Social Icons

Pages

Tuesday, August 25, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - ஓர் பின்பாட்டு

நமது தாயகத்திலே வலைப்பதிவர் சந்திப்பு வரப்போகிறது என்று நண்பன் வந்தி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் கூடவே பொறாமையும் கலந்து. தாயகத்தை விட்டு விலகி 14 ஆண்டுகளைக் கழித்தும் இன்றும் ஏதாவது படிவத்தில் Nationality என்ற பகுதிக்கு வரும்போது Australian என்பதை தயங்கித் தயங்கி வாயில் எச்சிலை மிண்டியபடி எழுதும் பண்பு மாறவில்லை. நாடு நல்ல சுகம் கண்ட பிறகு அங்கே வாழ்ந்து மடிய வேண்டும் என்பதும் என் பேராசைகளில் ஒன்று. இதைப் பதிவுக்கான வார்த்தை ஜாலமாக எல்லாம் எழுதவில்லை.

நான்கு ஆண்டுகளைத் தொடும் என் வலைப்பதிவு அனுபவத்தில், தாயகத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் ஓராண்டாகத் தான் நம் உறவுகள் நிறையப்பேர் எழுத வந்திருக்கின்றார்கள். வலைப்பதிவு அனுபவத்தினூடே ஒரு புதியதொரு நட்பு வட்டத்தினைப் பெற்ற எனக்கு தாயத்தில் இருந்து வரும் உறவுகள் மீது இன்னும் ஒரு படி மேலான பரிவும் ஏற்படுகின்றது. என் போன்ற புலம்பெயர்ந்தவர்களின் எண்ணவோட்டங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கும் அவர்களின் நனைவிடைதோய்தல் போன்ற பதிவுகள். வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய "என் இனிய மாம்பழமே" பதிவினை வாசித்து விட்டு அதில் நான் கறுத்தக் கொழும்பான் வகை மாம்பழத்தைப் பற்றிச் சொன்னபோது அந்தப் பழத்தினைப் புகைப்படம் எடுத்து என் பதிவுக்காக அனுப்பியது தான் எனக்கும் என் தாயகத்து வலைப்பதிவர்களுக்கும் இடையிலான நேசத்தின் ஆரம்பம் என்பேன். எனக்கு மட்டும் தாயகம் போகும் சுதந்திரம் வாய்த்தால் ஒரு நாள் அவகாசத்திலேயே இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கும் போய் வந்திருப்பேன்.

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே வந்தியத்தேவனுடைய பதிவு மூலமாக விடுத்த அழைப்புப் பதிவுக்கு அநானியாக யூ எஸ் இலிருந்து ஒருவர் (ஐ.பியும் சேமிக்கப்பட்டிருக்கிறது) கிண்டலாக "புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்" என்று கேவலமாகப் பின்னூட்டியிருந்தாராம். வந்தியிடம் சொன்னேன் தயவு செய்து அதை வெளியிடவேண்டாம் என்று. அந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் தாயக் வலைப்பதிவர்கள் இதனால் மனம் நொந்து அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கக் கூடும் என்றேன். இப்படியெல்லாம் தான் அவர்கள் இந்தப் பதிவர் சந்திப்பை நடத்துவதற்கு முன் சில சங்கடங்களையும் எதிர் நோக்க வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

வலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் வந்தி மூலமாக இணைய வழி நேரடி ஒளிபரப்புக்கான இணைப்புக் கிடைத்தது. சிட்னி நேரம் மதியம் 12 மணிக்கே அந்த இணைப்பை போட்டு விட்டு ஏறக்குறைய மறந்தே விட்டிருந்தேன். மற்றைய அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஆட்கள் பலர் பேசுவதுபோலக் கேட்டது. பக்கத்து வீட்டுக்காரன் டிவியை சத்தமாக வைத்துப் பார்க்கிறானோ என்று சினந்து கொண்டே எழும்பிய போது தான் ஞாபகத்துக்கு வந்தது, அடடா பதிவர் சந்திப்பின் ஒலி அல்லவா அது என்று.
கணினியின் முன் உட்கார்ந்தேன்.

வலைப்பதிவர்கள் ஒவ்வொருவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்தது. வெற்று போட்டோவில் பார்த்த ஆட்களின் கற்பனை உருவ அமைப்பு கண்ணுக்கு முன்னே கணினித் திரையில் தெரியத் தெரிய உள்ளுரச் சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ஆனால் அது நீடிக்குமுன்னே ஒரு கவலைக்குரிய நிகழ்வு வந்து கஷ்டப்படுத்தியது. வீடியோ ஒளிபரப்போடு இணைந்த அரட்டைப் பெட்டியில் பத்தோடு பதினொன்றாக நின்ற என்னைப் போல இன்னொருவர் "இந்தியன்" என்ற ஒருவர் வந்து "துரோகி பிரபாகரன் ஒழிந்தான்" "வன்னியில் ஹிட்லரின் ஆட்சி ஓய்ந்தது" என்ற ரீதியில் தொடர்ந்து அந்த அரட்டைப் பெட்டியை படு கேவலமான வார்த்தைப் பிரயோகங்களினூடாகப் புண்படுத்த ஆரம்பித்தார். சிறீலங்கா ராணுவத்தளத்தில் இருந்து புலிகளைக் கொச்சையாக எழுதும் பாணியில் அது தொடர்ந்தது.

