Social Icons

Pages

Thursday, June 01, 2006

சிறீ பத்மநாபசுவாமி ஆலயம் - திருவனந்தபுரம்


மே 27, காலை 8.00 மணி (இந்திய நேரம்)

நான் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளரிடம் ஒரு நாட் சுற்றுலாவிற்காக ஒரு Taxi ஐ ஒழுங்கு செய்தேன். திருவனந்தபுரத்தில் என்னுடைய முதல் சுற்றுலாவை இறையளுளோடு ஆரம்பிக்கலாம் என்றெண்ணி முதலில் நான் தெரிவு செய்தது பத்மநாபன் ஆலயம்.

கேரளாவை கடவுளின் சுவீகார தேசம் (God's own country) என்று அழைப்பது போலத் திருவனந்தபுரத்தைக் கோயில்களின் நகரம் (City of temples) என்று என்று அழைப்பார்கள். என்னுடைய சுற்றுலாவின் போது நான் பார்த்தவை, அனுபவித்தவைகள் இவ் அடையாளப்பெயர்கள் நிரம்பவும் பொருந்தமானவை என்று மெய்ப்பித்தன.

சரி, இந்த சிறீ பத்மநாபசுவாமி ஆலயம் பற்றிய வரலாற்றுக்குறிப்பை முதலில் பார்ப்போம். விஷ்ணுவின் ஆலயமான இது அவரின் 108 திருப்பதிகளில் ஒன்றாகவும், விஷ்ணு அனந்த சயன நிலையில் இங்கே வீற்றிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. திருவனந்தபுரம் என்ற பெயர்க்காரணம் கூட "அனந்தன்" அதாவது மகாவிஷ்ணுவின் பெயர் தழுவியதாக தழுவியதாக அமைகின்றது.

பல நூற்றாண்டுகாலமாகப் பேணிவளர்க்கப்பட்ட இவ்வாலயம் மார்த்தாண்டவர்மா மன்னன் காலத்தில் இன்னும் சிறப்பாகப் போற்றப்பட்டது. திருவாங்கூர் மகராஜாவால் இவ்வாலயம் 1733 இல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, தன்னுடைய அரசு ஆண்டவன் பத்மாநாபனின் அடிமை (Padmanabha Dasa) போலச்செயற்படும் என்றும் கூறி அதைச்செயற்படுத்தினாராம்.

பத்மதீர்த்ததிற்கு அருகில், திராவிடக் கட்டிடக்கலை மரபில் 7 அடுக்குக் கொண்ட கோபுரமும், அக்கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவினதாக இருக்கின்றது.

மார்ச் முதல் ஏப்ரல் வரை மீன ராசி சஞ்சாரிக்கும் காலத்திலும் மற்றும் செப்ரெம்பர் முதல் ஒக்ரோபர் வரை துலா ராசி சஞ்சாரிக்கும் காலத்திலும் என்ற இவ்வாலயத்தின் சிறப்புத்தினங்களாக்க் கொள்ளப்படுகின்றன. பத்துத்தினங்கள் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகிப் பத்தாவது நாள் மகாவிஷ்ணு அராபியன் கடலில் தீர்த்தமாடுவதுடன் நிறைவு பெறுகின்றது.

தவிர மகாசிவராத்திரி ஜனவரி மாத்தில் வரும் ஒவ்வொரு ஆறு ஆண்டுக்கொருமுறை லட்ஷ தீப உற்சவம் 100 ஆயிரம் விளக்கேற்றி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.


கேரளாவின் பெரும்பாலான ஆலயங்கள் தங்கள் முகப்பில் இந்துக்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பைத்தாங்கியிருப்பார்கள். அதற்கு இந்தப் பத்மநாபன் ஆலயமும் விதிவிலக்கல்ல.
அதோடு ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் சேலையும் அணிவது கட்டாயம்.
எனவே உங்கள் பயணத்தின் போது மறக்காமல் இந்தச் சம்பிரதாயபூர்வ உடைகளை எடுத்துச்செல்லுங்கள். ஜீன்ஸ், டீசேர்ட் உடன் சென்ற என்னை ஆலயத்தின் வெளியே உள்ள அறைக்கு அனுப்பினார்கள். அங்கு நின்ற ஒருவர் எந்தவிதமான கேள்வியும் இன்றி என் மேற்சட்டையை உருவிவிட்டு, ஜீன்சைக் கொஞ்சம் மடிக்கச் சொல்லிவிட்டு நாலு முழ வேட்டியை என் இடுப்பில் சுற்றினார். விவேக் பாணியில், " அடப் பாவீங்களா, ஷக்கீலா றேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களேடா என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனாலும், "ஒழுக்கம் என்பது நீ அணியும் ஆடையிலிருந்து ஆரம்பிக்கின்றது, ஆலயத்தினுள் மற்றவர்களின் மனசைச் சலனப்படுத்தாமல் வைத்து, இறைதரிசனத்தில் ஒன்றுவதற்கு இதுவும் முக்கிய தேவை" என்பதை உணர்ந்துகொண்டேன். பெருமையாக இருந்தது. எனக்கு வேட்டியை மாற்றியவர் 17 ரூபாவிற்கான உடைமாற்றல் பற்றுச் சீட்டை வாங்குமாறு பணித்துவிட்டு, வந்த இன்னொரு நவீன பக்தரின் டீ சேர்ட்டை உருவுகிறார். எல்லாம் இயந்திரகதியில் நடக்கின்றன.

