Social Icons

Pages

Friday, October 26, 2007

பெங்களூர் Kemp Fort இல் கண்ட சிவனாலயம்
கர்னாடக உலாத்தலை ஆரம்பித்து விட்டுப் பாட்டுப் போட ஓடிவிட்டார் என்று நினைப்பவர்களின் கருத்தை மாற்ற என் கர்னாடக உலாத்தல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றது. வேலைத்திட்டத்திற்காக பெங்களூர் அலுவலகம் வந்தாயிற்று. ஆனால் வேலை முடிந்த மாலை வேளைகளில் பொழுதைக் கழிக்க ஒரே வழி பெங்களூரின் உள்ளூர் அமைவிடங்களைப் பார்த்து முடித்துவிட வேண்டியது தான். அதுவும் அதிக தூரம் அற்ற இடங்களைத் தெரிவு செய்வோம் என்று நினைத்து உதவிக்கு எனக்காக நியமிக்கப்பட்ட வாகனம் ஓட்டும் நண்பரிடம் பேச்சும் கொடுத்தேன்.

அவர் பெயர் ஹனீப், வட நாட்டில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் பெங்களூருக்குப் பிழைப்புக்காக வந்தவராம். தமிழைச் சரளமாகப் பேசுகின்றார். அவ்வப்போது காரின் குறுக்கே ஹீரோ ஹொண்டாவை நுளைக்கும் ஐ.டி பசங்களையும், பொண்ணுகளையும் சம உரிமை கொடுத்து, இறக்கிய கார்க் கண்ணாடி இடுக்கால் எட்டிப் பார்த்துத் திட்டியவாறே, பெங்களூரில் இருக்கும் முக்கியமான பார்க்கவேண்டிய இடங்களைச் சொல்லிக் கொண்டே போகின்றார்.

அப்படி நாங்கள் முதலில் தேர்ந்தெடுத்தது பெங்களூர் விமான நிலையத்துக்குப் போகும் சாலையில் உள்ள Kemp Fort என்ற உடுபிடவை வணிக வளாகமும் அதனோடு ஒட்டியிருக்கும் சிவனாலயமும் ஆகும்.

Kemp Fort தன் பெயருக்கேற்றாற்போல் கோட்டை ஒன்றின் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு மாடி விற்பனை வளாகம். ஆடை ஆபரண இத்தியாதிகளுக்கு ஒரே கூரையின் கீழ் ஆண் பெண் இருபாலாருக்குமாக அமைக்கப்ப்ட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் இருக்கும் உடுப்பு விற்பனை நிலையத்துக்குச் சென்று, கவர்ந்திழுக்கும் நாலைந்து நல்ல சட்டைகளை எடுத்து விரித்தால் Made in India என்றிருக்கும். ஆனால் விலையோ நடிகர் ஜெயராம் வளர்க்கும் செல்லப்பிராணி விலை(அதாங்க ஆனை விலை)
டொலர் கணக்கில் கொட்டித் தீர்த்து, வயிறெரிந்து வாங்குவதை விட Kemp Fort இலேயே அள்ளிக் கொள்ளலாம் என்றால் என் ஆசையில் மண். அவுஸ்திரேலியாவில் விற்கும் விலைக்கு கிட்டும் அளவுக்கே Kemp Fort இல் இருக்கும் தரமான உடுபிடவைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. எல்லாம் பில் கேட்ஸ் ஆளுங்க செய்யும் வேலை. பின்னே, அமெரிக்கர்கள் அதிகளவில் வந்து போகும் ஸ்தலமாக பெங்களூர் மாறிவிட்டதால், இப்பொது எல்லாமே அங்கு கொள்ளை விலை தான். ஒரு சில உடுப்பு வகைகளை வாங்கி விட்டு, வெளியில் கார் அருகே நிற்கும் ஹனீபிடம் போகின்றேன்.
"பிரபா சார், வாங்க டெம்பிள் போகலாம் என்கிறார் ஹனீப். அவருக்குப் பின் நான் தொடர, Kemp Fort விற்பனைக் கூடத்தோடு பின் பக்கமாக அமைந்திருக்கின்றது சிவனாலயம் ஒன்று.
வாயிலில் விளங்கும் விநாயகப் பெருமான் சிலையும், உள்ளே நுளையும் போது காணும்
மிகப் பெரும் சிவபெருமானின் சிலையும் கண்டதும் தானாகவே கைகளைக் கூப்பித் தொழ வைக்கின்றன. அமைதியான கூட்டுப் பிரார்த்தனை ஒன்று அந்த இரவுப் பொழுதைத் தூசி தட்டிப் பெருக்குகின்றது. சில மணித்துளிகள் அந்த இறைலயத்தில் ஒன்றி விட்டு மெல்ல நகர்கின்றேன் அவ்விடத்தை விட்டு.

