Social Icons

Pages

Wednesday, March 17, 2010

சிங்கையில் இருந்து சூடா ஒரு உப்புமா பார்சல்

14 March 2010
ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் காலடி வைத்த நேரம் சரியில்லை போல, அன்று தொடங்கிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை

தம்பி டொன்லீ ஹோட்டலுக்கு வந்து அழைத்துக் கொண்டு செந்தோசா தீவுக்குக் கொண்டு போனார்.

செந்தோசாவில் கோவி கண்ணன், குருஜி ஜெகதீசன், பித்தன் ராம், ஸ்வாமி ஓம்கார், ஆ.ஞானசேகரன் ஆகியோர் சுற்றி கொண்டிருந்தார்கள்.

கடற்கரை ஓரமாக ஒதுங்கி.... அட நில்லுங்கப்பா, ஒரு மினி பதிவர் சந்திப்பை நடத்தினோம்.
பேசப்பட்ட தலைப்புக்கள்: கேபிள் சங்கரின் புதுப்படம், சினேகா, கையைப்பிடி காலைப்பிடி ரஞ்சிதா, சமாதி நித்தியானந்தா (எங்கை போனாலும் வந்துடுறார்பா), வலையுலகம், டி.ஆர்.பி, தமிழ்மணப்புறக்கணிப்பும் மீள் வருகையும், விண்ணைத் தாண்டி வருவாயா, சோளம், சிப்ஸ், கோக், தண்ணீர் போத்தல், மாமா கேபிள் இதெல்லாம் பேசினோம்

எல்லோருமாக கடற்கரை மணலில் உட்கார்ந்து மினி சந்திப்பை முடித்து, லேசர் ஷோ பார்க்கப் போனோம். லேசர் ஷோ அட்டகாசமாக‌ இருக்கிறது.

பித்தன் ராமுடன் நல்லுணர்வு உடன்படிக்கை, பின்னே கேபிள்

குடைக்கடை சென்றோம், குழலி, முகவை ராம், ஜோசப் பால்ராஜ் இன்ன பிற சீனியர்களுடன் விட்ட இடத்தில் இருந்து சந்திப்பு உரையாடல்கள்
குடைக்கடையில் இட்லி, சாம்பார், கொத்துப் பரோட்டா மிச்சம் XXXXXXXXXXXXசொல்ல முடியாது தணிக்கை ;‍)

இடமிருந்து வலம்: டொன் லீ,ஜெகதீசன், கோவி அண்ணன், நான், கேபிள் சங்கர், பித்தன் ராம், ஓம்கார் சுவாமிகள்

15 March 2010

படுக்கைக்குப் போன நேரம் 12.30 விழித்த நேரம் அதிகாலை 4, சிங்கை நேரத்தில் தூங்கி அவுசி நேரத்தில் விழிப்பு :(

சிங்கைக்குப் பல தடவை வந்தாலும் ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது இதுதான் முதல் தடவை. வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் சின்னப்பிள்ளையை இப்படியா பயமுறுத்துறது. லிப்ட் இயங்கும் நேரம் எல்லாம் பொறித்திருக்கிறார்கள் #புதுமை

வேலை முடிந்து 8.30 வாக்கில் முஸ்தபா கடைவீதிப்பக்கம் நடை, பாக்யதேவதா, ஈ பட்டணத்தில் பூதம், Happy Days, டிவிடிக்கள் வாங்கினேன். அலுவலகத்தில் இருந்த மலையாளப்பெண்ணிடம் இதைப் பற்றிப் பீற்றினால் "நாங்கல்லாம் டிவிடி வாங்கிப் பார்க்கமாட்டோம்ல" என்று ஒரு குண்டு போட்டாள்.

Banana Leaf கடையில் மீன் பிரியாணியாம், புதுசா இருக்கே என்று ஓடர் கொடுத்து வாயில் வைத்தால் உப்புமில்லை மண்ணுமில்லை, #உப்பில்லா பண்டம்

விண்ணைத் தாண்டி வருவாயா இன்னும் சிங்கை தியேட்டர்களில், என்னை மாதிரி யுத்துகள் நிறைய இங்கை இருக்கினம் போல‌

ஹோட்டலுக்கு வந்து நெட் பாவிப்போம் என்று கேட்டால் மணிக்கு 40 டொலராம், போடாங்


அட சண்டை இல்லைப்பா, நம்புங்கப்பா

16 Mar 2010

முதல் நாள் பாடமாக்கிச் சொன்ன அலுவலக முகவரி அடுத்த நாள் தானாகவே வந்து விழுந்தது. டாக்சிக்காரனிடம் "டெக்னோ பார்க் சாய் சீ ரோட்" என்றேன். #7.45 AM

கோமள விலாசில் சூடா ஒரு கப் தேனீரும், வடையும். எப்படா சாப்பிட்டு முடிப்பான் என்று காத்திருந்த‌ எடுபிடி சீனன் வந்து தட்டைத் தூக்கிக் கொண்டு பறக்கிறான்.

டொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.

இரவு 9 மணிக்கு மேல் டாக்சி பிடிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காலை 7 மணி தொடங்கி இப்ப வரைக்கும் வேலை செய்றோம்லா வெரி டயர்ட்லா என்றான் டாக்சிக்காரன் #10.15 PM

வசந்தம் டிவியில் " நிஜங்கள்" என்ற அருமையான தொலைக்காட்சி நாடகம் போகிறது. இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்த எனக்கு இந்த நாடகம் சுகமான ஒரு தூக்கத்தை வருவித்ததற்கு நன்றி.

பி.கு: சின்னப்பாண்டியின் தீராத ஆசை ஒன்று நிறைவேறாமல் போனது. அது, நிஜமா நல்லவன் ஐபோனுடன் இருக்கும் போஸ் ஐ படம் எடுத்து அனுப்பச் சொன்னார். நிஜம்ஸ் பதிவர் சந்திப்புக்களை வெளி நடப்புச் செய்ததால் அது நிறைவேறாமல் போனது.

"டொன் லீ! இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்"


படங்கள் நன்றி: நண்பர் ஆ.ஞானசேகரன்

30 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

பிரபா, உங்கள் இனிய தமிழும் நட்பும் இன்னும் இனிக்கிறது. சந்திப்பை மீண்டும் நினைவூட்டும் பதிவு..

Anonymous said...

ஆஹா , சிங்கைல உலகளாவிய பதிவர் சந்திப்பு நடந்திருக்கு.

ஆயில்யன் said...

பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நித்தி மாதிரி எல்லா இடத்திலயும் சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களே 1ம் கலவரபூமியாகிடாதுல்ல?! #ஆர்வமுடன்

ஆயில்யன் said...

//அலுவலகத்தில் இருந்த மலையாளப்பெண்ணிடம் இதைப் பற்றிப் பீற்றினால் //


இதெல்லாம் 2மச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

உம்மை யாரப்பா தமிழ்ப்படம் பற்றி மலையாள பெண்ணிடம் பேச சொன்னது! - ஆர்வக்கோளாறுதானே! #பூரிப்பு

ஆயில்யன் said...

//விண்ணைத் தாண்டி வருவாயா இன்னும் சிங்கை தியேட்டர்களில், என்னை மாதிரி யுத்துகள் நிறைய இங்கை இருக்கினம் போல‌//

#பெருமிதம்?????????? எனக்கு மட்டுமில்ல படிக்கிற பலருக்கும் இது ஒரு #டெரரிசம்

ஆயில்யன் said...

//சின்னப்பாண்டியின் தீராத ஆசை ஒன்று நிறைவேறாமல் போனது./

:(((

ஆயில்யன் said...

//அட சண்டை இல்லைப்பா, நம்புங்கப்பா//

பாஸ் கையில இருக்கிற குடையால அடிக்கப்போற மாதிரியே பாக்குறீங்களே ஏன் பாஸ்? ஏனிந்த கொலவெறி ஒரு வேளை அவுரு உங்ககிட்ட ஜெஸ்ஸியெல்லாம் ஒரு ஃபிகரான்னு கா.து’டாரா? :)))))))

ஆயில்யன் said...

//டொன் லீ! இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்".//

டொன்லீ:- அட விடுங்க அண்ணே அதை விட பெரிய தண்டனை என்ன வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

ஆயில்யன் said...

//நிஜம்ஸ் பதிவர் சந்திப்புக்களை வெளி நடப்புச் செய்ததால் அது நிறைவேறாமல் போனது.//

பயபுள்ள சிங்கையில அதெல்லாம் வேற செஞ்சுக்கிட்டிருக்கா????

Thamiz Priyan said...

சிங்கையில் போய் உப்புமாவா? என்ன பாஸ் நீங்க... ’சைனீஸ்’ புட் ஏதுமில்லையா?... # ஹிஹிஹியிஸம்

Thamiz Priyan said...

பாஸ்.. இந்த வயசிலயும் இளமை மிடுக்கோட இருக்கீங்களே? எனி ஸ்பெஷல்???.. # கவுண்டர் டெரரிஸம்

Thamiz Priyan said...

பாக்யதேவதா... சுமார் தான் பாஸ் கவரலை.. வைரம் பார்த்தாச்சா?.. அட்வையிஸம்.

SurveySan said...

//டொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.//

என்ன கொடுமைங்க இது? 2003ல் கடைசியா சாப்பிட்டது. அப்பெல்லாம் வாழையிலை போட்டு, அம்சமா கோழிக்கறிக் குழம்பும் மீன் வறுவலும், சுடச்சுட போடுவாங்களே?

நல்ல மனசு வேணுங்க அதுக்கெல்லாம் ;)

சி தயாளன் said...

