மே 26, காலை 8.00 மணி (சிட்னி/அவுஸ்திரேலியா நேரம்)
சிட்னி விமான நிலையம் போவதற்காக Taxi ஒன்றைப் பிடித்தேன். வழக்கம்போற் சாரதியுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பயணித்தேன். வாகனச்சாரதி ஒரு ஈராக் நாட்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். முன்பெல்லாம் ஈராக்கில் பெற்றோலியம் கொள்ளை மலிவாம், 20 சதத்துக்கு அதிகப்படியான லீட்டரை நுகர்வோர் கொள்முதல் செய்யலாமாம். ஈராக்கைப் பொறுத்தவரை இப்படிப் பெற்றோலியப் பொருட்கள் மலிவாகக் கிடைப்பதால் தனியார் சில்லரை வியாபாரங்களில் ஈடுபடாததால் வழக்கம் போல் அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களே விற்பனையில் ஈடுபடுகின்றனவாம். ஈராக் மீதான வெளிநாட்டுப் படைகளின் முற்றுகையின் பின்னர் பெற்றோலியப்பொருட்களின் விலை அங்கும் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாம்.
இருவரின் சம்பாஷணையின் போது அவர் சொன்ன இரண்டு விடயங்கள் கவனத்தை ஈர்த்தன.இந்த வெளிநாட்டுப் படைகள் எம் நாட்டுக்கு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும் என்று சொல்லுகின்றன. ஆனால் ஜனநாயகம் என்பது நாட்டுக்கு நாடு, கலாச்சாரம், மொழி போன்ற அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் அமுல்படுத்தும் ஜனநாயகம் மேற்கு நாட்டவரின் பண்பாட்டோடு சம்பந்தப்பட்டது. உன்னுடைய நாட்டைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்றுவிட்டு தன் கலாச்சாரத்தையும் திணித்து, எங்கள் நாட்டின் வளங்களையும் சுரண்டுகின்றார்கள். இவர்களுக்கும் சதாம் ஹுசைன் இற்கும் என்ன வித்தியாசம்?
ஈராக்கில் வாழும் குர்திஷ் (Kurdish) இன மக்கள் இந்தோ இரானியன் மொழிக்கலப்பைக் கொண்ட குர்திஷ் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்கள் ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் விரவி வாழ்கின்றார்கள். இந்தோ ஈரானியன் மொழிக்கலப்பால் இவர்களால் ஓரளவுக்கு ஹிந்தி மொழியைப் புரியமுடிகின்றதாம். அதனால் ஹிந்திப்படங்களின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்களாம். அங்கும் ஹிந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனவாம். ரிஷிகபூர், சசிகபூர், அமிதாப் என்று நடிகர்களின் பெயரை அள்ளிவிட்டதோடு, குர்திஷ் மொழியின் வழக்கில் உள்ள சில ஹிந்திச்சொற்களையும் அள்ளிவிட்டார் அந்தச்சாரதி.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸில் check in பண்ணும் போது Raffles class இல் இருப்பதாகக் கண்டு கொண்டேன்.விமானத்தில் ஏறமுன்னரும் இருக்கையில் அமரும் போதும் Dan Brown இன் Da Vinci Code, Digital Fortress நாவல்களால் மறைத்த தலைகள் தென்பட்டன. சிவகாசி படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மாற்றாமல் இருந்தது, கண்ட நாள் முதல் படமும் இருந்தது. வானொலியில் சிங்கப்பூர் ஒலி 96.8 புகழ் மீனாட்சி சபாபதி தொகுப்பில் பாடல்கள். பரமசிவன் படத்திற்காக " ஆச தோச அப்பளம் வடே" ஒலித்துக்கொண்டிருந்தது.
