Social Icons

Pages

Wednesday, February 18, 2009

நிறைவான கம்போடிய உலாத்தல்

மார்ச் 19, 2008 மாலை 3 மணி

நான் தங்கியிருந்த அறையில் திசைக்கொன்றாய் கிடந்த பொருட்களை அடுக்கிப் பயணப்பொதியின் வாயில் திணித்து விட்டு, மீண்டும் அந்த அறையை ஒரு முறை சுற்றும் பார்க்கின்றேன். ஹோட்டல் அங்கோரியானாவில் இருந்த வரவேற்பாளர்களிடம் விடை பெறும் போது "இனி எப்போது வருவீர்கள்?" என்று கேட்கிறாள் வரவேற்பாளினி.

"நிச்சயம் மீண்டும் வருவேன்" என்றவாறே "இது நாள் வரை எனக்குப் பலவகையிலும் சுற்றுலாத் தகவல்களையும் தந்ததோடு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்" என்று விடைபெறுகின்றேன்.

என் கம்போடியப் பயணத்தில் முதல் நாள் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்ததில் இருந்து தொடர்ந்த உலாத்தலில் என்னோடு பயணித்த வாகனச் சாரதி/உரிமையாளர் Keo Yan எனக்காகக் காத்து நிற்கின்றார். காரில் பயண மூட்டையை ஏற்றி விட்டு முன் இருக்கையில் அமர்கின்றேன். விமான நிலையம் போகும் பாதை ஏனைய நாடுகளின் விமான நிலையப் போக்குவரத்துப் பாதை போல அவ்வளவு நெரிசல் இல்லை. சீக்கிரமாகவே விமான நிலையத்தை வந்தடைகின்றோம். என்னை வழியனுப்பத் தயாராக இருந்த சாரதி Keo Yan என் இருகைகளையும் இறுகப் பற்றிக் கொள்கின்றார். "உங்களைப் போன்ற நண்பரை நான் சந்தித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி" என்று நெகிழ்கின்றார் அவர். "உங்களை நான் என்றும் மறவேன், மீண்டும் வருவேன், தொலைபேசியிலும் பேசுகின்றேன், உங்களுடைய எல்லா உதவிக்கும் நன்றி" என்று அவரின் கைகளை இறுகப் பற்றியவாறே சொல்லிப் பிரியாமல் பிரிந்தேன். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும்.என்னுடைய இந்தக் கம்போடியப் பயணத்தில் இவ்வளவு உரிமையோடு நிறைய உதவிகளையும் கொடுத்து, எதிர்பார்த்ததற்கும் மேலாகச் சிறப்பான சுற்றுலாவாக அமைய‌ வைத்தவர்கள் என் ஹோட்டல்காரர்களும், சுற்றுலா வழிகாட்டியும், இந்தக் சாரதியும். மீண்டும் அவர்களை நோக்கி இன்னொரு முறை மனதார நன்றி சொல்லிக் கொள்கின்றேன். உண்மையிலேயே எதிர்பாராதவிதமாக அமைந்த இந்தக் கம்போடியப் பயணத்தில் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்புகளின் தொடர்ச்சியாக அமைந்த நிகழ்வுகள் போல இந்த உலாத்தல் அமைந்து விட்டது.

சியாம் ரீப் விமான நிலையத்தில் இருக்கும் புத்தகக் கடைக்குள் நுளைந்து கம்போடியாவின் இருண்ட காலத்து நூல்களை மேய்ந்தேன். மண்டை ஓட்டுக் குவியலும், சித்திரவதை முகாம்களின் கொடூரப் புகைப்படங்களும் மனதை ஏதோ செய்தன.

சிங்கப்பூர் செல்லத் தயாராக வந்து நிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இல் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். சிங்கப்பூரில் இருந்து மலாக்கா செல்லும் என் அடுத்த உலாத்தலுக்கான தயார்படுத்தலாக மலாக்கா பயண வழிகாட்டியை எடுத்து பிரிக்கின்றேன். கம்போடியாவிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டுப் பறக்கிறது மனம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கடந்த கம்போடிய உலாத்தல்கள் வெறுமனே பயண அனுபவங்களைக் கடந்து தென்னாசியாவில் நிலைபெற்று விளங்கிய இந்தியத் தொன்மங்களைத் தேடிய வரலாற்று பகிர்வாகவும் அமைய வேண்டும் என்று நான் நினைத்ததால் உங்களில் சிலருக்கு அது திகட்டியிருக்கலாம். கம்போடியாவில் இந்திய வரலாற்றுச் சுவடுகளைப் படங்களோடும், செய்திகளோடு முழுமையான ஆவணப்படுத்தலாகத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமே என்னுடைய இந்த முயற்சிக்குக் காரணம். உண்மையைச் சொலப் போனால் என் கம்போடியப் பயணத்தின் நோக்கமும் அதுதான். இங்கே நான் சொல்லிய ஆலயங்களைத் தவிரவும் விடுபட்டவை ஏராளம். அவை பற்றி இன்னொரு சமயம் கம்போடியப் பயணம் வாய்க்கும் போது தொடரலாம் என்று நினைக்கின்றேன்.



எனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் "வடலி" வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே. இந்தத் தொடரில் பின்னூட்டம் வாயிலாகத் தமது கருத்தை அளித்தோரின் தேர்ந்தெடுத்த பின்னூட்டங்களும் அச்சில் வர இருக்கும் கம்போடிய பயண நூலில் வர இருக்கின்றது.

இது நாள் வரை என் உலாத்தலில் கூடவே பயணித்து அவ்வப்போது கருத்திட்டவர்களுக்கும், கருத்திடாவிட்டாலும் வாசித்துக் கொண்டே இருந்தவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.

மீண்டும் சந்திப்போம்
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா

கம்போடிய உலாத்தலில் வழித்துணையாய் வந்தவர்களில் சிலர்
இடமிருந்து வலம் வாகனச் சாரதி Keo Yan மற்றும் சுற்றுலா வழிகாட்டி Sib Chnong

அங்கோரியானா ஹோட்டல் வரவேற்பாளியும், வரவேற்பாளனும்

ருக் ருக் வண்டிக்காரர்

கம்போடிய உலாத்தலில் உசாத்துணையாய் இருந்தவை

1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003)
4. கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்
5. Ancient Angkor by Michael Freeman & Claude Jacques
5. விக்கிபீடியா
6. Asianinfo.org

13 comments:

சந்தனமுல்லை said...

கானாஸ்..நாங்களும் இல்ல உங்க கூடவே கம்போடியா பார்த்த மாதிரி இருந்துது..:-) நல்ல அரிய தகவல்கள்...ப்டங்கள்..இந்தப் பதிவிலும் படங்கள் நல்லயிருக்கு..சிலையின் மூக்கும் உங்கள் மூக்கும் நேராக இருப்பதுபோல்..:-)))

சந்தனமுல்லை said...

//
எனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் "வடலி" வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே.//

வாழ்த்துகள் கானாஸ்! :-) மகிழ்ச்சி!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;))

அருமையான பயண தொகுப்பு தந்தமைக்கு என்னோட பணிவான நன்றிகள் ;)

pudugaithendral said...

எனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் "வடலி" வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே.//

வாழ்த்துகள் நண்பரே,
மிக்க மகிழ்ச்சி

Anonymous said...

//பணப்பொதியின் //

பயந்திட்டேன் கானாஸ்

கானா பிரபா said...

//சந்தனமுல்லை said...
கானாஸ்..நாங்களும் இல்ல உங்க கூடவே கம்போடியா பார்த்த மாதிரி இருந்துது..:-) //


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை

கானா பிரபா said...

//கோபிநாத் said...
வாழ்த்துக்கள் தல ;))

அருமையான பயண தொகுப்பு தந்தமைக்கு என்னோட பணிவான நன்றிகள் ;)//


தொடர்ந்து வாசித்துக் கருத்திடுவதற்கு நன்றி தல‌

ramachandranusha(உஷா) said...

வாழ்த்துக்கள் பிரபா.

ஒரு சிறிய வேண்டுகோள். நான் உங்களுக்கு மெயில் அடித்துக் கேட்கலாம் என்று இருந்தேன். முக்கியமாய் பார்க்க வேண்டிய இடங்கள், ஆகும் செலவு, தேவையான நாட்கள்,
போக்குவரத்து வண்டி விவரங்கள், விடுதி இடங்கள் செலவுகள் போன்றவைகளை சார்ட் மாதிரி
போட்டு தந்தால் செளகரியமாய் இருக்கும். இவைகளை புத்தகத்தின் கடைசியில் இணைத்தால்
கம்போடியா செல்ல விரும்புபவர்கள் குறிப்பு எடுத்துக் கொள்ள சுலபமாய் இருக்காது?

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்

தூய்ஸ்

திருத்தீட்டேன், பணத்தில தான் குறியா இருக்கிறியள் கிகிகி

கானா பிரபா said...

வணக்கம் உஷாக்கா

உண்மையில் உங்கள் வேண்டுகோள் எதிர்வரும் காலத்தில் இங்கே செல்பவர்களுக்கு நிச்சயம் பயன் கொடுக்கும் என்பதால் புத்தகத்தில் இதனைச் சேர்த்துவிடுகின்றேன். மிக்க நன்றி

Anonymous said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
http://mahawebsite.blogspot.com/2009/03/blog-post_17.html

Raju said...

சூப்பர் பிரபா அண்ணே..

david santos said...

Really beautiful posting!!!
Nice picturs and pretty colours. Happy day!!!