///டொன் லீ! இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்".//

டொன்லீ:- அட விடுங்க அண்ணே அதை விட பெரிய தண்டனை என்ன வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

//

சின்னப்பாண்டி வம்பு பண்றார்...இது சரியாகப் படவில்லை...கவனிக்கவும் :-))

சி தயாளன் said...

:-)
வேலை வேலை என்று 2 நாளா புலம்பினியள்...உங்களை கொத்து பரோட்டா போட்டுட்டாங்கள் எண்டு பாத்தால் நீங்கள் உப்புமா போட்டுருக்கியள்..:-)

சி தயாளன் said...

/டொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.//

ம்...விதி வலியது. நானே அங்க சாப்பிட்டு ஒரு 3 வருடம் இருக்கும். லிட்டில் இந்தியாவில் எது நல்ல கடை என்று எனக்கே தெரியாது...:-))

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

ஆயில்யன் said...

//Bloggers, Internet users and their intelligence//

அது எப்பிடி பெரியபாண்டியை பார்த்து இப்பூடி ஒரு கேள்வி?? #ச்சும்மாஜோக்கு

@ Mehar வாழ்த்துக்கள்!
ஆராய்ச்சியின் முடிவுகளை பின்னர் பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

கோபிநாத் said...

ஆகா..நீங்க எப்போ அங்க...ம்ஹூம் எப்போ எங்க எப்படி இருப்பிங்கன்னு கண்டுபிடிக்கவே முடியலை தல...;))

ஆமா அது என்ன ரோஸ் கலர் டீ ஷாட்டு எனி திங் ஸ்பெசல்!!?? ;)

தமிழ் மதுரம் said...

ஆஹா... மெல்பேண் பதிவர் சந்திப்புக்கு வராமல் சிங்கையிலை போய்க் கலக்குறீங்கள். இனி சிங்கப்பூரிலை தான் இருப்பீங்களோ? ஆஸிக்கு வரமாட்டீங்களோ?

கானா பிரபா said...

ஸ்வாமி ஓம்கார் said...
பிரபா, உங்கள் இனிய தமிழும் நட்பும் இன்னும் இனிக்கிறது. சந்திப்பை மீண்டும் நினைவூட்டும் பதிவு..//

வணக்கம் ஐயா

உங்களைப் போன்ற நல்ல உள்ளத்தைக் கண்டது எனக்கும் பெரு மகிழ்வாக இருந்தது. இன்னொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.


சின்ன அம்மிணி said...
ஆஹா , சிங்கைல உலகளாவிய பதிவர் சந்திப்பு நடந்திருக்கு.
//

சின்ன அம்மிணி

சிங்கை உலகப்பதிவர் வந்து போகும் இடமாச்சே ;)

கானா பிரபா said...

யோவ் சின்னபாண்டி

அதெல்லாம் மலையாளப்படம்யா, நிஜம்ஸ் இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல பாஸ்

கானா பிரபா said...

தமிழ் பிரியன் said...

சிங்கையில் போய் உப்புமாவா? என்ன பாஸ் நீங்க... ’சைனீஸ்’ புட் ஏதுமில்லையா.//

தாடிபிரியன் சாரி தமிழ்ப்பிரியன்

எங்கே போனாலும் நாம காரம் கலக்காத சமையலை வாயில் வைக்கமாட்டோம்ல‌
பாக்யதேவதா, மொட்டை பாஸ் இசைக்காக வாங்கினது. ஒரு நாள் வரும் திரு‍‍ நாள் உம்மோட டெரரிசத்துக்கு ஆப்பு வைக்கிறேன்டி

கானா பிரபா said...

சர்வேஷ்,

அடுத்த வாட்டி போய் கை நனைச்சுப் பாருங்க அப்ப தெரியும் நல்ல மனசு ;)

டொன்லீ

கொத்துப்பரோட்டாவை விட உப்புமா இன்னும் அளவில் சின்ன சைஸ் எல்லோ ;)

@ Mehar

நன்றி தொடர்பு கொள்கிறேன்

கானா பிரபா said...

கோபிநாத் said...


ஆமா அது என்ன ரோஸ் கலர் டீ ஷாட்டு எனி திங் ஸ்பெசல்!!?? ;)//

நான் ராமராஜன் fan இந்த ஆன்சர் ஓகேவா ;)


கமல்

சிங்கை தற்காலிகம் தான்

யோ வொய்ஸ் (யோகா) said...

///வசந்தம் டிவியில் " நிஜங்கள்" என்ற அருமையான தொலைக்காட்சி நாடகம் போகிறது///

நான் கூட உண்மையோ என நினைத்துட்டேன் அண்ணா.

சிங்கை பதிவர் சந்திப்பை அனுபவித்திருக்கிறீர்கள்

கானா பிரபா said...

வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி யோகா

Sakthi said...

pics ellam nalla irukku...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படங்களும் செய்திகளும் படக்கதை படித்ததுபோல
இருந்தது.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in