Social Icons

Pages

Sunday, October 11, 2009

தாய்லாந்து உலாத்தல் ஆரம்பம்

"போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே" என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை உலாத்தலை ஆரம்பித்தபோது. இறுதியில் 2 நாள் அவகாசத்தில் திடீர் திட்டமிடலோடு போகவேண்டும் என்று நான் தீர்மானித்த இடம் "தாய்லாந்து". ஏற்கனவே தாய்லாந்தின் அண்மித்த நாடான கம்போடியாவுக்கு கடந்த வருடம் பயணித்த பின்னர் ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில் தாய்லாந்து தான் இம்முறை பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் தாய்லாந்துக்கு 1 வாரம் போகவேண்டி இருந்தது. வேலைப்பழு காரணமாக உலாத்தலுக்கு அப்போது அவகாசம் கிட்டவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் டாக்சியில் பயணிக்கும் போது வீதியின் மருங்கிலே திடீர் என்று எதிர்ப்பட்ட இந்து ஆலயம் ஒன்றைக் கண்டு யுரேக்கா யுரேக்கா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் கத்தாமல் டாக்சிக்காரரை ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு சென்ற அந்த ஆலயம், சிறீ மாரியம்மன் கோவில். அப்போது நவராத்திரி காலம் கூடவே கோயிலின் மகோற்சவ காலம் என்பதால் ஆலயச் சூழல் படு அமர்க்களமாக இருந்தது. மாரியம்மன் கோயில் தரிசனத்தோடு மட்டும் என் அன்றைய தாய்லாந்து சுற்றுலா ஓய்ந்து போனது.


இம்முறை என் பயணம் முழுமையான சுற்றுலா, குறிப்பாக தாய்லாந்து நாட்டின் வரலாற்று விழுமியங்களைத் தேடிப் பார்த்து விடவேண்டும் என்பதே அதில் முனைப்பாக இருந்தது. தாய்லாந்து நாட்டில் இந்து மதத்தின் பரவலையும் அறிய வேண்டும் என்ற அவாவும் கூடவே இருந்தது.


வழக்கம் போல பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Lonely Planet இன் "தாய்லாந்து வழிகாட்டி" நூலை வாங்கி முதற்கட்டமாக நான் தங்குவதற்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடினேன். இருப்பவற்றுள் Lamphu Tree House என்ற தங்குமிடம் சிறப்பான வசதிகளோடு இருப்பதாகப் பட்டது. இணையத்திலும் அந்த ஹோட்டலின் இணையப்பக்கத்தையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். இங்கே ஒரு சுற்றுலா டிப்ஸ் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக சுற்றுலாவுக்குப் போகும் போது பெரும் நட்சத்திர ஹோட்டல்களை விட நடுத்தர (mid range) நிலையில் உள்ள ஹோட்டல்களை நான் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் தங்கும் கட்டணம் நியாயமானது என்பது மட்டுமல்ல, இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்பதே முக்கியமான காரணம். அந்த வகையில் முன்னர் நான் சென்ற கம்போடியாப் பயண அனுபவத்தில் Lamphu Tree House என்ற தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் இல் உள்ள தங்குமிடத்தை இணையம் மூலம் முற்பதிவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஹோட்டல் மூலம் வந்த வம்பை பின்னர் சொல்கிறேன் ;)

அடுத்த நாள் பயணம், அதற்கு முதல் நாள் சிட்னியில் இருக்கும் அவுஸ்திரேலியாவிற்கான தாய்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு போன் இட்டு,
"நான் தாய்லாந்து நாட்டுக்குப் பயணிக்க இருப்பதாகவும் அங்கே தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏதாவது சுற்றுலாப் நிகழ்ச்சித் திட்டங்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றதா?" என்று கேள்விக் குறியிட்டேன்.
மறுமுனையில் தாய் வாடையில் ஆங்கிலம் பேசிய மாது "எமது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி தாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள் என்று பிரச்சாரப்படுத்தும் நோக்கம் மட்டும் தான், நீங்கள் தாய்லாந்து போய்த்தான் சுற்றுலா முகவரைத் தேடவேண்டும்" என்று சொல்லி தன் கடன் பணி செய்து முடித்தார்.