கனடாவில் இருந்து அந்த அதிகாலை வேளை இந்த இணைய ஒளிபரப்பைப் பார்க்க வந்த சினேகிதி என்னைப் போலவே ஆவலோடு இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டே அரட்டைப் பெட்டியில் மேலதிக தகவல்களை புதிதாக வருபவர்களுக்கும் கொடுத்துக் கொண்டே மறுமுனையில் பதிவர் சந்திப்பில் இருந்த கெளபாய் மது, பகீ போன்றோரிடம் அங்கே நடக்கும் விடயங்களைக் கேட்டுக் கொண்டே இருந்த அவரிடமும் அந்த "இந்தியன்" என்பவர் விட்டு வைக்கவில்லை. எச்சில் கோப்பை எல்லாம் கழுவி தொழிலை முடிச்சாச்சா (அதுதான் இலங்கையைச் சேர்ந்தவர்களின் தொழிலாம்), என்னுடைய எச்சில் பாத்திரத்தையும் கழுவித் தரமுடியுமா" என்று சீண்டினார். மறுமுனையில் ஜீ சாட்டில் இருந்து கொண்டு சினேகிதியிடம் "தங்கச்சி! தயவு செய்து அந்த ஆளுக்கு ஒரு பதிலும் போட வேண்டாம், அவரின் தொல்லை அதிகமாகும்" என்று நான் சொல்லி வைத்தேன். அந்த "இந்தியன்" அடுத்ததாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் மீது நாரசமான கொமெண்டை அடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது. இந்த "இந்தியன்" என்பவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர் (அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை) என்ற கவலையான பதிலை அவர் வலைப்பதிவு முகவரி சொல்லி வைத்தது.

"தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இப்படி ஆபாசமாகப் பேசுவதை நிறுத்துங்கள்" என்றேன் இருவருக்கும். "இது எங்கள் கருத்துச் சுதந்திரம்" என்றார் ஒருவர். "அப்படியென்றால் உங்கள் அக்கா,தங்கச்சியைப் பற்றி மற்றவன் பேசினாலும் விடுவீர்களா" என்று நான் கேட்டேன். இந்த அரட்டையில் தாயகத்தில் நடக்கும் வலைப்பதிவு நிகழ்வில் லயிக்க முடியாத ஒரு கட்டமும் வந்தது. அப்போது என் துணைக்கு வந்தார்கள் அதுவரை இணைப்பில் இருந்த டோண்டு ராகவனும், மாயவரத்தானும். அவர்கள் இருவரும் இந்த "இந்தியன்" என்ற நபரை இந்த நாரசமான அரட்டையை விடும்படி கேட்க, அவரோ "டோண்டு பக்தன்", "சோ.ராமசாமி பக்தன்" என்று டோண்டு மீது தன் சேஷ்டையை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல் இந்த தொல்லை நீடித்தது. மெல்ல மெல்ல பத்து இருபதாக அரட்டைப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்தார்கள். சுவிஸ் போன்ற ஐரோப்பா போன்ற நாடுகளில் அப்போது காலை வேளை ஆகி விட்டிருந்ததால் அங்கிருந்து நிறையப் பேர் வந்தார்கள் போல. அந்தக் கணத்தில் இருந்தூ "இந்தியன்" என்பவர் அதற்குப் பின் தன் ஆட்டத்தை விட்டு மாயமானார்.

சிங்கையில் இருந்து ஜோதிபாரதி போன்றவர்களும், இந்தியாவில் இருந்து டோண்டு ராகவன், சகோதரி முத்துலெட்சுமி, தமிழ் நெஞ்சம் தாய்லாந்திலிருந்து மாயவரத்தான், கனடாவில் இருந்து சினேகிதி, கீத் போறவர்களும், சுவிஸ் நாட்டில் இருந்து சயந்தன், சாத்திரி போன்றவர்களும் அவுஸ்திரேலியாவில் இருந்து நான், வசந்தன் போன்றவர்களும் இந்த நேரடி ஒளிபரப்பில் இணைந்தவர்களில் சிலர். அரட்டை அறையிலும் லோஷனைக் காட்டுங்கள் என்று தேடித்திரிந்தார்கள் ;)

தொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பின் ஒளியோட்டத்தில் முழுமையாக ஈடுபட முடிந்தது. வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஏற்கனவே சக உறவுகள் பலர் தங்கள் விரிவான பதிவுகள் மூலம் கொடுத்திருந்தார்கள். ஒரு பார்வையாளனாக இருந்து எனக்குப் பட்ட விஷயங்களைச் சொல்கின்றேன்.