மே 28, மாலை 5.45 (சிங்கப்பூர் நேரம்)
சிங்கப்பூர் விமானநிலையத்தில் விமானம் தரைதட்டியது. அடுத்துத் திருவனந்தபுரம் செல்லும் விமானம் ஏற இன்னும் 2 மணி நேரம் இருக்கிறது. இருக்கின்ற நேரத்தில் விமானநிலையத்தின் மேல் அடுக்கில் உள்ள இலவச Internet browsing centre இல் தமிழ்மணத்தை மேய்ந்தேன். டீசே தமிழன் "மழைக்காலம்" பதிவில் நனைந்துகொண்டிருக்கின்றார், வசந்தன் "டீ சே கடவுளானால்" என்று சீண்டிக்கொண்டிருக்கின்றார், சின்னக்குட்டி ' இச்சாதாரிப்பாம்புடன்" இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார், மதி தமிழியல் மாநாட்டுப் படம் காட்டுகின்றார். இன்னும் சில வலைப் பதிவுகளைப் பார்க்கின்றேன்.
திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்கான நுளைவிடத்துக்குள் நுழைந்துபோய் பயணிகளோடு பயணிகளாகக் கலந்து இருக்கையில் அமர்ந்தவாறே நேட்டம் விடுகின்றேன். நடிகை அசின் வருகிறாரா என்று கண்கள் தேடின
( வந்தால் டீ சேயிற்குச் சொல்லவேணும்).
திருவனந்தபுரம் செல்லும் விமானம் சற்றுத்தாமதமாக வரும் என்ற அறிவிப்பு வருகின்றது. இந்தியா செல்லும் எல்லா விமானங்களையுமே சம்பிரதாயபூர்வமாகத் தாமதித்து அனுப்புகின்றார்களோ என்று எனக்குள் அலுத்துக்கொண்டேன். செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விரித்துப் படிக்கின்றேன்.
சிங்கப்பூர் நேரம் இரவு 8.30 இற்கு Silk Air விமானம் கிளம்பியது. Silk Air விமானம், Singapore Airlines இன் ஒரு பகுதிச்சேவையாகச் செயற்படுகின்றது.நேற்று கூட்டாளி தாஸ் உடன் கதைக்கும் போது " "உன்ர சொத்து நிலவரம் என்ன மாதிரி?" என்று கேட்டான். ஏனப்பா என்று நான் கேட்டபோது "இல்லை Silk Air பிளேன்கள் முந்தி அடிக்கடி விபத்துப்படுமாம்" என்று சொல்லிக் குறும்பாகச்சிரித்தவன். பாழாய்ப் போன அந்த ஞாபகம் வந்து அடி வயிற்றைக் கலக்கியது.
விமான இருக்கைகளிலும் சரி, மையத்திலும் சரி, வசதி இல்லாமல் அநியாயத்திற்கும் கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட Portable DVD Player களை 10 டொலருக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.பக்கத்தில் இருந்த பாலன் என்ற கேரளத்துக்காரர் ஐ வாடகைக்கு வாங்கி ஒரு 5 நிமிடம் கூடப்பார்க்கவில்லை, "கண் எரிச்சல், பார்க்கமுடியவில்லை" என்றுவிட்டு அதை உபயோகிக்குமாறு வற்புறுத்துகின்றார். திருவனந்தபுரம் விமானம் என்பதால் ஏதாவதொரு நல்ல மலையாளப்படம் இருக்கும் என்று நினைத்து அதைச் சோதனையிட்டால் ஹொலிவூட் மசாலாக்களும், கஜினி தமிழ்ப்படமும் மட்டும் இருந்தன."சுட்டும் விழிச்சுடரே" பாடலை 964 தடவையாக மீண்டும் பார்த்துவிட்டு (963 தடவை சிட்னியில் பார்த்தது:-)) மீண்டும் அவரிடமேயே கொடுத்துவிட்டு "ஆச்சி பயணம் போகிறாள்" இல் மூழ்குகின்றேன்.கோழிவறுவலும் அரிசிச்சாதமும் இரவுபோசனமாகக் கிடைத்தது.