பெங்களூர் வந்தால் தவற விடக்கூடாத இடங்களில் இதுவுமொன்று.

இப்பதிவில் இருக்கும் முதற் புகைப்படம் மட்டும் Douglas Whitby ஆல் எடுக்கப்பட்டு இணையம் வழி பெறப்பட்டது. மற்றயவை என் சொந்தத் தயாரிப்புக்கள்.

15 comments:

கோபிநாத் said...

உலாத்தல் மீண்டும் ஆரம்பிச்சிட்டிங்களா...சூப்பர் ;)

விநாயகர், சிவன் சிலைகள் அழகு ;)

நெல்லைக் கிறுக்கன் said...

வணக்கம் தல,
Kemp Fort படங்கள் அருமை. போன வாரம் தான் பொயிட்டு வந்தேன். நீங்க அங்க இருக்குத வித விதமான சிவ லிங்கங்கள படம் எடுக்கலயா?

கானா பிரபா said...

//கோபிநாத் said...
உலாத்தல் மீண்டும் ஆரம்பிச்சிட்டிங்களா...சூப்பர் ;)

விநாயகர், சிவன் சிலைகள் அழகு ;)//

வாங்க தல

எல்லம் உங்க ஆசீர்வாதம் தான் ;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன?? பிரபா இலங்கையில் புத்த சிலைகளைப் பிரமாண்டமாக வைப்பது போல் இங்கே சிவன் பிள்ளையார் சிலை...இவற்றைப்பார்த்தால் எனக்கு ஏனோ பக்தி வருவதில்லை(என் நிலையைக் கூறினேன்)
மற்றது இந்தக் காகம்,குருவி இவற்றைத் கழிப்பிடமாகப் பாவிப்பதில்லையா??
பேலிற காகத்துக்கு சிலையென்ன ? சிவனென்ன?

கானா பிரபா said...

//நெல்லைக் கிறுக்கன் said...
வணக்கம் தல,
Kemp Fort படங்கள் அருமை. போன வாரம் தான் பொயிட்டு வந்தேன். நீங்க அங்க இருக்குத வித விதமான சிவ லிங்கங்கள படம் எடுக்கலயா?//

வாங்க தல

ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோம்?

நான் போனபோது விசேட நாளொன்றில் மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது எனவே அதிக படங்களை உள்ளே எடுக்கமுடியவில்லை.

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
என்ன?? பிரபா இலங்கையில் புத்த சிலைகளைப் பிரமாண்டமாக வைப்பது போல் இங்கே சிவன் பிள்ளையார் சிலை...இவற்றைப்பார்த்தால் எனக்கு ஏனோ பக்தி வருவதில்லை(என் நிலையைக் கூறினேன்)
மற்றது இந்தக் காகம்,குருவி இவற்றைத் கழிப்பிடமாகப் பாவிப்பதில்லையா??
பேலிற காகத்துக்கு சிலையென்ன ? சிவனென்ன?//

வணக்கம் யோகன் அண்ணா

உள்ளரங்கில் அமைத்திருக்கும் இவ்வாலயத்தில் கோபுரம் ஏதும் இல்லாமல் இவ்வகையில் இருக்கின்றது. இதைப் போன்ற பிரமாண்டங்களைக் கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் பார்க்கலாம்.

மாயா said...

படங்கள் அருமை

நெல்லைக் கிறுக்கன் said...

யோகன் அண்ணாச்சியோட கருத்து தான் என்னோட கருத்தும். இப்படி பெரிய சிலைகளைப் பாத்தா என்க்கும் ஏனோ பக்தி வருவதில்லை.

இந்தக் கலாச்சாரம் ஏனோ வட இந்தியத் தனமாக எனக்குத் தோனுது. அங்க நடக்குத பூசையும் வடக்கத்தி பூசை தான்.

பக்தி எல்லாம் தாண்டி அங்க வியாபார நெடி தான் ரொம்ப அடிக்குது...

கானா பிரபா said...

தல

நோ டென்ஷன்

வடநாட்டு அன்பர்கள் நிறுவிய கோயிலாக இருக்கலாம் இல்லையா?

கானா பிரபா said...

வருகைக்கு நன்றிகள் மாயா

வீ. எம் said...

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
இல்லையெனின் என் இந்த
பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

அன்புடன்
வீ எம்

செந்தில் நாதன் said...

Kemp Fort மூடப்பட்டு விட்டது

கானா பிரபா said...

செந்தில் நாதன்

உண்மையில் இந்த ஆலய்ம் மூடப்பட்டு விட்டதா? சன நெருக்கடியில் ஆலயமும் இடமாறி விட்டதோ :(

செந்தில் நாதன் said...

ஆலயம் மூடப்படவில்லை. Kemp Fort மூடப்பட்டு விட்டது.

கானா பிரபா said...

மேலதிக விளக்கத்துக்கு நன்றி செந்தில் நாதன்