இணைய வழி நேரடி ஒளிபரப்பு என்னும் இந்த விஷயத்தை எந்த விதமான தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி, ஒரு சில நிமிட ஒலித்தெளிவின்மை தவிர சாதித்துக் காட்டிவிட்டார்கள் சகோதரங்கள்.

சத்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். என் நினைப்பு அவ்வாறு இருந்ததில் தவறில்லை ஏனென்றால் எங்கள் சமூக அமைப்பு அப்படி ;)
பிறகு தான் தெரிந்தது அவரும் ஒரு பதிவர் என்று.

ஆரம்பத்திலேயே அறிமுகங்களைக் கொடுத்து விட்டதால் பின்னர் தனியாகப் பேசும் போது ஒரு சிலரை இனங்காண முடியவில்லை. "ஆர் இப்ப கதைக்கிறது" என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே ஆளை 10 பேர் விசாரித்தாலும் கூட தனித்தனியாக ;-)

யாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே. அந்தத் திரட்டிச் சொந்தக்காரர் "யாழ்தேவி" என்று வைத்தது போல "உத்தரதேவி" என்று இன்னொருவர் ஆரம்பித்து விட்டுப் போகட்டுமே. ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தான் ரயில் , மட்டக்களப்பான் கிணறு என்று அடிபட்டுச் சாகும் கூத்து அடுத்த நூற்றாண்டிலும் ஓயாது போல. ஒன்று மட்டும் தெரிந்தது, இலவச ஆலோசனை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிவாங்கியைப் பிடிக்க நம்மவர்கள் தயார்.

ஈழத்தமிழப் பதிவர்கள் தம் பதிவுகளில எழுதும் தமிழகப் பேச்சு வழக்கு பற்றியும் பேச்சு வந்தது. தக்கன வாழும் தகாதன அழியும். இது பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் கூடப்பொருந்தும். எல்லாப் பதிவர்களும் ஜெயகாந்தன் மாதிரியோ, எஸ்.பொன்னுத்துரை மாதிரியோ எழுத்தாளனாக பிறப்பதில்லை. வலைப்பதிவு என்பதே ஒருவன் தன்னுடைய மன ஓட்டங்களைப் பதியும் ஒரு இணையவழி ஊடகமே. யாரோ ஒரு ஆங்கிலேயன் கண்டுபிடித்த விஷயங்களுக்கெல்லாம் வரைவிலக்கணம் போட்டு இதுதான் எழுது, இப்பிடித்தான் எழுது என்ற இணையச் சட்டாம்பி வேலைகள் தொடரும் இந்த வேளை என்பங்குக்கும் சொல்லி வைக்கிறேன் இதை. யார் எதை எழுத வேண்டும் என்பதை எழுதுபவனும், எதை யார் படிக்க வேண்டும் என்ற பூரண சுதந்திரம் படிக்கும் வாசகனுக்கும் இருக்கு. சதா சர்வகாலமும் யாரைப் பிடிச்சுத் தின்னலாம் என்று எல்லாப் பதிவுகளையும் மோந்து பார்த்து தேடித்தேடி இவர் என்ன எழுதுகிறார் என்று தேடித்திரிந்து கிண்டல் அடித்துப் பொழுது போக்குவதல்ல நல்ல வாசகனுக்குரிய/வழிகாட்டிக்குரிய அடையாளம். நான் ஈழத்தமிழ் சொற்களை வைத்து முழுமையாக எழுதிய பதிவுகளிலும், ஈழத்தமிழ் படைப்பாளிகள் போன்றோர் குறித்து எழுதிய பதிவுகளும் இப்படி "ஆலோசனை சொல்லும்" எத்தனை பேர் வந்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். நடிகமணி வைரமுத்து குறித்த பதிவுக்கு வந்து கருத்து சொன்னவர்கள் இரண்டெ இரண்டு பேர்.அதற்காக நான் கூட்டம் சேர்ப்பதற்காக பதிவு என்று சொல்ல வரவில்லை. இலவச ஆலோசனை செய்பவர்கள் எத்தனை பேர் அப்படியான செயற்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். முப்பது பேர் வந்து பின்னூட்டம் போடுவதால் மூவாயிரம் டொலரா கிடைக்கப் போகுது? ஆலோசனைகள் தேவையானவை அவை முறையாக வருமிடத்து.