மே 29, இரவு 9.50 (இந்திய நேரம்)
திருவனந்தபுரத்தைப் பட்டு மாமி (Silk air) முத்தமிடுகிறாள்.சுங்கப்பிரிவுச் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு விமான நிலைத்திற்குள்ளேயே இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட Airport Taxi ஐ எடுக்கின்றேன். (புதிதாகப் பயணிக்கின்றவர்களுக்கு ஒரு தகவல், நீங்கள் சுயமாக விமான நிலையத்திலிருந்து வாகனப் போக்குவரத்தை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் Airport Taxi எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை ஒழுங்கு செய்யுங்கள், அவர்கள் உங்கள் பயணத்திற்கான சரியான கட்டணத்தையும் முன்னதாகவே அவர்கள் கூறிவிடுவார்கள்)
திருவனந்தபுரம் பெரிதாக விரிவாக்கப்படாத சிறிய விமான நிலையமே.வாகனத்தில் அமர்ந்து சன்னலின் வெளியே கண்களை அலையவிடுகின்றேன்.நான் இதுவரை கண்ட விமான நிலையப் புறச்சூழல்கள் பிரமாண்டமானதாகவும் கொங்கிறீற் ஹோட்டல்களையும், பரந்துவிரிந்த சாலைகளையும் கொண்டிருந்தன.ஆனால் இந்தச் சூழல் புதுமையாக இருக்கிறது.
நான் எளிமையானவன் என்று சொல்வது போலக் காட்சிகள் விரிய விமான நிலையத்திலிருந்து குறுகிய சந்துக்குள்ளால் பயணப்படுகிறது எங்கள் கார்.இந்த அமைப்பு எனக்கு யாழ்ப்பாணம் பாசையூர் வீதியை ஞாபகப்படுத்துகின்றது.
செரி, ஞான் பின்னக் காணம்......
Wednesday, May 31, 2006
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
கேரளா சென்றவர்கள்;அது யாழ்பாணம் போல் என்று கூறக் கேட்டுள்ளேன். மறக்காமல் மருத்தெண்ணைக் குளியல் போடவும்.
யோகன் -பாரிஸ்
எண்ணைக்குளியல் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை அண்ணா.
நான் இப்போது பெங்களூரில்.
நல்ல பயணக்கட்டுரை. இந்தப் பதிவிலை ஒரு படத்தையும் காணோமே? ஒரு படத்தையெண்டாலும் போட்டு விடுங்கோ.
//உன்னுடைய நாட்டைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்றுவிட்டு தன் கலாச்சாரத்தையும் திணித்து, எங்கள் நாட்டின் வளங்களையும் சுரண்டுகின்றார்கள்// உண்மை தான்.
எமது நாட்டின் வளத்தைச் சுரண்டி எடுத்து விட்டு இப்போது aid என்ற போர்வையில் திருப்பித் தருகிறார்களாம்.
வருகைக்கு நன்றிகள் சிறீ அண்ணா,
படம் போடுவதில் என் புளொக்கில் எனோ இன்று சிரமம் கொடுக்கின்றது. தொடர்ந்து இரு பதிவுகளை இன்று போட இருந்தேன், படம் போட முடியாததால் நிறுத்திவைத்திருக்கின்றேன்.
//எமது நாட்டின் வளத்தைச் சுரண்டி எடுத்து விட்டு இப்போது aid என்ற போர்வையில் திருப்பித் தருகிறார்களாம். //
இந்தப் பயங்கரவாதத்தைத் தட்டிக்கேட்க வழியில்லை.
பிரபா.... இப்ப பெங்களூரிலா.....கொழும்பிலை தமிழர் மாதிரி....பெங்களூர் கிட்டதட்ட தமிழ் ஊர் என்று கூறுவினம்...சுஜாதா வின் முன்னைய கதைகளில் பெங்களூர் பின்புலம் அடிபடும்.... தொடருங்கள்...பயணக்கட்டுரைக்கான முத்திரையுடன் தொடங்கியிருக்கிறீங்கள்....தொடருங்கள்....
ஆரம்பமே அருமை!!ஈராக்,வளர்ந்த நாடுகளின் பெரியண்ணன் போக்கு,
சினிமா,தமிழ்மணம்,பயணச்சூழ்நிலை
என கலந்து எழுதியிருப்பது நன்றாக
உள்ளது.பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் பிரபா!!!.