ஆலய முகப்பில் வைத்து இரண்டு எரியும் எண்ணை விளக்குகளைத் தருகின்றார்கள். உள்ளே நுளைந்தால் மத்தியில் பெரும் ஜோதி எரிந்துகொண்டிருந்தது. அதன் அருகே நின்ற பூசகர், என் பெயரையும் நட்சத்திரத்தையும் நானே சொல்லி இறைவனைத் துதித்து அந்த ஜோதியில் நான் கொண்டுபோன தீபத்தைக் கலக்குமாறு சொல்லுகின்றார். பின்னர் ரூ 20 ஐ மட்டும் காணிக்கையாக வேண்டிப் பெற்றுக்கொள்கின்றார். அருகே பக்தர்கள் எரித்த தீபங்கள் குவிந்து கிடக்கின்றன.

மலையாள சேச்சிகள் பழுப்பு வெள்ளை நிறத்தில் சேலைகளின் சோலைகளாகவும், சேட்டன்கள் மஞ்சள், இளங்காவி வேஷ்டிகளுடனும் பக்திப் பரவசத்தில் தங்கள் இறைபணியைச் செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் பிரமாண்ட ஆலயத்தில் பலமான அமைதி மையம் கொண்டிருக்கிறது. மூலஸ்தானத்தை நோக்கி ஒழுங்கான நீண்ட பக்தர் வரிசை வரப்போகும் தரிசன நேரத்தில் ஒவ்வொருவராகச் சென்று வழிபடக்காத்திருக்கிறார்கள்.

எந்த விதமான மேலதிக கட்டணமுறைகளை மருந்துக்கும் காணோம். ஆலயத்தினுள் புகைப்படக்கருவி, கைப்பேசி கொண்டுபோகமுடியாது. ஆலயத்தின் வெளியேயும் உள்ளேயும் தமிழ்,மலையாளம் தாங்கிய பெயர்ப்பலகைகளே உள்ளன.
கோவிலின் உள் அமைப்பைப் பொறுத்தவரை,கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தை நினைவுபடுத்துமாற் போல முழுமையான கருங்கல் வேலைப் பாடுடன் பிரமாண்டமான தூண்களுடன் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக் கோயில்களில் இருப்பது போலப் பிரமாண்டமான சுற்றுப்பரிகார விக்கிரகங்களைக் காணமுடியாது. ஒவ்வொரு பிரகாரத் தெய்வங்களுக்கும் தனித்துவமான பூசகர்கள் அதற்கேற்ப முறையான கிரியைகளுக்காக இருக்கின்றார்கள்.

ஒப்பீட்டளவில் மிகச்சிலப் பரிவாரத்தெய்வங்களையே இவ்வாலயம் கொண்டிருக்கின்றது. ஈழத்துக்கோயில்களில் மிகச்சிலவற்றில் மட்டுமே பரிவாரத் தெய்வமாகக் கொள்ளப்படும் ஐயப்பன் விக்கிரகமும் உள்ளது. எந்த விதமான மாற்று வண்ணவேடிக்கையின்றி வெறும் சாம்பல் நிறக் கருங்கற் கோட்டமாகவே இந்தக் கோயில் பழமை மாறாது பேணப்படுகின்றது. நீண்டதொரு உள்வீதியில் காணப்படும் பல அறைகள் அர்ச்சகர்கள் மட்டும் உட்செல்வதற்கானதாக உள்ளன.
பழமையும், பண்பாடும், அமைதியும், ஆச்சாரமும் நிறைந்த சிறீ பத்மநாபன் ஆலயத்திலிருந்து அரங்கனாதனைத் தரிசித்துப் பெரும் மனநிறைவோடு திரும்புகின்றேன் நான்.

செரி, ஞான் பின்ன பறயான்.......

13 comments:

Anonymous said...

முகப்பிலே இருக்கும் படம் கவர்கிறது

-/.