விடுபட்ட ஒன்ரையும் இப்போது சேர்க்கிறேன். வலைப்பதிவு ஆக்கங்களை எழுதியவர் சம்மதமின்றி வெளியிடும் பத்திரிகைகள் "நன்றி ‍ இணையம் " என்று போடுவது கொலைக் கொடுமை. இப்படியான நாகரீகத் திருட்டை வலைப்பதிவர் சந்திப்பில் மு.மயூரன் பேசியபோது உண்மையில் வீட்டில் இருந்து கைதட்டினேன் ;‍)இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. "நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்" என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். பிறகு கேட்டார் "தமிழ் எழுதுவதற்கு எதப்பா", "நான் அன்றிலிருந்து இன்று வரை ஈழம் யூனிகோட் தட்டச்சு தான்" என்றேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்து வந்தால் போதும், நாளைக்கு அதுவே தமிழ் பேச்சைக் கண்டுணர்ந்து திரையில் அடிக்கும் முறையாக (voice recognition software) வந்தால் என்ன எது தட்டச்சுபவனுக்கு இலகுவான முறையோ அதுவே போதம். இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன். அப்படியே இருந்துட்டு போறன்.

நிறைவாக, இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு, ஆரம்பமே அமர்க்களம். இன்னும் பல சந்திப்புக்கள் நடக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக, நீங்கள் இருக்கிறீர்கள் எங்களுக்காக.

வலைப்பதிவர் சந்திப்பு படங்கள் நன்றி : வந்தியத்தேவன், நிமல்

34 comments:

ஆயில்யன் said...

//ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை.//

:((

ஆயில்யன் said...

//இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.//

100% சரி!

*இயற்கை ராஜி* said...

மிக நல்ல விஷயம்

*இயற்கை ராஜி* said...

நான் பார்க்காமல் விட்டுடேனே:-(

அமுதா கிருஷ்ணா said...

அடுத்த பதிவர் சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்ள முடியும்..பிராத்தனை வீணாவதில்லை.

யோ வொய்ஸ் (யோகா) said...

சந்திப்பில் இருந்த எங்களுக்கு இணையத்தில் இத்தனை விடயங்கள் நடந்தது தெரியாது. அதை அழகாக எழுதியதற்கு நன்றி. பத்து பேர் பாராட்டும் போது ஒருவன் தூற்றத்தான் செய்வான். அவனை விட்டு விட்டு அடுத்தவரிடம் போவோம். உங்கள் இணைய தொடுப்பை எனககு டிவிட்டிய தந்த வந்திக்கும் நன்றி

கரவைக்குரல் said...

முதல் நாள் சந்திப்பிலேயே இப்படியான வாதங்கள் அவசியம் தானா என்று ஏன் அவர்களால் உணரமுடியவில்லை என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது,
எனக்கு இப்படியெல்லாம் நடந்தது என்று தெரியாது கானா
ஏனென்றால் நான் அலுவலக வேலை நிமிர்த்தம் இந்த நிகழ்வுடன் இணைந்திருக்கவில்லை.

உங்கள் ”ஆலோசனை” பற்றிய கருத்துக்கு நானும் ஆமோதிக்கிறேன்

தொடர்ந்தும் தாயக பதிவர் சந்திப்பு நின்று நிலைக்க வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்துவோம்

வந்தியத்தேவன் said...

//இறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. "நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்" என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். //

இதே பதிலைத்தான் நானும் அங்கே பம்பலாகக் கூறினேன்.

//வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய "என் இனிய மாம்பழமே" பதிவினை .... //

மாம்பழம் அனுப்பிய கதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளினால் இழுக்கப்பட்டுத்தான் நானும் பதிவெழுத முயன்றேன். இப்பவும் முயல்கிறேன் இன்னும் திருப்தியாக ஒரு பதிவும் எழுதவில்லை.

//"புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்" //

பாவம் அவர் எங்கள் சந்தோசம் ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை.

அந்த இந்தியன் யார் என்பது ஓரளவு ஊகிக்ககூடியதாக இருந்தது.

//இந்த "இந்தியன்" என்பவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்//

அவர் யார் என்பது எங்களுக்கும் தெரியும் வருவேன் எனச் சொல்லிவிட்டு வராமல் கிண்டலாகவும் நக்கலாகவும் பின்னூட்டங்கள் இடுகின்றார். அவரின் கருத்துக்கள் பல என்ன கொடுமை சாராகவே இருக்கும்.

//ச‌த்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். //

நாங்கள் அவரை தந்தையுடன் கூட கூட்டம் பார்க்க வந்தவர் என நினைத்தோம். அந்தப் பெண்ணிற்க்கும் பையனிற்கும் சம்பந்தமில்லை.

// "ஆர் இப்ப கதைக்கிறது" என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். //

பாவம் பகீ அரட்டைப்பெட்டியுடன் ஜக்கியமாகி இருந்தபடியால் அவர் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை, கடைசியாக பத்துபேருக்கு இலவச டொமைன் தருவதாக கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து ஏக பிரதிநிதியாக வந்திருந்தார்.

