Social Icons

Pages

Wednesday, September 17, 2008

Angkor Thom கண்டேன்...!

Royal Palace அரண்மனை வளாகங்களை எல்லாம் கடந்து கொஞ்சத்தூரம் நடந்து போகின்றோம். மாபெரும் தலைகளைச் செதுக்கிப் பொருத்திய தலைகளைக் கொண்ட ஒரு பெரும் கட்டிட வளாகம் தென்படுகின்றது. அந்தத் தொகுதி தான் Angkor Thom என்ற பகுதியாகும். குறுகியகாலப் பயணத்தில் கம்போடியாவுக்கு வருபவர்கள் Angkor Vat இற்கு அடுத்து பார்க்கவேண்டிய, தவிர்க்க முடியாத இடம் இந்த Angkor Thom ஆகும்.

இந்த Angkor Thom பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மனின் தலைப்பட்டினமாக இருந்துள்ளது. 9 கிலோ மீட்டர் சுற்றளவில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. Angkor Thom பகுதியின் மத்தியில் Bayon ஆலயமும் வடக்கே Victory Square எனப்படும் பகுதியும் இருக்கின்றது. இந்த நகரம் பதினேழாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆலயத்தின் உள் தோற்றம்

இந்தப் Angkor Thom பகுதிக்குள்ளே அமைந்திருக்கும் ஆலயமே Bayon என்ற ஆலயமாகும்.ஒரு பெளத்தமத ஆலயமாக விளங்கும் Bayon பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுப்பப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பும் Bayon என்றே தொல்லியல் வல்லுனர்களால் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. கம்போடிய Khmer வடிவ சித்திரக் கட்டிட வேலைப்பாடுகளின் உச்சபச்ச அழகுணர்ச்சியை இவ்வாலயம் காட்டி நின்ற்கின்றது.




37 கோபுரங்களில் நான்முக வடிவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏழாம் ஜெயவர்மனின் தந்தை லோகேஸ்வரா, மஹாஜன பெளத்தத்தின் வழிகாட்டி போதிசத்துவர், அல்லது புத்தர் மற்றும் ஏழாம் ஜெயவர்மனின் கலப்பு உருவங்களாக இம்முகங்கள் இருக்கலாமென்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஏழாம் ஜெயவர்மனின் ஆட்சிப் பீடத்தின் மிகமுக்கியமான ஆலயமாக இது திகழ்வதால் அவன் மிகுந்த சிரத்தையோடு இதை எழுப்பியிருக்கின்றான் என்பது கட்டிட அமைப்பில் இருந்து புலனாகின்றது.

இந்த Bayon ஆலயத்தின் வெளிப்புற மதில்கள் சூழ மேற்புறத்தில் பெரும் முகவடிவங்கள் தாங்கிய உருவங்கள் அமைத்திருப்பது இவ்வாலயத்துக்கே இருக்கும் சிறப்பு. தெற்குப்பகுதியிலே Khmer என்ற கம்போடியர்களுக்கும் சியாம் என்ற தாய்லாந்தியர்களுக்கும் நிகழ்ந்த கடற்சண்டை ஒன்றை நினைவுபடுத்தும் காட்சி வேலைப்பாடுகள் பொறிக்கப்படிருக்கின்றன. இது கி.பி 1117 இல் சியாம் மன்னர்களின் படையெட்டுப்பை நினைவுபடுத்துகின்றதா அல்லது அதன் பின்னர் Khmer என்ற கம்போடிய மன்னர்களின் வெற்றியை நினைவுபடுத்துகின்றதா என்பதிலும் தெளிவு இல்லை.

மேலே: அப்சரா தேவதைகளின் ஆட்டம்




இன்னும் பல நடைமுறை வாழ்வை வெளிப்படுத்தும் சித்திரச் செதுக்கு வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக வியாபாரம் நடைபெறும் சந்தைப்பகுதி, கோழிச்சண்டை, சதுரங்க விளையாட்டுப் போட்டி, பிள்ளை பிறக்கும் காட்சி என்று பலவற்றினை சித்திரவேலைப்பாடுகளாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். கூடவே இன்னும் சில மதிற்புறங்கள் முழுமையாக முடிக்கப்படாது இருப்பது ஏழாம் ஜெயவர்மனின் இறப்பைத் தொடர்ந்து இப்பணி முழுமை பெறாததைக் காட்டி நிற்கின்றது. இன்னும் சில உட்புறப்பகுதிகள் பின்னாளில் வந்த இந்து அரசன் எட்டாம் ஜெயவர்மனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.


கோயிலினுள்ளே உள்ள புடைப்புச் சிற்பங்கள், முதற் படத்தில் இருப்பது யாழி
ஆலயத்தின் உட்புறம் அரச உடையுடுத்திய கம்போடியர்கள், அவர்களோடு நின்று படம் எடுப்பதற்கு ஒரு டொலர் வீதம் சம்பாதிக்கின்றார்கள்


இந்த Bayonஆலயம் காடு சூழ அமைந்த பிரதேசத்தில் இருப்பதால் எப்போதும் இருள் சூழ்ந்த பிரமையை உண்டு பண்ணுகின்றது. காலவோட்டத்தில் சிதைந்து போன கட்டிடப்பகுதிகளில் இன்னும் சில திருத்த வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

