தமிழில் புகைப்படக்கலை கூட்டு வலைப்பதிவு நடத்தும் போட்டிக்கு என்ர சார்பிலை நான் எடுத்த படங்களை அனுப்புறன் , பார்த்து ஏதாவது பண்ணுங்க சாமி ;-)
யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடிக் கோயிலடியில் வசிக்கும் நாய்களுக்கும் தமிழ் புரியும் போல?
ஹைதராபாத் Golconda கோட்டையில் ஓய்வெடுக்கும் நாய்
கடவுளைத் தேடித் தீப ஒளி
ஆலப்புழாப் படகுவீட்டுக்குள்ளிருந்து.....
படகுப் பயண ஏற்பாடுகளில் கடலோடி
கடற்கழியில் துணி துவைக்கும் நங்கை
நீராடும் காளைகள்
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அண்ணாச்சி ரெண்டு படம் தான் அலவ்ட்.. எந்த ரெண்டுங்கறதை நீங்களே சொல்லிடுங்க
//நிழற்படம் said...
அண்ணாச்சி ரெண்டு படம் தான் அலவ்ட்.. எந்த ரெண்டுங்கறதை நீங்களே சொல்லிடுங்க //
என்னக் கொடுமை சார் இது
எல்லாமே நல்லபடம் தானே?
சரி சரி,
படம் 2
ஹைதராபாத் திப்பு கோட்டையில் ஓய்வெடுக்கும் நாய்
படம் 4
ஆலப்புழாப் படகுவீட்டுக்குள்ளிருந்து.....
சரியா?
யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடிக் கோயிலடியில் மட்டுமில்லை அண்ணா யாழ்ப்பாணத்தில எல்லா இடத்திலயும் இப்படித்தான் . ..
Nice . .
படங்கள் அருமை. அந்த படகு படங்கள்தான் மிக அருமை. நாய் படம் இயற்கை என்ற தலைப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுமா?
படங்கள் எல்லாம் அருமை தல ;)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
// மாயா said...
யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடிக் கோயிலடியில் மட்டுமில்லை அண்ணா யாழ்ப்பாணத்தில எல்லா இடத்திலயும் இப்படித்தான் . ..
//
உண்மைதான் மாயா
யாழ்ப்பாணத்தாருக்கு குசும்பு சாஸ்தி ;-)
மனுசருக்குத்தான் குசும்பு அதிகம் என்று பார்த்தால் தார், மண்ணுக்கெல்லாமா குசும்பிருக்கு?
அருமையாப் படம் எடுக்கறவங்க இந்தப்போட்டியில் கலந்துக்கும்
என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஆப்பு வைப்பதை எதிர்த்து
நீதி கேட்டு இன்று நீண்ட நடைப்பயணம் போறேன்:-)
//ஜெஸிலா said...
படங்கள் அருமை. அந்த படகு படங்கள்தான் மிக அருமை. நாய் படம் இயற்கை என்ற தலைப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுமா? //
என்னங்க இது, நாய்ன்னா அவ்வளவு இளக்காரமா? நம்ம படத்தில என்ன இயற்கையாகத் தூங்கிட்டிருக்கு.
//கோபிநாத் said...
படங்கள் எல்லாம் அருமை தல ;)//
தல
பேசாம உங்களையே நடுவராப் போட்டிருக்கலாம் ;-)
கானாபிரபா சொல்லிறார்,
//உண்மைதான் மாயா
யாழ்ப்பாணத்தாருக்கு குசும்பு சாஸ்தி ;-)//
அதுக்கு அடுத்த பின்னூட்டதில சினேகிதி சொல்லிறா,
//மனுசருக்குத்தான் குசும்பு அதிகம் என்று பார்த்தால் தார், மண்ணுக்கெல்லாமா குசும்பிருக்கு?//
மண்ணாங்கட்டி!!!!
அப்ப யாழப்பாணத்தார் எல்லாரையும் தார், மண் எண்டு சொல்லிறாவோ சினேகிதி???
(கந்தபுராணக் கலாச்சார விழுமியங்களைக் கைக்கொண்டு வாழுற மண்ணம்மா அது!)
ம். இதையும் பாத்துக்கொண்டு கனடாவிலயிருந்து வலைப்பதியிறாங்களாம் நாலைஞ்சு யாழ்ப்பாணத்தார்.
நீங்களெல்லாம் வில்லூண்டி "நீச்சல் தடாகத்தில" விழுந்து சாக வேண்டிய ஆக்கள்.