கலக்கல் பதிவு பிரபா. இன்னொரு நாட்டில் நடந்த பதிவர் சந்திப்புகளுக்கு வேறு நாடுகளில் இருப்பவர்கள் எழுதும் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. இப்படி நடப்பது இதுதான் முதல் முறை என நினைக்கின்றேன்.

வாசுகி said...

இலங்கை பதிவர் சந்திப்பு பற்றிய அனைத்து பதிவுகளும் வாசித்தேன்.
நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும் அழகாக எழுதியுள்ளீர்கள்.
உங்களுடைய பதிவுகளை வாசிக்கும் போதே நீங்கள் தாய் நிலத்தில் எவ்வளவு பற்று வைத்திருக்கிறீர்கள்
என்று தெரிகிறது. நீங்கள் இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் நாள் வரும். கவலைப்படாதீர்கள்.

சி தயாளன் said...

சில விரும்பதகாத விசயங்கள் அரட்டையில் நடந்தது கவலைக்குரியது...

தமிழ் தட்டச்சு பெயர் மற்றும் முறைக்கே இவ்வளவு விவாதம் தேவையா என்று தோன்றுகின்றது...:-(

தமிழன்-கறுப்பி... said...

அறையில் இணையம் இல்லாததால கலந்து கொள்ள முடியேல்லை, இப்பத்தான் யோசிக்கிறன் பஞ்சியைப்பாராம வேலை செய்யுற இடத்துக்கு வந்திருக்கலாம் எண்டு.

மு. மயூரன் said...

/யாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே/

சிங்கம் என்பது ஒரு காட்டு விலங்கு.

கூடவே இலங்கையின் பல பாகங்களில் கொடியாய் நின்ற விலங்கு. இலங்கை வரலாற்றில் வாழ்வோடு பிணைந்த ஒரு உருவம். கூடவே சிங்கக்கொடியின் கீழ் காலகாலமாக தமிழ் பேசும் போர் வீரர்கள் போராடப்போயிருக்கிறார்கள்.
பிறகேன் அந்த சிங்கக்கொடியைப்பார்த்து தமிழர்கள் பிரச்சினைப்பட்டார்கள்?

சந்தனமுல்லை said...

கானாஸ்..தங்கள் உள்ளத்தின் உவகை இந்த இடுகையில் தெரிகிறது! வாழ்த்துகள் சந்திப்பு நடத்திய பதிவர்களுக்கு! நாங்களும் இருக்கிறோம் - பங்குபெறுவதற்கு!! :-)

கோபிநாத் said...

நல்லதொரு முயற்சி தல...இது போல நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் ;)

கானா பிரபா said...

மயூரன்

சிங்கக்கொடி தான் இனப்பிரச்சனைக்கு காரணம் என்பது சிற்றறிவுக்கு இது நாள் வரை தெரியவில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும், ஒரு இனத்துக்குள்ளேயே யாழ்ப்பாணத்தான் சின்னம், திருகோணமலையான் சின்னம்,மட்டக்களப்பான் சின்னம் என்று பேதம் பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்றால் அப்படியே இருக்கட்டும். எதையெல்லாமோ தொலைத்துவிட்டு முள் கம்பிக்குள் இருக்கிற சனம் இதுக்கா கவலைப்படப்போகுது.

மு. மயூரன் said...

சிங்கக்கொடிதான் இனப்பிரச்சினைக்கு காரணம் என்று சொன்னேனா?

குறியீட்டு வன்முறை பற்றி விளக்கவே அந்த உதாரணம் சொன்னேன்.

மேலாதிக்கத்தால் பாதிக்கப்படாதவர்களுக்கு மேலாதிக்கக்குறியீடுகள் எப்பவும் உறுத்துமென்றில்லை.

தமிழ்ச்சனம் பற்றிய அக்கறை இருந்தால், முள்ளுக்கம்பிக்குள் சனத்தை வைத்துக்கொண்டு "யாழ்தேவி" பாட்டும் கோசமுமாக இலங்கை அரசு இருக்க, அந்தக்குறியீட்டை தேர்ந்தெடுத்த மனநிலையை நீங்கள் கேட்டிருக்கவேண்டும்.

/ஒரு இனத்துக்குள்ளேயே யாழ்ப்பாணத்தான் சின்னம், திருகோணமலையான் சின்னம்,மட்டக்களப்பான் சின்னம் என்று பேதம் பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்றால்/

ஒரு நாட்டுக்குள் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்று பேதம் பார்ப்பதும் தமிழருக்கென்று தனியே கட்சி இயக்கம் அமைப்பதும் குற்றமா?

மு. மயூரன் said...

இவ்வளத்துக்கும் யாழ்தேவி என்று பெயர் வைத்தததுக்கு பேரினவாத அரசியல் பின்னணி இருக்கென்றோ,யாழ் மேலாதிக்கக்கூறுகள் தான் காரணம் என்றோ நான் சொன்னேனா?