எனது விமானச் சீட்டை ஒழுங்கு செய்த பயண முகவரிடம் "தாய்லாந்துக்கு விசா தேவையா" என்று மூன்றாவது முறையும் கேட்டு வைத்தேன், தேவை இல்லை" என்று அவர் நாலாவது முறை சொல்லி மனதுக்குள் அலுத்திருப்பார். நான் சந்தேகப் பிராணியாக இப்படி நடந்து கொண்டதற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் உடன் தாய்லாந்துக்குப் பயணிக்க வேண்டி இருந்த போது தாய்லாந்து விசா எடுக்க வேண்டியது அன்று அவசியமாக இருந்தது.சிட்னியில் இருந்து முதலில் சிங்கப்பூர் போகும் Singapore Airlines இன் காலை நேர விமானத்தில் ஏறியாற்று. வழக்கம் போல விமானத்தின் டிவி திரையில் காண்பிக்கப்போகும் திரைப்படங்கள் பட்டியலை நோண்டினேன். வழக்கம் போல யாரோ ஒரு ரசனையின் உச்சம் கொண்டவர் பரிந்துரைத்த "வில்லு" என்ற காவியமும் "அபியும் நானும்" என்ற த்ரிஷா நடித்த தொலைக்காட்சி நாடகமும் இருந்தது. கூடவே ஆடியோ பகுதியில் "வசூல்" என்ற படத்தின் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் எடுத்தவருக்கே தெரியுமோ தெரியாது இந்தப் படத்தின் பாடல்கள் வந்திருக்கும் என்று.

சிங்கையில் இறங்கி ஒரு மணி நேர இடைவெளியின் பின் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங் போகும் விமானத்தில் ஏறி இருந்தாயிற்று. தாய்லாந்து நாட்டுக்கு உள்நுளைவோர் பதியும் சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது.

தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்
0000000000000000000000000000000000000000000000

மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.

38 comments:

மாயவரத்தான்.... said...

:)

இய‌ற்கை said...

//ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில்//
ரொம்ப நல்லது பாஸ்..அப்போதான் நாங்க எல்லா நாட்டைப் பற்றியும் தெரிஞ்சிக்க முடியும்

இய‌ற்கை said...

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.. உங்க கூடவே பயணித்தது போல இருக்கு

shortfilmindia.com said...

ரைட்டு ஆரம்பிங்க.. நல்லாருக்கு

கேபிள் சங்கர்

U.P.Tharsan said...

நானும் தாய்லாந்து போனேன். அதுவும் ஒரு பெரிய கதை. சரி முதலில் உங்கட கதைய சொல்லுங்க கேட்பம்.

கானா பிரபா said...

மாயவரத்தாரே

சிரிப்பின் அர்த்தம் புரிகிறது ;)

வருகைக்கு நன்றி இயற்கை, தொடர்ந்தும் வாருங்கள் ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஓகே.. ஓகே.. "நல்ல"படியா உண்மையை எழுதுங்க கானா தம்பீ..!

தமிழன்-கறுப்பி... said...

:)

அண்ணன் தாய்லாந்து போறதுக்கு முதல் சொல்லி இருந்தா ஒரு கேள்வி ஒண்டு இருக்கு என்னட்டை பறவால்லை இப்பவும் கேக்கலாம்தான் ஆனால் வேண்டாம்...

ஆயில்யன் said...

//இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள்//

கில்லாடி பாஸ் நீங்க நல்ல டிப்ஸ் மைண்ட்ல வைச்சுக்கிறேன்! :)


மற்றபடி தாய்லாந்து உலாத்தல் பதிவுக்கு வாழ்த்துக்களோடு வரிசை கட்டி நிற்கிறேன்!வாரவாரம் வரணும்

ஆயில்யன் said...

//சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது./

ஒஹோ கிச்சு கிச்சு மூட்டற மாதிரியா இருந்துச்சு எங்களுக்கெல்லாம் பீதியில கிளம்பும்!

ஆயில்யன் said...

//பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால்//

நம்பிட்டேன்!

துபாய் ராஜா said...

அனைத்துப் படங்களும் அருமை பிரபா. உலாத்தல் தொடர்ந்து தொடரட்டும்.

நேரமிருக்கும் போது நம்ம சபைப்பக்கம் வாங்க. என்னோட பயண அனுபவங்கள் படிக்க.....
http://rajasabai.blogspot.com/

நிஜமா நல்லவன் said...

:))

நிஜமா நல்லவன் said...

கலக்கலா ஆரம்பிச்சி இருக்கீங்க!