அன்புடன்,
(துபாய்)ராஜா.
அப்பு மட்டும் பயணம் போனால் எப்பிடி? ஆச்சியையும் எல்லோ கூட்டிட்டு போகோணும்..
அதென்ன சிலுக்கு எயார்.. புதுப்பெயராக கிடக்கு..
-கொழுவியெண்டு வந்தாலும் தழுவி எண்டு வாசியுங்யோ -
வணக்கம் சின்னக்குட்டி
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் தான். கேரளத்தொடர் முடிந்ததும் அந்த அனுபவங்களையும் தருகின்றேன்.
வணக்கம் துபாய் ராஜா
வழக்கம் போற் தங்கள் ஊக்கத்திற்கு என் நன்றிகள்.
இந்தப் பெரியண்ணனுக்கு மணி கட்டுஅது யார்?
வணக்கம் கொளுவி
நான் போனால் ஆச்சி போன மாதிரி:-)
பிளேனிலை சிலுக்கு, அனுராதா எல்லாம் இல்லை காணும்.
நீர் எப்ப தேஜாசிறீ காலத்துக்கு வரப்போறீர்?
நல்ல தொடக்கம் பிரபா. திருவனந்தபுரம் அழகும் எளிமையும் சேர்ந்த ஊர். வீண் ஆர்ப்பாட்டங்கள் இல்லை. நானும் போயிருக்கிறேன். கேரளா முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு.
வணக்கம் ராகவன்,
இந்தக் கேரளப் பயணம் அடிக்கடி இவ்வூருக்குச் செல்லும் ஆவலையும் தூண்டியிருக்கின்றது.
ஆரோ என்னவொ சொன்னார்கள் என்பதற்காக இப்படி எழுத்தை வெள்ளெளுத்தாக மாத்தி வச்சிருக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை....
தொடர்ந்து வாசிக்கா ஆவலாய் உள்ளேன்
வணக்கம் குழைக்காட்டான்
வாருங்கோ, வாருங்கோ, உங்களுக்கும் எழுத்துமாற்றலால் அவஸ்தையா:-)
பேசாமால் புளொக்கின் உடையை மாறிவிடுவோமா?
நிறைய எழுத இருக்கின்றது, இந்தப் பிரச்சனை என்னை ரணகளம் ஆக்குதே:-((((
//பேசாமால் புளொக்கின் உடையை மாறிவிடுவோமா?
நிறைய எழுத இருக்கின்றது, இந்தப் பிரச்சனை என்னை ரணகளம் ஆக்குதே:-(((( //
அதைச்செய்யுங்கோ மதலில்.
என்னாலும் ஒழுங்காக படிக்க முடியவில்லை.
ஏன் கண்ணா...பட்டு சேலை உடுத்தியிருந்த பெண்ணு போல இருந்த புளக்கை வெள்ளை சேலை உடுத்தின மாதிரி மாறி இருக்குது...நானும் குளக்காட்டன் சொன்னதையே வழி மொழிகிறேன்.
பிரபா...தமிழ் ஆக்களை பிடிக்காத...கேரளத்து நம்பூதிரிகளின் சேட்டையாய் இருக்கும்...பார்த்து...மோனே...
வாங்கோ மலைநாடன், சின்னக்குட்டி,
Old is Gold போல, தற்காலிகமாகப் பழைய சட்டையை உடுத்துகிறேன்.
சின்னக்குட்டி,
அப்படியான சேட்டை ஒன்றிலும் அகப்படவில்லை:-)
ஓய்.
ஆரைக்கேட்டு வார்ப்புரு மாத்தினீர்?
பழசிலயே விடும். நல்லாயிருக்கு.
ஒரு தனித்துவம் வேண்டாமோ?
//வசந்தன்(Vasanthan) said...
ஓய்.
ஆரைக்கேட்டு வார்ப்புரு மாத்தினீர்?
பழசிலயே விடும். நல்லாயிருக்கு.
ஒரு தனித்துவம் வேண்டாமோ?//
நற நற நற....:-
Post a Comment