//சினேகிதி said...
மனுசருக்குத்தான் குசும்பு அதிகம் என்று பார்த்தால் தார், மண்ணுக்கெல்லாமா குசும்பிருக்கு? //
தங்கச்சி ! வேணாம் விட்ருங்க, கடி கூடிப்போச்சு
//கொண்டோடி said...
ம். இதையும் பாத்துக்கொண்டு கனடாவிலயிருந்து வலைப்பதியிறாங்களாம் நாலைஞ்சு யாழ்ப்பாணத்தார்.
நீங்களெல்லாம் வில்லூண்டி "நீச்சல் தடாகத்தில" விழுந்து சாக வேண்டிய ஆக்கள். //
அண்ணை ! நீங்கள் கொண்டோடியோ அல்லது கொழுவியோ?
சும்மா இருக்கிற கனடாக்காரங்களை ஏன் சீண்டிறியள்?
என்னத்த கொண்டு ஓடுறீங்கிளோ தெரியேல்ல இவ்வளவு நாளும்...நான் யாழ்ப்பாணத்து தார் மண்ணுக்குக் கூடவா குசும்பிருக்கென்று கேட்டனான்...நீங்கள் ஏன் யாழ்ப்பாண ஆக்களை நான் தார் என்று சொன்னதென்று மாத்துறீங்கள் ?
நீங்கள் பெரிய அறிவாளி என்று தெரியுது அதுக்காக எல்லாரையம் அப்பிடி நினைக்க கூடாது அதுவும் முக்கியமா என்னை அப்பிடி நினைக்கக்கூடாது...தயவு செய்து இந்த கந்த புராணக் கலாச்சார விழுமியம் மற்றது வில்லூண்டி விழுவதென்றால் என்னென்று சொல்லுங்கோ.
//கானா பிரபா said ... (Thursday, July 19, 2007 1:12:00 PM) :
//ஜெஸிலா said...
படங்கள் அருமை. அந்த படகு படங்கள்தான் மிக அருமை. நாய் படம் இயற்கை என்ற தலைப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுமா? //
என்னங்க இது, நாய்ன்னா அவ்வளவு இளக்காரமா? நம்ம படத்தில என்ன இயற்கையாகத் தூங்கிட்டிருக்கு.//
இயற்கையா தூங்கிட்டு இருக்கிற நாய்க்கு எதுக்கு செயற்கையா கயிறு போட்டு கட்டி இருக்கு?
//துளசி கோபால் said...
அருமையாப் படம் எடுக்கறவங்க இந்தப்போட்டியில் கலந்துக்கும்
என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஆப்பு வைப்பதை எதிர்த்து
நீதி கேட்டு இன்று நீண்ட நடைப்பயணம் போறேன்:-) //
துளசிம்மா
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்க, நானும் வரேன்
//பிருந்தன் said...
இயற்கையா தூங்கிட்டு இருக்கிற நாய்க்கு எதுக்கு செயற்கையா கயிறு போட்டு கட்டி இருக்கு? //
அண்ணை
வடிவாப் படத்தைப் பாருங்கோ, கயிற்றுத் தடுப்புக்குள்ள தான் நாய படுத்திருக்கு, நாயைக்
கட்டேல்லை ;-)
படங்கள் அருமை பிரபா.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றியண்ணை
நீங்களும் போட்டிக்கு வந்திட்டியள், வெற்றிக்கனி யாருக்கெண்டு பார்ப்பம்
கானா பிரபா
எல்லா படங்களும் அழகாக உள்ளன. படம் 4ம், 5ம் மிக மிக அருமை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி, ஆனால் நம்ம துரதிஷ்டம் 5 ஆம் புகைப்படம் போட்டியில் இல்லை ;-(
ம்ஹும் இந்த ஆட்டத்த்துக்கு நீங்க இல்லை...
அதெல்லாம் ஒத்துக்க முடியாது, இது போங்கு ஆட்டம்...
நான் தான் ஜெயிப்பென்...இப்படி எல்லோரும் போட்டியில கலந்துக்கிட்டா என்ன செய்யுறது...
சரி உங்களுக்கு ஆறுதல் பரிசு விட்டு தற்றேன்..
தல
பெண்ணென்றால் பேயும் இரங்கும்னு சொல்வாங்க. தாய்லாந்துப் பிகரைப் போட்டுக் கவுத்திட்டீங்களே ;-)
அடுத்த சுற்றில் பார்க்கலாம்.
Post a Comment