Social Icons

Pages

Tuesday, February 17, 2009

கம்போடியாவில் பார்க்கவேண்டிய இன்னுஞ் சில


இந்த இடத்துக்குப் போகும் போது நீங்கள் தனியாகப் போகக் கூடாது என்று என்னை எச்சரித்து, வாகனச் சாரதியை நோக்கி இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தாள் நான் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பாளினி. நாங்கள் சென்ற இடம் West Baray என்ற சமுத்திரத்தின் நடுவே இருக்கும் சிறு தீவான West Mebon.
இது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் பிரபலம் பெற்று விளங்கிய தீவாகும். ஒரு குறுகிய படகுப் பயணத்துடன் West Mebon தீவை அடைகின்றோம். மிகவும் பின் தங்கிய வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் வாழும் பிரதேசம் என்பதை அங்கே இருக்கும் மக்களின் தோற்றத்தை வைத்தே எடை போட முடிகினறது. அத்தோடு ஈக்களின் பரவல் அந்தப் பிரதேசத்தை விட்டு எப்படா நகர்வோம் என்று படுத்தியது.

Baray என்பதற்கு நீர்த்தேக்கம் என்று அர்த்தம் கொள்ளப்பட்டும், கம்போடியாவில் நான்கு பெரிய நீர்த்தேக்கத் திட்டங்கள் இவ்வாறு உள்ளன.

இந்தத் தீவில் முற்றாக அழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆலயங்களின் எச்சங்களைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். சூர்ய வர்மன் மற்றும் இரண்டாம் உதயாதித்த வர்மன் காலத்தில் இந்தப் பிரதேசத்தில் ஆலயங்கள் எழுப்பப்பட்டதை வரலாறு சொல்கின்றது.மேலே படத்தில் தூரத்தே தெரியும் தீவு

மேலே படத்தில் தீவில் குடியிருப்போர்


மேலே படங்களில் எஞ்சியிருக்கும் ஆலயத்தின் தோற்றம்
தீவில் இருக்கும் பெளத்த ஆலயம்




Angkor National Museum


நான் கம்போடியப் உலாத்தல் பதிவுகளில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் தவறாது செல்லவேண்டிவை அருங்காட்சியகங்கள். அந்தவகையில் அங்கோர் தேசிய அருங்காட்சியகமும் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறப்புக் கொண்டது. வெறுமனே கம்போடிய நாட்டின் அரும்பொருட்கள் மட்டுமன்றி, பல்லூடக வசதியோடு இந்தக் காட்சியகம் இருப்பது வெகு சிறப்பு. கம்போடியா செல்லத் திட்டமிடுவோர் முதலில் இந்த நூலகத்தில் இருந்தே தமது பயணத்தை ஆரம்பித்தால் தொடர்ந்து செல்ல இருக்கும் இடங்கள் குறித்த முழுமையான பார்வை கிடைக்கும். இந்த அருங்காட்சியகத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சியாம் ரீப்பில் இருக்கும் ஆலயங்களில் இருந்து எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் தெய்வங்கள் இன்ன பிற உருவச் சிலைகள் காணக் கிடைக்கின்றன. நுழைவுக் கட்டணமாக 12 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இவ் அருங்காட்சியகம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற http://www.angkornationalmuseum.com/

Royal Palace
மேலே படத்தில் அரண்மனை (Royal Palace)

கம்போடிய தற்போதைய மன்னரின் வாசஸ்தலம் சியாம் ரீப் நகரின் மையத்தில் இருக்கின்றது. சுழவும் ஐந்து நட்சத்திர விடுதிகளும், பூங்காவும் என்று இருக்கும் இந்தப் பகுதிக்கும் சாவகாசமாக வந்து போகலாம்.
மேலே உள்ள படங்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலில் காணப்பட்ட கம்போடிய பாரம்பரிய வாத்தியங்கள்

மேலே படங்கள் கம்போடியாவில் விளையும் பழவகைகள் வீதியோரக் கடையில்

Angkor Night Market

கம்போடியாவிற்குச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் ஊருக்குப் போகக்கூடாது, அத்தோடு கம்போடியாவில் தயாராகும் கைவினைப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்றால் மிகச் சிறந்த தேர்வு இந்த இரவுச் சந்தை. மிகவும் மலிவாக அதேநேரம் தரமுயர்ந்த கண்கவர் கைவினைப் பொருட்கள் கைப்பைகள், டிவிடிகள், நகைகள், புத்தகங்கள், சின்னதாகச் செய்த தெய்வ உருவச் சிலைகள், உடுபுடைவைகள், சால்வைகள், ஓவியங்கள், துணிவேலைப்பாடுகள், உணவுச் சாலைகள் என்று நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இங்கே இருக்கின்றன. மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்தக் கடைகளோடு, விதவிதமான களியாட்ட நிகழ்வுகளும் சந்தையின் உள்ளே நடக்கின்றது.
மாலை நேரத்தில் வந்து பொருட்களை ஆறுதலாகத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கி விட முடிகின்றது இங்கே.
மேலே படத்தில் சியாம் ரீப் நகரின் ஒரு மாலைப் பொழுது

8 comments:

எம்.எம்.அப்துல்லா said...

கானா அண்ணா, உங்க கூடவே நடந்து வந்த மாதிரி இருக்கு :)

சந்தனமுல்லை said...

படங்கள் அருமை கானாஸ்! பழவகைகள் பார்க்க நல்லாயிருந்தது! :-))

கோபிநாத் said...

;))
நீங்க என்ன வாங்கினிங்க தல ;)

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பர் தல...

கானா பிரபா said...

//எம்.எம்.அப்துல்லா said...

கானா அண்ணா, உங்க கூடவே நடந்து வந்த மாதிரி இருக்கு :)//

ரொம்ப நன்றி தம்பி ;)

//சந்தனமுல்லை said...

படங்கள் அருமை கானாஸ்! பழவகைகள் பார்க்க நல்லாயிருந்தது! :-))//

வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனமுல்லை

ரிஷி (கடைசி பக்கம்) said...

hello kaana,

r u in combodia now?

I'm in Ho Chi Minh

good collection. I found south indian temple in Vietnam too.

கானா பிரபா said...

கோபிநாத் said...
;))
நீங்க என்ன வாங்கினிங்க தல ;)//


த‌ல‌ எங்கிட்ட‌ கேட்காதீங்க‌ சொல்ல‌ மாட்டேன் ;)

வ‌ருகைக்கு ந‌ன்றி விக்கி ;)

//கடைசி பக்கம் said...
hello kaana,

r u in combodia now?//

வணக்கம் நண்பரே

‍நான் இப்போது கம்போடியாவில் இருந்து திரும்பிவிட்டேன். வியட்னாமுக்கு அடுத்த தடவை வரவேண்டும் என்று ஆசை.

J S Gnanasekar said...

உங்கள் பரிந்துரைப்படி, சியாம் ரீப் நகரை அடைந்தவுடன், ஹோட்டலுக்குச் செல்லும் முன், முதலில் அங்கோர் தேசிய அருங்காட்சியகத்திற்குத் தான் சென்றேன் -:)

- ஞானசேகர்