கடந்த பதிவில், சுற்றுலா பஸ் இலிருந்து இறங்கி ஊர் சுற்ற ஆரம்பித்தேன் என்றேன் அல்லவா, அதன் பிரகாரம் நான் முதலில் சென்றது Tower of London. தேம்ஸ் நதியை ஒட்டிய மாபெரும் கோட்டையாக விளங்கும் இது, லண்டன் வரும் சுற்றுலாவாசிகள் தவிர்க்கமுடியாத ஒரு சுற்றுலாத்தலம் ஆகும். நிதானமாகச் சுற்றிப்பார்க்கவேண்டுமென்றால் ஒரு நாள் வரை செல்லும் அளவுக்கு வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது Tower of London.
உள்ளே நுழையக் கட்டணம் உண்டு. ஆனால் கொடுக்கும் கட்டணத்துக்கு மேலாகவே பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரையான அரச பாரம்பரிய உடைகளில் இருந்து, அணிகலன்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட படைக்கலங்கள், அரசர்களின் விபரங்கள் என்று நேர்த்தியாகவே எல்லாம் இருக்கின்றன.
உள்ளே இருக்கும் இடங்களைக் காட்டவென இலவச சுற்றுலா வழிகாட்டி குழுக்கள் அடிப்படையில் வருகையாளர்களைத் திரட்டித் தன் பணியைச் செய்கின்றார். தனித்தனியான கொத்தளங்கள், ஒவ்வொன்றையும் சுற்றிப்பார்க்க சலவைக்கல் படிக்கட்டுக்கள் என்று அந்தக் காலத்தில் எழுப்பப்பட்டு இன்றும் கம்பீரமாக விளங்கும் இந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்க்கும் போது பிரமிப்பு விலகாமல் இருக்கின்றது.
அந்தக்காலத்தில் யுத்தவேளையில் போர்த்தளபாடங்களை உபயோகிக்கும் போது கணக்கு வைத்த பதிவேடு
அந்தக்க்கால ராஜாவாக வேஷம் பூண்டு நடித்துக் காட்டுகின்றார்.
6 comments:
அந்தச் சொகுசான கட்டிலில் தான் உங்கள் உறக்கமா?:) முதலிரவுக் கட்டில் போல் அழகா இருக்கு:))
நல்ல உலாத்தல்!
இனிய பகிர்வு. பலர் நேரில் பார்க்க முடியாத இடம்.... பதிவு செய்து எங்களையும் பார்க்க வைத்ததற்கு நன்றி பிரபா....
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அந்தச் சொகுசான கட்டிலில் தான் உங்கள் உறக்கமா?:) முதலிரவுக் கட்டில் போல் அழகா இருக்கு:))//
அவ்வ்வ் அது அரசருடைய கட்டிலய்யா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்
\\அந்தக்காலத்தில் யுத்தவேளையில் போர்த்தளபாடங்களை உபயோகிக்கும் போது கணக்கு வைத்த பதிவேடு \\
அதுவே ஒரு ஆயுதமாக இருக்கே ;))
அந்த சிங்கங்களை நான் பார்க்கலையே பிரபா:(
ராசாவூட்டு நகைகளைப் பார்த்தீங்கதானே?
இந்தப்பதிவில் காணாமப்போன ஒருவரையும் கண்டேன்:-))))))))
Post a Comment