்மையில் நீங்கள் காட்டியுள்ள படங்களில் உள்ள சிற்ப வேலைகள் சிலிர்க்க வைக்கிறது.
அந்தக் காலங்களிலேயே எவ்வளவு திறமையாகக் கை வேலைகள் செய்திருக்கிறார்கள்.அநேகமாக
நீண்ட காலங்கள் எடுத்திருக்கும் இதை அமைக்க.அடுத்து கம்போடி
யாவில் கலயாணம் ,நேர்த்திக்கடன்
என்கிறீர்கள்.வாழ்வியல் அதிசய
மாய்தான் இருக்கு.வசதி கிடைக்கும் காலத்தில் கட்டாயம் போய் பார்க்க மனம் தூண்டுகிறது.மிக்க நன்றி பிரபா.
இவையெல்லாம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டியவை..
//ஹேமா, said...
அருமை பிரபா.உண்மையில் நீங்கள் காட்டியுள்ள படங்களில் உள்ள சிற்ப வேலைகள் சிலிர்க்க வைக்கிறது.
அந்தக் காலங்களிலேயே எவ்வளவு திறமையாகக் கை வேலைகள் செய்திருக்கிறார்கள்.அநேகமாக
நீண்ட காலங்கள் எடுத்திருக்கும் இதை அமைக்க.அடுத்து கம்போடி
யாவில் கலயாணம் ,நேர்த்திக்கடன்
என்கிறீர்கள்.வாழ்வியல் அதிசய
மாய்தான் இருக்கு.வசதி கிடைக்கும் காலத்தில் கட்டாயம் போய் பார்க்க மனம் தூண்டுகிறது.மிக்க நன்றி பிரபா.
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
பார்க்க வாய்ப்புக்கிடைத்தாலும் கிடைக்காவிடிலும் படங்களில் பார்க்கும் வாய்ப்பினை அளித்த கானா அண்ணாவுக்கு நன்றிகள்!
//Vetrimagal said...
அருமை. இவை எல்லாம் பார்த்தால் இதைக் கட்டியவல்களின் கலைத் தாகம் உணர முடிகிறது.//
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், இங்கே போவதற்கும் சிங்கப்பூர் போவதற்கும் பெரும் வித்தியாசம் இல்லை. செலவும் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே. வாய்ப்புக்கிடைத்தால் சென்று பாருங்கள்.
//ஹேமா, said...
அருமை பிரபா.உண்மையில் நீங்கள் காட்டியுள்ள படங்களில் உள்ள சிற்ப வேலைகள் சிலிர்க்க வைக்கிறது.//
வாங்கோ ஹேமா
இந்தக் கலைப்பெட்டகங்களை இப்போதாவது காப்பாற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு வந்திருக்கிறது, அதுவும் சுற்றுலா வருவாய் கொடுக்கும் என்ர ஒரே நோக்கிலேயே. அங்குள்ள சடங்குகள், சம்பிரதாயங்களை முதலில் நான் கேட்கும் போதும் வியந்து போனேன்.
அழகாக வார்த்தைகளை கையாண்டு இருக்கிங்க தல ;))
மிக அழகாக வந்திருக்கிறது இந்த பதிவு ;)
தூயா, ஆயில்யன், தல கோபி
வாசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
கட்டாயம்,Inshallah!
USA-வில் இடங்களைப் பார்த்த போது மனதில் ஒரு எக்கம். நம் நாட்டிலும் எத்தனை பார்க்க வேண்டும! கீழை நாடுகளையும் காண மனதில் ஆசை.
உங்கள் உற்சாகம் ஊக்குவிக்கிறது. நன்றி.
பிரபா அண்ணா,
படங்கள் எல்லாம் super. தகவல்களையும் நல்ல மொழி நடையில் தந்துள்ளீர்கள்.
பாதுகாக்கப்படவேண்டிய சிற்பங்கள். படங்களை பார்க்கும் போது போதிய பராமரிப்பு இல்லை
என்று தெரிகிறது.
உலாத்தல் தொடர வாழ்த்துக்கள்.
வணக்கம் வாசுகி
பதிவை தொடர்ந்து வாசித்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி
படங்களுக்கு நன்றி கானாஸ்! 2009-லும் அதிகமாக உலாத்தி நிறைய படங்களையும் கதைகளையும் சொல்ல வாழ்த்துகள்!
//பார்க்க வாய்ப்புக்கிடைத்தாலும் கிடைக்காவிடிலும் படங்களில் பார்க்கும் வாய்ப்பினை அளித்த கானா அண்ணாவுக்கு நன்றிகள்!/
ரிப்பீட்டு!!
உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சந்தனமுல்லை
ulaathal.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading ulaathal.blogspot.com every day.
vancouver payday loan
payday loans online
பான்டேய் சாம்ரேயில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:
https://goo.gl/photos/Ziu6eHVV3kTVVAr67
- ஞானசேகர்
Post a Comment