பெயர் வைக்கப்பட்டது தற்செயலானது என்பதை அழுத்திச்சொல்லி, ஆனாலும் அந்தப்பெயர் இவ்வாறான மறுவினைகளை உருவாக்கும் என்பதைத்தான் விளக்கி இருந்தேன்.

யாழ் மேலாதிக்கம் பற்றி கதைக்க வெளிக்கிட்டாலே தேள் மேலில் விழுந்தமாதிரி ஏன் எதிர்வினையாற்ற வந்துவிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.


மற்றது,


விசைப்பலகை பிரச்சினைகள் குறித்து, ஒருங்குறி குறித்து உரையாடுவது பயனற்றதென்றால் ஓர் இணைய குடிமக்கள் சந்திப்பில் வேறென்னத்தைப்பற்றி மட்டும் உரையாடுவது பயனுள்ளதாயிருக்கும் என்று கருதுகிறீர்கள்?

கானா பிரபா said...

தமிழ்ச்சனம் பற்றிய அக்கறை இருந்தால், முள்ளுக்கம்பிக்குள் சனத்தை வைத்துக்கொண்டு "யாழ்தேவி" பாட்டும் கோசமுமாக இலங்கை அரசு இருக்க, அந்தக்குறியீட்டை தேர்ந்தெடுத்த மனநிலையை நீங்கள் கேட்டிருக்கவேண்டும். //

நானறிந்த வரை இலங்கை அரசு பிரச்சாரப்பாடலுக்கு முன்பே யாழ்தேவி திரட்டி வந்து விட்டது.

ஒரு நாட்டுக்குள் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்று பேதம் பார்ப்பதும் தமிழருக்கென்று தனியே கட்சி இயக்கம் அமைப்பதும் குற்றமா?//

திரும்ப திரும்ப பழைய சட்டிக்குள் விழுகிறீர்கள், தமிழ், சிங்களம் என்பது தனித்தனி அடையாளம். அவை இரு வேறு நாடுகளாக வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழுக்குள்ளேயே கூறு போடுதல் தேவையா

யாழ் மேலாதிக்கம் என்பது நீங்களே போட்டுக்கொள்ளும் வட்டம்,எங்கும் இது இருக்கிறது அவரவர் போட்டுக் கொள்ளும் சட்டை இது.

விசைப்பலகை பிரச்சனை குறித்துப் பேசியது பற்றி எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதைப்பற்றி விசனமாகவும் சொல்லவில்லை. பொதுவில் என் கருத்தாகச் சொன்னேன்.

மு. மயூரன் said...

இனம் போன்ற அடையாளங்களில் இருந்தல்ல, மாறாக, ஒடுக்குமுறையின், மேலாதிக்கத்தின் அளவு, தன்மை என்பவற்றின் அடிப்படையிலேயே போராட்டமும் பிரிவினைக்கோரிக்கையும் எழுகிறது.

தமிழ் இனம் ஒரே இனம் அதற்கு நாடு வேண்டும் என்றால் தென்னிந்தியாவையும் சேர்த்து நாடு பிரிக்க வேண்டும். ஏன் இலங்கையில் கோரிக்கை வந்தது? ஈழத்தமிழரே அந்தளவு மேலாதிக்க ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள்.

மேலாதிக்கத்துக்கெதிரான வினைகள் தொடர்ச்சியாக அவமதிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும்போது அது பிரிவினையில் வந்து நிற்கிறது.

ஆரம்பத்தில் மேலாதிக்கத்தை விட்டுவிடுங்கள் கூடி வாழ்வோம் என்பதாகத்தான் வினையாற்றத்தொடன்குவார்கள்.

யாழ் மேலாதிக்கத்துக்கெதிரான வினை என்பது மிக மிக நுண்ணிய அளவில் நாகரிகமாகவே முன்வைக்கப்படுகிறது. தமிழர் மேலாதிக்கத்துக்கெதிரான முஸ்லிம்களின் வினையை விடவும் மிக மிக நுண்ணியதாக முன்வைக்கப்படுகிறது.

அதனை அவமானப்படுத்துவது போல பேசுவது தவறான அரசியல். எந்த மேலாதிக்கமும் தனக்கெதிராக வினை புரியப்படும்போது, தான் மேலாதிக்கமே செய்யவில்லை.. இதெல்லாம் சும்மா மிகைப்படுத்தல் என்றுதான் சொல்லும்.

நான் எனது வலைத்தளத்துக்கு கோணேசபூமி என்று பேர் வைத்துவிட்டு போகலாம். ஆனால் இது தான் இலங்கை வாழ் மக்களுக்கான பொதுவான கூடுமிடம்.. வாங்க எல்லாரும் பதிவு செய்யுங்க என்று நான் கூப்பிட முடியாது.

எனது குறியீடுகளை ஒட்டுமொத்தப்படுத்தும்போதுதான் பிரச்சினை எழுகிறது.