Angkot Thom பார்த்து முடிக்கவும் இருள் மெல்லக் கவ்வும் நேரம் வருகின்றது. ருக் ருக் வண்டில் அமர்ந்து நானும், சுற்றுலா வழிகாட்டியும் மீண்டும் எமது இருப்பிடம் நோக்கித் திரும்புகின்றோம். வரும் வழியில் அங்கோர் வாட் ஐக் கடக்கின்றது எமது வண்டி. அப்போது சாயங்காலச் சூரியன் முகம் கவிழும் போது அங்கோர் வாட் இன் அழகை ரசிப்பதற்க்கா ஒரு சுற்றுலாக் கூட்டம் அங்கோர் வாட்டினை நோக்கிப் படையெடுக்கின்றனர். பொதுவாகவே அதிகாலைச் சூரியோதத்தின் போதும், மாலை சூரியன் பொழுது சாயும் போதும் அங்கோர் வாட் இன் அழகுணர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதற்காக இப்படியான வருகை இருக்கும். ருக் ருக்கை ஒரமாக நிறுத்தி விட்டு நாமும் கொஞ்ச நேரம் அங்கோர் வாட்டின் முன்னேயுள்ள வாவியோரம் நின்று அதன் அழகை மீண்டும் பார்க்கின்றோம். வெட்கத்திரையால் மறைப்பது போல சூரியன் மெல்ல நகர்ந்து இரவுப் போர்வையைப் போர்த்துகின்றான்.

பதிவின் உசாத்துணை:
* கம்போடிய சுற்றுலாக் கையேடு
* Ancient Angkor By Michael Freeman & Claude Jacques

16 comments:

ஆயில்யன் said...

எல்லா போட்டோக்களும் அருமை!

ஏதோ ஒரு சொல்ல முடியாத அல்லது கண்டுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு பந்தம் இருக்கும் போல!??

சந்தனமுல்லை said...

படங்கள் அழகு! நேரில் பார்த்த் மாதிரி இருக்கு...

ஆயில்யன் said...

நாம ஏன் நம் முன்னோர்கள் தொடர்புகளினை புதுப்பிக்க கூடாது????

(நான் ஏதோ சில பல போட்டோக்களினை பார்த்ததால் மட்டும் கேள்வி எழுப்புவதாக தவறாக நினைக்கவேண்டாம்!)

கோபிநாத் said...

அழகான படங்களுடன் அமைதியான பயணம் தல ;)

குடுகுடுப்பை said...

அருமைங்க, கலக்குறீங்க கானா பிரபு, உங்கள் பதிவுகள் ஈழத்தில் ஒரு நாள் காட்சியாகும் என நம்புவோம்

Anonymous said...

அழகான படங்கள்! தெளிவான விளக்கம்!! அருமை!!!. நானும் பயணிப்பது போலவே ஒரு உணர்வை தருகிறது உங்கள் எழுத்து நடை.

முரளிகண்ணன் said...

யாழி யை மிகவும் ரசித்தேன்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சுற்றுலா என்பது புத்துண்ர்ச்சி அளிக்கும் ஒன்று , அதுவும் இது போன்ற இடங்கள் கண்டிப்பாக....

கானா பிரபா said...

// ஆயில்யன் said...
ஏதோ ஒரு சொல்ல முடியாத அல்லது கண்டுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு பந்தம் இருக்கும் போல!??//

ம் இருக்கும் இருக்கும் ;)

//ஆயில்யன் said...
நாம ஏன் நம் முன்னோர்கள் தொடர்புகளினை புதுப்பிக்க கூடாது????//

இது நீங்க பேசல உங்க வயசு பேச வைக்குது ;-)

கானா பிரபா said...

// சந்தனமுல்லை said...
படங்கள் அழகு! நேரில் பார்த்த் மாதிரி இருக்கு...//

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

//கோபிநாத் said...
அழகான படங்களுடன் அமைதியான பயணம் தல ;)//

நன்றி தல

கானா பிரபா said...

//குடுகுடுப்பை said...
அருமைங்க, கலக்குறீங்க கானா பிரபு, உங்கள் பதிவுகள் ஈழத்தில் ஒரு நாள் காட்சியாகும் என நம்புவோம்//

வாசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

கானா பிரபா said...

//மது... said...
அழகான படங்கள்! தெளிவான விளக்கம்!! அருமை!!!. நானும் பயணிப்பது போலவே ஒரு உணர்வை தருகிறது உங்கள் எழுத்து நடை.//

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மது

கானா பிரபா said...

//முரளிகண்ணன் said...
யாழி யை மிகவும் ரசித்தேன்//

வருகைக்கு நன்றி முரளி


//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
சுற்றுலா என்பது புத்துண்ர்ச்சி அளிக்கும் ஒன்று , அதுவும் இது போன்ற இடங்கள் கண்டிப்பாக....//

உண்மைதான் நண்பா

ARV Loshan said...

இன்று தான் இந்தத் தளம் வந்தேன்.. (நீண்ட காலத்துக்குப் பிறகு)
நீங்களாவது தாய்லாந்துக்கு நல்ல விஷயத்துக்குப் போய் இருப்பது குறித்து மகிழ்ச்சி..
பாவிபயல் ஜெயவர்மன் அப்பவே எங்களுக்கும் ஒரு தனி நாட்டை அங்கையாவது உருவாகி இருக்கலாம் ;)

கானா பிரபா said...

வாங்கோ லோஷன்

தாய்லாந்து மட்டுமில்லை எங்கையும் நல்லது கெட்டது இருக்கு தானே ;)

ஜெயவர்மனை ஏன் திட்டுறீங்கள் இருக்கும் இடத்திலேயே இன்னும் பலமா இருந்திருக்கலாம்.

சுபானு said...

Nice Photos.. Wonderful anna.. :)