Social Icons

Pages

Thursday, January 15, 2009

நீர்த்தேக்கம் நடுவே East Mebon சிவன் கோயில்

Eastern Baray என்னும் பெரும் வாவியின் நடுவே குடி கொண்டிருப்பது East Mebon என்னுமோர் சிவனாலயம். இன்றோ நீர் வற்றிய திடலாகவே இந்த வாவி ஒப்புக்கு மட்டும் இருக்கிறது. யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டாம் ஜெயவர்மனின் காலத்திலேயே இவ்வாலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதாவது கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்று சொல்லப்படுகின்றது. மூன்று அடுக்குகள் கொண்டு ஐந்து கோபுரங்கள் தாங்கிய பிரமிட் வடிவை ஒத்த இவ்வாலயம் சிவனுகே உரித்தான மேரு மலையினைப் பிரதிபலிக்கும் வண்ணம் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஒரு காலத்தில் யசோதபுர என்னும் இராசதானிக்கே நீர்வழங்கும் ஆற்றல் கொண்டதாக இருந்த Eastern Baray 7.5 கி.மீ தூரமும் 1830 மீட்டர் அகலமும் கொண்டது. 55 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் வழங்கலை கொண்ட ஆற்றல் படைத்திருந்ததாம் இது. அத்தோடு "யசோதரதத்தக" (யசோதர நீர்த்தேக்கம்) என்றும் பெயர் வழங்கப்பட்டதாம். இந்தப் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் சமஸ்கிருத எழுத்துக்கள் "புனித கங்கையின் பாதுகாப்பின் பிரகாரம்" என்று சொல்லுகின்றன. எனவே இந்தியாவின் கங்கை நதியை ஒத்த வகையில் இது கருதப்பட்டிருக்கின்றது.

East Mebon ஆலயத்தினை முற்று முழுதான சிவனுக்குரிய ஆலயமாக அர்ப்பணித்து இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பை Pre Rup என்ற வகைக்குள் அடக்குகின்றார்கள். காரணம் முன்னர் நாம் பார்த்த Pre Rup ஆலயத்தை ஒத்த கட்டிட அமைப்பைக் கொண்டதாகவே இது சொல்லப்படுகின்றது. Pre Rup என்பதற்கு 'turning the body' என்று அர்த்தம் கொள்ளப்பட்டு பாரம்பரிய சடங்குகள் பிரகாரம் Pre Rup ஆலயத்தில் இறந்தவருக்கு ஈமைக்கிரிகைகள் செய்வதாக முன்னர் சொல்லியிருந்தேன். இவ்விரண்டு ஆலயங்களுமே சிவபக்தனான இரண்டாம் இராஜேந்திர வர்மனால் எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு.


யானைச் சின்னம் கண்டால் அது East Mebon (இரண்டாவது அடுக்கில் இருக்கிறது)

கோயிலின் உட்புறம் நீர்ப்பரப்பில் இருப்பதால் நில மட்டத்துக்கு மேல் நடைபாதையும் நடுவே நீர் தேங்க வசதியும்

ஐந்தாம் ஜெயவர்மன் தன்னுடைய ராஜதானியை அங்கோரில்(Angkor) இருந்து Koh Ker என்ற பகுதிக்கு கி.பி 928 இல் மாற்றிக் கொண்டான். பதினாறு வருஷங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜேந்திரவர்மன் மீண்டும் அங்கோரினை(Angkor) தனது இராஜதானியக்கி விட்டு Eastern Baray என்ற வாவிக்கு நடுவே எழுப்பினான் இந்த East Mebon ஆலயத்தைக் கட்டியெழுப்பினான். தன்னுடைய பெற்றோர்கள் சிவபெருமானைக் கெளரவிக்கும் முகமாக என்ற அர்த்தத்திலேயே இவ்வாலயத்தைக் கட்டியெழுப்பினான் என்று சொல்லப்படுகின்றது. கம்போடியக் கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில்

அத்தோடு கல்வெட்டுச் சாசனங்களின் பிரகாரம் அங்கோரில் (Angkor) இருந்து Koh Ker இற்கு மாற்றி ஸ்திரமற்ற அரசாட்சி முன்னர் நிலவிய நிலை இன்னும் தொடராது அங்கோரில் (Angkor) மீண்டும் நிலையான ஆட்சி தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவனின் அருளை வேண்டியும் இது எழுப்பப்பட்டதாகச் சான்று பகிர்கின்றன. மேலும் கல்வெட்டுக் குறிப்புக்களின் அடிப்படையில் இது கி.பி 947 இல் இவ்வாலயத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டாலும் கி.பி 952 இலேயே இது முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

கோயிலின் தரிசனம் முடிந்து வருகின்றேன். வழியில் வாவியினை ஊடறுத்துப் போகும் பயணப்பாதையின் இருமருங்கும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாய் உபயோகித்து தேவர்களும் அசுரர்களும் கடையும் பாற்கடல் காட்சியை நினைவாக்கி எழுந்திருக்கின்றன தலை களவு போன சிற்பங்கள் பென்னாம் பெரியதாய் நீண்ட தூரத்துக்கு.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புக்கள் கையேடு
Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

6 comments:

ஆயில்யன் said...

/மலைப்பாம்பை மத்தாய் உபயோகித்து தேவர்களும் அசுரர்களும் கடையும் பாற்கடல் காட்சியை நினைவாக்கி எழுந்திருக்கின்றன தலை களவு போன சிற்பங்கள் பென்னாம் பெரியதாய் நீண்ட தூரத்துக்கு//

வியக்க வைக்கிறது!

படங்களும் அது கூறும் செய்திகளும்!

கோபிநாத் said...

கடைசி படம் கலக்கல் ;)

Anonymous said...

அரிய படங்கள்....அறிய முயற்சி...அறிந்த மகிழ்ச்சியுடன்...!
!http://bodhivanam.blogspot.com/

G.Ragavan said...

அடேங்கப்பா... இருந்த கல்லெல்லாம் கொடஞ்சி கட்டீருக்காங்க போல. அதுலயும் அந்தப் பாம்பைக் கட்டி கடலைக் கடையிற சிற்பம்....அடடா....ஆனா மண்டைய ஒடைச்சிருக்காங்க. கலையக் கலையா பாக்க மாட்டாங்க போல.

இந்தப் படமெல்லாம் கொண்டாந்து காட்டுனதுக்கு ரொம்ப நன்றி பிரபா.

கானா பிரபா said...

மிக்க நன்றி ஆயில்யன்

தல கோபி, நன்றி

போதிவனம்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

//G.Ragavan said...
அடேங்கப்பா... இருந்த கல்லெல்லாம் கொடஞ்சி கட்டீருக்காங்க போல. //

ஆமா ராகவன், வியப்பாக இருக்கிறதல்லவா?

விஜயகுமார் said...

இந்த பலம்பெருமையான கோவில் எங்கு உள்ளது தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்