தமிழர் பண்பாட்டோடு கலந்த சின்னம் என்று நீங்கள் யாழ்தேவியை சொல்லும்போது எவ்வளவு தூரம் மற்றவர்க்ளை புறக்கணிக்கிறீர்கள்?

தலவாக்கலையில் இருக்கும் 19 வயது பெண் பதிவருக்கு எந்தப்பண்பாட்டோடு எப்படி கலந்தது அது? அந்தச்சொல் இன்று அவருக்கு எப்படி அர்த்தப்படும்?

இந்த "மற்றவர்கள்" பற்றிய பிரக்ஞையையே நான் கோருகிறேனே ஒழிய, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மனிதக்கூட்டம் தன்னுள்ள்ளே துண்டு துண்டாக பிரிந்து சண்டை போட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.

வைத்தபெயர் பெயர் ஆட்களை உள்ளடக்குவதற்குப் பதில் வெளியேற்றும் தன்மையதாய் இருக்கிறது என்பதை தன்மையாய் எடுத்துச்சொன்னேனே தவிர அங்கே நான் வாக்குவாதப்படவில்லை. பெயரை வைத்திருப்பதும் மாற்றுவதும் அவர் விருப்பம். ஆனால் இது "எல்லோருக்கும் பொது" என்று சொல்லத்தொடங்கும் போது எதிர்வினைகள் கட்டாயம் வரும்.

கானா பிரபா said...

பதிவில் நான் சொன்னது போல யாழ்தேவி என்பது ஓர் தனித்திரட்டி அதில் யாரும் சேரலாம் விலகலாம், நாளைக்கு உத்தரதேவி என்று வந்தால் கூட அதிலும் அப்படியே. யாழ் என்பதற்காகவோ திருமலை என்பதற்காகவோ ஒதுக்கும் போக்கு தேவை இல்லை. தென்னிந்தியாவோடு பொருத்திப் பார்க்கும் அளவுக்கு நான் போகவில்லை, தமிழன் ஆண்டாண்டு காலம் வாழும் பூமியில் தான் தனி அடையாளம் வேண்டும் என்கிறேன்.

இப்படியே நாங்கள் பேசிக்கொண்டு போனால் முடிவில்லை. இன்னொரு விஷயம் பதிவர் சந்திப்பில் தனியே நீங்கள் பேசியதை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த யாழ் பற்றிய விசனத்தை நான் சொல்லவில்லை. ஆரம்ப ஒன்று கூடலில் எதற்கு ஒரு தனி நபர் திரட்டி பற்றிய விவாதம். அதுவும் ஏன் பெயர் ஆராய்ச்சி என்பதே என் விசனம்.

கானா பிரபா said...

ஆரம்பத்தில் மேலாதிக்கத்தை விட்டுவிடுங்கள் கூடி வாழ்வோம் என்பதாகத்தான் வினையாற்றத்தொடன்குவார்கள்.//

இதெல்லாம் நீஙகளாக கற்பனை பண்ணும் விஷயம் . இதே போக்கில் போனால் மட்டக்களப்பில் கருணா காலத்தில் யாழ் மக்களை விரட்டி அடித்தது, கொழும்பில் யாழ் வர்த்தகரை இலக்கு வைத்து பணம் பறித்தது எல்லாமே இன்னொரு மேலாதிக்கத்தின் வெளிப்பாடு

மாயா said...

அருமையான தொகுப்பு அண்ணா!

நானும் தொடக்க நிகழ்வு உட்பட கிட்டத்தட்ட அரை மணிநேர நிகழ்ச்சியைத் தவறவிட்டுவிட்டேன்.. கவலை தான்..

எனினும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்தவர்கள் அதனை தரவேற்றும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான்...

மு. மயூரன் said...

//இன்னொரு மேலாதிக்கத்தின் வெளிப்பாடு//

ஆம் வலு நிச்சயமாக.

அவ்வளவு எதுக்கு பிரதேசம் என்றே பார்த்தாலும் என்னுடைய ஊரிலேயே சாதி ஒடுக்குமுறைகள் இல்லையா? சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் இல்லையா?

அவ்வளவு ஏன் மூதூர்-திருமலை வேறுபாடு இல்லையா? முஸ்லிம்களிடையே கூட மூதூர்முஸ்லிம் -கிண்ணியா முஸ்லிம் என்ற வேறுபாடும் ஒதுக்கும் மனோபாவங்களும் இல்லையா?

இந்த வேறுபாடுகளை முரண்பாடுகளை ஆரோக்கியமாக ஏற்று கையாள்வதே சரியான அரசியல் கலாசாரமாக இருக்க முடியும். மறுப்பதல்ல.

