Social Icons

Pages

Friday, March 09, 2007

கொச்சின் - விட்ட குறை, தொட்ட குறை


கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன்.கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. அத்தோடு அங்கு நான் எடுத்த படங்களின் மீதியையும் காட்ட ஒரு சந்தர்ப்பம் இது. கேரள சுற்றுலாத்தலங்களின் உதவியுடன் தகவல்களைப் பெற்று இப்பதிவைத் தருகின்றேன்.

கொச்சி என்றும் கொச்சின் என்றும் அழைக்கப்படும் இத்துறைமுகப்பட்டினம்
எர்ணாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ளடங்குகின்றது. அரபியன் கடல் தொட்டு நிற்க தெற்கே குமாரகம், ஆலப்புழா மாவட்டத்தையும் கிழக்கே இடுக்கி, மேற்கே திரிச்சூர் பிரதேசங்கள் சூழ கொச்சின் அமைந்துள்ளது.

அரபிக்கடலின் மகாராணி என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இவ்விடம் கேரளாவின் வர்த்தகப் பட்டினமாகவும் கொள்ளப்படுகின்றது. அதை உணர்த்துமாற் போலப் பண்டைய கால வரலாற்றுத் தரவுகளின் படி பிரிட்டிஷார், அரேபியர்கள், சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் வந்து வாணிபம் நடாத்திப் போன இடமாக இருக்கின்றது. மேற்குலகத்தவர் முதன்முதலில் கைப்பற்றிய இந்தியப் பிரதேசம் இதுவாகும். கொச்சின் துறைமுகம் ஒரு வர்த்தகக் கேந்திரமாக இருந்ததால் அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விடயம் இல்லாவிட்டாலும், குறிப்பாக கோவளம் கடற்கரையில் காணும் சுகம் இல்லாவிட்டலும், வரலாற்றுப் பெருமை மிக்க துறைமுகத்தைப் பார்க்கும் வாய்ப்பாகவும் சீன வல என்று மலையாளத்தில் அழைக்கப்படும் chinese net ஐப் பார்க்கவும் இந்தப் பயணத்தை ஏற்படுத்த வேண்டும். சீன வலை முறைப்படி சீனாவிற்கு வெளியே கொச்சினில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகின்றது. சமாந்தரமாக நீண்ட வலையமைப்பு ஏற்படுத்தி வலையின் மேற்புறம் மீனவர் நடந்து சொல்வதற்கான வசதியையை உருவாக்கி வித்தியாசமானதொரு முறையில் மீன் பிடிக்கப்படும் முறையைக் கட்டாயம் பார்க்க இது ஒரு அரிய சந்தர்ப்பம். (பார்க்க, இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள்)

ஒல்லாந்தர் 1530 இல் கோவாவிற்குத் தம் பிராந்தியத் தலைநகரை மாற்றும் வரை 1503 ஆம் ஆண்டிலிருந்து கொச்சினே தலைப்பட்டினமாகத் திகழ்ந்தது. 2408 சதுர கி.மீ பரப்பளவில் இந்தப்பிரதேசம் உள்ளது. என்னுடைய அனுபவப் படி திருவனந்தபுரப் புறச்சூழ்நிலையிலிருந்து மாறுபட்டே இப்பிரதேசம் உள்ளது. ஒரே மாநிலத்துக்குள்ளேயே சில வாழ்வியல் மற்றும் நடைமுறை வேறுபாடுகளையும் காணக்கூடியதாக இருந்தது.
கொச்சினில் நான் பார்த்த சில இடங்களை அடுத்த பதிவில் தருகின்றேன்.
வரும்........

8 comments:

செல்லி said...

ஞிங்களோட ஈ பதிவு நல்லா இருக்கின்னு ஞான் பறையும். ஞிங்கள் இன்னும் கொச்சினை விடுற பாடிலையோ?
எப்பிடி என்ர மலையாளம்?
நல்லாயிருக்கு கடற்கரை.மப்புக் கட்டுது போல. பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
நீங்க;கேரளாவை விடுமாப் போல இல்லை.காணி ஒன்றை வாங்கி வீடுகட்டுங்க; விடுமுறைக்கு உதவும்.
இந்த சீனமுறை மீன் பிடித்தல்; இங்குமுண்டு;ஆனால் சற்று இயந்திரமயப் படுத்தியுள்ளார்கள்.
படங்களுக்கு வெளிச்சம் ஒத்துழைக்கவில்லைப் போல கிடக்கிறது.

G.Ragavan said...

கொச்சின்....நீங்கள் சொன்னாற் போல கேரளத்தின் வணிகமையம். அந்த சீன வலைகளை படகில் சென்று கொண்டே பார்க்கும் அழகே அழகு. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதனால்தான் நீங்கள் இன்றும் அதைப் பற்றிப் பதிவிடுகின்றீர்கள்.

நிற்க. நலமா? பதிவுப் பக்கம் பார்த்து நீண்ட நாட்களாகிறதே!

கானா பிரபா said...

ஓ எஙகட செல்லி சேச்சியோ

நமஸ்காரம் ;-)

மலையாளம் நல்லாயிருக்கு, கொச்சின் மப்பாருக்கேக்கை போனனான், வருகைக்கு நன்றி.

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
நீங்க;கேரளாவை விடுமாப் போல இல்லை.காணி ஒன்றை வாங்கி வீடுகட்டுங்க//

யோகன் அண்ணா அதுதான் என் ஆசையும் ;-) மப்பும் மந்தாரமும் படத்துக்கு ஒத்துளைக்கவில்லை.

கானா பிரபா said...

// G.Ragavan said...
கொச்சின்....நீங்கள் சொன்னாற் போல கேரளத்தின் வணிகமையம். அந்த சீன வலைகளை படகில் சென்று கொண்டே பார்க்கும் அழகே அழகு. //

உண்மை தான் ராகவன், கேரளக் கடற்கழிச் சுற்றுலாவில் சீனவலை காணும் பயணமும் வெகு பிரபலம்.
நான் நலம், நலமறிய ஆவல்.
தங்கள் வருகைக்கும் என் நன்றிகள்.

Anonymous said...

////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
நீங்க;கேரளாவை விடுமாப் போல இல்லை.காணி ஒன்றை வாங்கி வீடுகட்டுங்க//

யோகன் அண்ணா அதுதான் என் ஆசையும் ;-) மப்பும் மந்தாரமும் படத்துக்கு ஒத்துளைக்கவில்லை.//

உங்கட கேரளக் காதலுக்கு அங்கேயே பெண்ணெடுத்தால் ஆசை எளிதில் நிறைவேறுமே? ;-)

கானா பிரபா said...

அநானி அண்ணை

அடுத்ததா ,ஆந்திராவைப் பற்றி எழுதப்போறன், அதுக்காகப் போற இடமெல்லாம் பெண்ணெடுக்க முடியுமே? ;-))