பாண்டியன் said...

சார்!

கம்போடிய குட்டிகள் அருமை.. நீர் கொடுத்து வைத்த மகராசன்

Anonymous said...

யானை மேல, பாரசூட் ஜம்பிங்னு ஒரே அட்வென்சரா இருக்கு பாஸ்.

கானா பிரபா said...

ரைட்டு ஆரம்பிங்க.. நல்லாருக்கு

கேபிள் சங்கர்..//


நன்றி பாஸ்

U.P.Tharsan said...
நானும் தாய்லாந்து போனேன். அதுவும் ஒரு பெரிய கதை. //


யு பி அதையும் சொல்லுங்கோவன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஓகே.. ஓகே.. "நல்ல"படியா உண்மையை எழுதுங்க கானா தம்பீ..!
//

முருகா முருகா உள்ளதை மட்டும் சொல்வேன் முருகா ;)

வந்தியத்தேவன் said...

தாய்லாந்தில் உலாத்தல் ஆரமபமே நல்லாயிருக்கு, அதென்ன எங்கே உலாத்தப்போனாலும் எப்படியும் 2 பெண்களுடன் படம் எடுத்துபோடுவியள். என்னவோ நடக்கட்டும் நடக்கட்டும். ஐயா எப்படியும் இந்தத் தொடரை மறக்காமல் எழுதிமுடியுங்கள்.

Anonymous said...

என்னிடம் இரண்டு பின்னூட்டங்கள் உள்ளன.

1) தாய்லாந்து பெண்கள் அழகாயிருக்கிறார்கள்.

2) மொத்தமாக எவ்வளவு செலவானது? (இந்திய ரூபாயில்)

சயந்தன் said...

புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்த வந்துகொண்டிருக்கிற பலரிடமும் ஒரு தாய்லாந்து கதை இருக்கும். அவை கொஞ்சம் திகில் நிறைந்ததாக .. ஒருவித கையறு நிலையுற்றதாக... ஏன்.. கொஞ்சமும் நிறையவும் கிளுகிளுப்பானதாகக் கூட இருக்கும்.

கோபிநாத் said...

\\தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்\\

என்ன தல உள்குத்து எல்லாம் பலமாக இருக்கு ;)

\\மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.\\

மக்கும்...தல இதை அப்படியே ஒரு டிஸ்கி மாதிரி ரெடி பண்ணி வச்சிக்கோங்க ;)

சந்தனமுல்லை said...

ஆகா..அடுத்த உலாத்தல் புத்தகமா!! கலக்குங்க..படங்கள் எப்போவும் போல அசத்தல்!! :)

கானா பிரபா said...

தமிழன்-கறுப்பி... said...

:)

அண்ணன் தாய்லாந்து போறதுக்கு முதல் சொல்லி இருந்தா ஒரு கேள்வி ஒண்டு இருக்கு என்னட்டை பறவால்லை இப்பவும் கேக்கலாம்தான் //

கண்டதையும் கேட்கிறதெண்டா ஜீசாட்டுக்கு வாருமய்யா ;)

சின்னப்பாண்டி

உங்க ஆதரவோடு கண்டிப்பா வர்ரேன் ;)

துபாய் ராஜா said...

அனைத்துப் படங்களும் அருமை பிரபா. உலாத்தல் தொடர்ந்து தொடரட்டும்.//

வாங்க ராஜா வருகைக்கு நன்றி

நிஜமா நல்லவன் said...

கலக்கலா ஆரம்பிச்சி இருக்கீங்க!//

நன்றி நிஜம்ஸ்

கானா பிரபா said...

பாண்டியன் said...

சார்!

கம்போடிய குட்டிகள் அருமை.. நீர் கொடுத்து வைத்த மகராசன்//

சீ போங்க வெக்கம் வெக்கமா வருது பாஸ்

சின்ன அம்மிணி said...

யானை மேல, பாரசூட் ஜம்பிங்னு ஒரே அட்வென்சரா இருக்கு பாஸ்.//

;) பாஸ் நீங்களும் தங்கமணியை அழைச்சிட்டு போய் யானை பவனி போலாம்ல

//வந்தியத்தேவன் said...

அதென்ன எங்கே உலாத்தப்போனாலும் எப்படியும் 2 பெண்களுடன் படம் எடுத்துபோடுவியள். //

இதெல்லாம் நானா சேர்த்த கூட்டம் இல்லை தானா வந்த கூட்டம் தம்பி ;-)

ஆயில்யன் said...

