
ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.கடந்த மூன்று நாட்களுக்கு முன் நான் சென்ற கேரள விஜயம், ஒரு முழுமையான பயணதொடரை ஆக்குவதற்கான முனைப்பை எனக்குள் தூண்டியிருக்கின்றது.
யதார்த்தபூர்வமான மலையாள சினிமாப் படைப்புக்களை நான் தொடர்ந்து பார்த்துவரும் போது எம் யாழ்ப்பாணத்து வாழ்வியல் தடத்தை நினைவுபடுத்தியது தான் என் இந்தக் கேரளப் பயணத்தின் தூண்டுகோல்.நான் சென்ற நாடுகளிலும், இடங்களிலும் வித்தியாசப்பட்டு என் பிறந்தகத்துக்குச் சென்ற திருப்தியோடு இந்தப் பயண நினைவுகளை அசைபோட்ட இருக்கிறேன்.கேரளப் பயணத் தொடர் முடிந்ததும் இன்னும் தொடரும் பல உலாத்தல்கள்.கண்டதும், கேட்டதும், படித்ததுமாக நான் உள்வாங்கிய விடயங்களோடு தொடந்து உலாத்த இருக்கின்றேன்.
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
17 comments:
நான் ரெடி! கேட்க (படிக்க)
யோகன் -பாரிஸ்
காத்திருக்கிறேன்!
உங்கள் ஊர்சுற்றல்கள், இணைய உலாவிகளுக்கு, உளமகிழ்வைத்தருமென்பதால், வருக! வருக!! என வரவேற்கின்றோம். அப்பாடா....:-)))) வாருங்கோ!
நல்ல முயற்சி தொடர வாழ்த்து.
பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது. நீண்ட பதிவுகள் வாசிக்கக் (எனக்கு) கடினமாயிருக்குமென்று நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்தையும் கேட்கவும்.
அப்ப இந்த முறை தனியவே போனனியள்:)
பிரபா!'படகு வீடு' புகைப்படம் அருமை.மழை நேரத்தில் வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.படகு
'சுக்கான்' வலித்து பழக்கமா!!!!
அன்புடன்,
(துபாய்)ராஜா.
யோகன் அண்ணா, மதி, மலை நாடான், வசந்தன் சிறீ அண்ணா, ராஜா தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
வசந்தனுக்கு,
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், இப் பயணத்தொடரைப் பல பகுதிகளாகப் பிரித்துத் தரவே இருக்கின்றேன். தவிர தெரிந்தெடுக்கப்பட்ட 200 புகைப்படங்கள் வரை இருக்கின்றன.
பின்னணியை நான் தேர்ந்தெடுக்கக் காரணம், பயணத்தில் கூடவே பயணப் படுவது வானமும் கடலும் அந்த எடுகோளில் தான் இதைத் தேர்வு செய்தேன்.
சிறீ அண்ணா,
இந்த முறை தனியாகத்தான் :-)
அன்பின் ராஜாவிற்கு,
ஆமாம், மழைக்காலம், அதுகூட இதம் தான். சுக்கான் வலித்த அனுபவம் உண்டு.
//பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது.// எனக்கும்.
தேசாந்திரி said...
//பின்னணி கண்ணுக்குள் குத்துகிறது.// எனக்கும்.
இரண்டு பேர் சொல்லியிருக்கிறீர்கள். சரி ஏதாவது செய்து நிறத்தின் அளவைக்குறைக்க முயற்சிசெய்கின்றேன்.
i like this template Prabha.
-Mathy
//i like this template Prabha.
-Mathy //
நன்றிகள் மதி
எழுத்துக்களின் நிறத்தை மாற்றிக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். பார்ப்போம்:-)
அவைக்குப் பிடிச்சாச்செல்லோ,
இனி நாங்களென்ன சொல்லிறது?
ம். பிடிச்சிருக்கு. ;-)
வார்ப்புருவும் நல்லாகவிருக்கிறது. பயணவார்ப்பும் அப்படியேயிருக்குமென எதிர்பார்ப்பு
-/.
கானா பிரபா,
உலாத்தல் என்று உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் , என்னடா இது எங்கேயோ கேள்விப்பட்ட சொல்லாய் இருக்குதே என நினைத்துக்கொண்டு, இச் சொல்லிற்கு என்ன பொருள் என அறியும் ஆவலில் உங்கள் தளத்திற்குள் நுழைந்தேன். உண்மையிலேயே இந்தச் சொல்லை மறந்தே போய்விட்டேன். ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
மற்றைய வாசகர்கள் இங்கே குறிப்பிட்டது போலவே நானும் உங்களின் பயணக்குறிப்புக்களை படிக்க ஆவலாக உள்ளேன்.
நன்றிகள்.
அன்புடன்
வெற்றி
//உண்மையிலேயே இந்தச் சொல்லை மறந்தே போய்விட்டேன். ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.//
;-(
பழைய நிறமே தேவலை போலத் தெரிகிறதே. அல்லது எழுத்துக்களின் அளவை சிறிது அதிகரிக்கலாம்.
வருகைதந்த அநாமோதய நண்பருக்கும், வெற்றிக்கும் என் நன்றிகள்.
வசந்தன்,
என்ன நக்கலு:-)
சிறீ அண்ணா
எழுத்தைப் பெரிதாக்கியிருக்கிறேன், Refresh பண்ணிப் பார்த்துச்சொல்லுங்கள்.
Post a Comment