கானா பிரபா said...

வணக்கம் அநாமோத நண்பரே,

முகப்புப் படம் மட்டும் இணைய வலை ஒன்றில் சிக்கியது.

G.Ragavan said...

நல்ல திருத்தலம்.

இந்தத் தலத்திற்கு சிலப்பதிகாரக் காலத்தில் சேடகமாடகம் என்றுதான் பெயர். திருவனந்தபுரம் என்ற பெயர் மிகவும் பிற்காலத்தில் எழுந்தது.

இந்தக் கோயிலில் ஆடு முட்டிக் கடிகாரம் பார்க்கவில்லையா? இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ளும். இப்பொழுது பழுது என்று சொல்லிக் கேள்வி.

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்,

மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்.

//இந்தக் கோயிலில் ஆடு முட்டிக் கடிகாரம் பார்க்கவில்லையா? //
நீங்க குறிப்பிடும் விடயத்தை நான் காணவில்லை.

Anonymous said...

OH APPAN KERAL KUTTTALA PARTHATHOO

KUTTIYALIN PADAM KONCHAM PODUINKOO

கானா பிரபா said...

//KUTTIYALIN PADAM KONCHAM PODUINKOO //

வணக்கம் அநாமோதய அச்சன்

குட்டியளப் பார்த்ததுண்டு, படம் எடுக்கவில்லை.
படம் எடுத்திருந்தா இப்பிடி முழுசா நான் வந்திருக்கமுடியுமே?

Anonymous said...

வெளி நாட்டு உலாசப் பிரயாணிகளுக்கும்;உள்செல்லும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படுகுறதா??,:,இந்து அல்ல என்பதை எப்படி??? நிர்ணயிக்கிறார்கள்!!!!
வியட்னாம்,கம்பூசியா,தாய்லாந்து;இந்தொனேசியா மற்றும் இன்னோரன்ன நாட்டு இந்துக்கள்;நிலை என்ன,,,,???
இவை தேவை தானா!!!!;புனிதம் என்பது என்ன???,
"புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்.".;;;;எல்லா இந்துக்களும் புனிதம் தூய்மையுடனா???,!!!! போகிறார்கள்.
என் சிற்றறிவு இவற்றைக் கேட்கிறது.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

நான் சென்ற நேரத்தில் சில வெளிநாட்டுப் பயணிகள் வந்திருந்தார்கள். உள்ளே போகாமல் நின்றிருந்தார்கள். அனுமதி மறுக்கப்பட்டதா அல்லது ஆடை மாற்ற அவர்கள் விரும்பவில்லையா என்று தெரியவில்லை.


//இந்து அல்ல என்பதை எப்படி??? நிர்ணயிக்கிறார்கள்//
நியாயமான கேள்வி, உண்மையைச் சொல்லப் போனால் எனக்கும் தோன்றியது. எப்படி இந்து என்று முடிவு செய்கின்றார்கள் என்று எனக்கும் அறிய ஆவல்.

துபாய் ராஜா said...

'சிதம்பரம்'போல் இல்லாமல்
சிறப்பான தரிசனம் கிடைத்தது என்பதை தெளிவாக கூறிவிட்டீர்கள்.
தொடரட்டும் பயணம்.வாழ்த்துக்கள் பிரபா!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

G.Ragavan said...

யோகன், உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

இந்துக்கள் என்பதை எப்படி நிர்ணயிப்பது? அதை அவரவர் உள்ளத்திற்கே விடுவதே நல்லது.

எனக்குத் தெரிந்த வரை அந்த வரிகளுக்குப் பொருள்...உள்ளே செல்கிறவர்கள் இறைவணக்கத்திற்கு செல்க என்பதுதான். அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

Anonymous said...

OH KUTTAN APPDEE ORU KOPIKA NAYANTHARA MAATHREE ONNNDUU ENNKUU KONINNUUDUU VARAMUDUYUMMA

கானா பிரபா said...

வணக்கம் (துபாய்)ராஜா

திருவரங்கநாதன் அருளால் கேரளாவின் முழுப்பயணமுமே இனிதாக நிறைவேறியது.

கானா பிரபா said...

//Anonymous said...
OH KUTTAN APPDEE ORU KOPIKA NAYANTHARA MAATHREE ONNNDUU ENNKUU KONINNUUDUU VARAMUDUYUMMA //

அநாமோதய ஸ்னேகிதன்,

நயன் தாராவைத்தான் சிம்பு கொத்திக்கொண்டுப்போனது தெரியாதே உமக்கு?
ஏன்காணும் கோயிலைப் பற்றிக் கதைக்கேக்க அவையள இழுக்கிறீர்:-)