//இதெல்லாம் நானா சேர்த்த கூட்டம் இல்லை தானா வந்த கூட்டம் தம்பி ;-)//

ஆஸ்திரேலியாவரைக்கும் கூட்டிக்கிட்டு வந்தாச்சா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

இந்த பாராசூட் போட்டோ பார்த்ததும்? எதோ ஒரு படத்துல யானைக்குட்டி பாராச்சூட்ல வர்றமாதிரி பார்த்த ஞாபகம் வருது அது ஏன்ன்ன்ன்ன்ன்!!????

நாடோடி இலக்கியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்.

உங்களுக்கு வில்லு எனக்கு பீமா. :(

Premkumar said...

Hi,
This is premkumar from Chennai.Your blog is really Excellent.
Thank Bye
Premkumar
premkumar2184@gmail.com

Premkumar said...

Hi,
Kerala, Cambodia and Singapore is over.Bangalore started.Tomorrow i will finish.
Thanks bye.
Premkumar
premkumar2184@gmail.com

கானா பிரபா said...

Anonymous said...

என்னிடம் இரண்டு பின்னூட்டங்கள் உள்ளன.

1) தாய்லாந்து பெண்கள் அழகாயிருக்கிறார்கள்.

2) மொத்தமாக எவ்வளவு செலவானது? (இந்திய ரூபாயில்)//

என்னுடைய இரண்டு பதில்கள் இவை தான்

1. உண்மை தான் தாய்லாந்து பெண்கள் மிக அழகானவர்கள்

2. இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகம் சென்று ஒருவார விடுமுறைக்கு ஆகும் செலவுதான் மொத்தமும். இந்திய கரன்சியும் தாய் கரன்சியும் மதிப்பில் பெரும் வேறுபாடு இல்லை.


சயந்தன் said...

புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்த வந்துகொண்டிருக்கிற பலரிடமும் ஒரு தாய்லாந்து கதை இருக்கும். //

உண்மைதான் ;)

கோபிநாத் said...

\\தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்\\

என்ன தல உள்குத்து எல்லாம் பலமாக இருக்கு ;)//

வாங்க தல, அடுத்தவன் போட்டுறதுக்குள்ள நானே போட்டுட்டேன் ;-)

கானா பிரபா said...

சந்தனமுல்லை said...

ஆகா..அடுத்த உலாத்தல் புத்தகமா!! கலக்குங்க//

வாங்க பாஸ் , ஒரு முடிவோட தான் இருக்கீங்களா

நாடோடி இலக்கியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்.//

மிக்க நன்றி நண்பா

Premkumar said...

Hi,
Kerala, Cambodia and Singapore is over.Bangalore started.Tomorrow i will finish.//

வணக்கம் நண்பர் பிரேம்குமாரிற்கு, உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தொடர்ந்து நட்போடு இருப்போம்.

சந்தனமுல்லை said...

u r awarded here - http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html

soorya said...

ஆவலைத் தூண்டும் அனுபவங்கள்.
பயணிப்பதில் பேரானந்தம் உண்டு.
தொடர்ந்து பயணியுங்கள்.
பயணங்கள் எப்போதுமே எமை வளர்ப்பன.
நானுமோர் பயணி...!
பயணங்கள் முடிவதில்லை.

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

நல்லதந்தி said...

”இதயம் பேசுகிறது”கானா பிரபா அப்படின்னு பட்டம் தரலாமுன்னு நெனைக்கிறேன்!. இதுக்கு ஆனந்தவிகடன் கிட்ட இருந்து எதாவது ஒப்புதல் வாங்கணுமான்னு தெரியலை!. ”இன்னொரு மணியன்” அப்படிங்கிற பட்டம் ஓகேவா! கானா!!!?

நல்லதந்தி said...

சொல்ல மறந்துட்டேன்.
”இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!”

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி சூர்யா

துபாய் ராஜா

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நல்ல தந்தி

ஆகா என்னை மணியன் ஆக்கிடாதீங்க ;-) இப்படியே இருந்திட்டுப் போயிடுறேன்

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா

கந்தப்பு said...

நானும் தனியாக தாய்லாந்து போக ஆசை தான். வீட்டில தெரிஞ்ச உயிரோட சங்குதான்