மற்றது அங்கே ஒருவரின் தனித்திரட்டி பற்றிய விவாதம் ஏற்பட்டதுக்கு காரணமே அவர் திரட்டிகள் பற்றி பேசவந்து தன்னுடைய திரட்டியைப்பற்றி மட்டுமே பேசியதால். கூடவே அதில் இணையும் படி வேண்டுகோளும் முன்வைத்ததால்.

மு. மயூரன் said...

ஆழியாளின் கவிதை ஒன்று. பொருத்தம் கருதி:

அடையாளம்

=============

பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கையர் மத்தியில்
‘தெமள’

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானொரு மலைக்காரி

மலையில்
மூதூர் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்.

கானா பிரபா said...

இந்த வேறுபாடுகளை முரண்பாடுகளை ஆரோக்கியமாக ஏற்று கையாள்வதே சரியான அரசியல் கலாசாரமாக இருக்க முடியும். மறுப்பதல்ல.//

அதைத் தான் ஆரம்பத்தில் இருந்து நானும் சொல்லிக் கொண்டிருக்குறேன். ஒரு இனத்துக்குள் இன்னும் ஏன் ஆயிர‌ம் பேத‌ம் என்கிறேன்.


//மற்றது அங்கே ஒருவரின் தனித்திரட்டி பற்றிய விவாதம் ஏற்பட்டதுக்கு காரணமே அவர் திரட்டிகள் பற்றி பேசவந்து தன்னுடைய திரட்டியைப்பற்றி மட்டுமே பேசியதால். //

அதை நீட்டி முழக்காமல் ஒரு எல்லையோடு நிறுத்தியிருக்கலாம் என்பது என் ஆதங்கம்.

MyFriend said...

சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததுக்கு வாழ்த்துக்கள் :-)
*******************************
ம்ம்.. சிலர் இப்படி வம்பு பண்றதுக்குன்னே கெளம்பி வர்றாங்களே.. அவங்களையெல்லாம் சமாளிக்க வழியே இல்லையா?
********************************
சாரி, அன்று என்னால் கலந்துக்க முடியவில்லை. :-(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கானா அண்ணாச்சி,

தாங்கள் பதிவு செய்திருக்கும் கருத்துகள் இயற்கையானது!

ஆதங்கங்களும் தான்...!

கிடுகுவேலி said...

ம்ம்ம்...எனக்கு பார்க்க கிடைக்கவில்லை அந்த நேரடி நிகழ்ச்சியை. அங்கு என்ன நடந்தது என்பதை 'சீரியசாக' ஆக்கபூர்வமான ஆரோக்கியமான விமர்சனத்தோடு பதிவாக்கியிருக்கிறீர்கள். நன்றி...!!!

நடிகமணி வைரமுத்து பற்றிய பின்னூட்டத்திற்கு கருத்திட்டவன் என்ற வகையில் நீங்கள் இங்கே குறிப்பிட்டதற்காக மகிழ்வடைகிறேன்.

ARV Loshan said...

அருமை அண்ணா..

இணையத்தில் நடைபெற்றவை நேர்த்தியாகப் பதியப்பட்டுள்ளன..

நாங்கள் சந்திப்பில் இருந்தமையால் என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது.. கீத்,சயந்தன்,நீங்கள் தான் முழுமையாக அறிந்து தந்துள்ளீர்கள்.. நன்றி..

பதிவு போடா வேண்டும் என்றோ, முகஸ்துதிக்கு எங்களைப் பாராட்ட வேண்டும் என்றோ இல்லாமல் உண்மைகளை எழுதியிருப்பது தெரிகியார்த்து..

சில குறியீட்டுக் கிண்டல்களை ரசித்தேன்..

தேவையில்லாத/ எனக்கு அவசியப்படாத என்று நினைக்கிற சில சர்ச்சைகளுள் வர நான் விரும்பவில்லை.. :)

Thamiz Priyan said...

மனதில் இருப்பதையும், நடந்தையும் எந்த விகல்பமும் இல்லாமல் எழுதியுள்ளீர்கள்.

சந்திப்பை இணையம் வழியே நேரடியாகக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டது..:(

Neelaavanan- நீலாவணன் said...

பிரபா, வசந்தனின் பிற்பாட்டுப் பார்த்தீர்களா?

எழில்

Pot"tea" kadai said...

பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா. நான் தான் மிஸ் பண்ணிட்டேன். மத்தியானத்துக்கு மேல் விழித்து இணைப்புத் தேடி போனதில் 80களில் பார்த்த டிடி மாதிரி பொரி பொரியாய் தெரிந்தது :).

இதிலும் சில மானாவாரி மல்லாக்கொட்டைகள் தூற்றியது ஆபாசம்.

ஆதிரை said...

நன்றி அண்ணா...

இணையத்தில் நடந்த விடயங்களை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்தப் பதிவு ஒரு வரப்பிரசாதம்.

SShathiesh-சதீஷ். said...

அண்ணா நேரே இருந்து பார்த்தது போல பதிந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.