Social Icons

Pages

Sunday, July 20, 2008

Angkor Wat இல் எஞ்சிய சில...!

கடந்த சில பகுதிகளில் அங்கோர் வாட் ஆலயம் குறித்த விரிவான பதிவுகளும், படங்களும் இடம்பிடித்திருந்தன. அங்கு எடுத்திருந்த படங்களில் சில ஏற்கனவே வந்த பதிவுகளில் இடம்பிடிக்காத காரணத்தால் அவற்றையும் இங்கே கொடுத்து அங்கோர் வாட் ஆலயம் குறித்த பகுதியை நிறைவு செய்து அடுத்த பகுதிக்குப் போகலாம் என்றிருக்கின்றேன்.

அங்கோர் வாட் ஆலயத்தின் சுவர்களில் இதிகாசக் கதைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை சிற்பங்களாக நீண்ட நெடிய சுவர்களில் வடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராமாயணக் கதை, குருஷேத்திரப் போர் (மகாபாரதக் கதை) போன்றவற்றின் காட்சி வடிவங்கள். அதிலும் குறிப்பாக எத்தனை பேர் இந்தப் போரில் இருந்தார்களோ அவ்வளவு போர் அணிகள், படைக்கலன்கள் போன்றவற்றை நீண்ட தூரச் சிற்பவேலைப்பாடாக அமைத்திருக்கின்றார்கள்.


இன்னொரு முக்கியமான சிற்பவேலைப்பாடாக அமைவது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாறு. இது சியாம் ரீப் நகரத்தின் பல பாகங்களிலும் முக்கியமான சிற்ப வேலைப்பாடாக இருக்கின்றது, அங்கோர் நகரம் எனப்படும் சியாம் ரீப் நகரத்தின் நுளைவு வாயிலின் இருமருங்கிலும் நீண்ட தூரத்திற்கு பெரும் சிலை உருவங்கள் வாசுகி என்னும் மலைப்பாம்பைப் பிடித்தவகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆலயம் மட்டுமன்றி பெரும்பாலான ஆலயங்களில் இருக்கும் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டோ, களவாடப்பட்டோ, சிதைக்கப்பட்டோ இருக்கும் அவலம் தான் எங்கும் காணமுடிகின்றது. இரு மதங்களுக்கிடையிலான போர் என்பதை விட நான் முன்னர் குறிப்பிட்டது போன்று போல் பொட் என்னும் சர்வாதிகாரியால் தோற்றுவிக்கப்பட்ட மத விரோத அமைப்பான பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் கம்யூனிசக் கொள்கையால் இவ்வாறான ஆலயங்களின் தூண்களிலும், சுவர்களிலும், சிற்பங்களிலும், சிலைகளிலும் துப்பாக்கிச் சன்னங்களின் காயங்கள் தெறித்திருக்கின்றன. சிற்பங்களின் முகங்களை வாளால் அரிந்திருக்கின்றார்கள். குறிப்பாக அப்சரா என்னும் தேவதைகளின் விதவிதமான அரிய சிற்ப வேலைப்பாடுகள் உருக்குலைந்து நிற்கின்றன.

பொல் பொட்டின் படையணிகளால் விளைந்த துப்பாக்கிச் சன்னத் தெறிப்பு

வியட்னாம் படைகளோடு பொல்பொட்டின் படைகள் போரிட்டபோது, ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்கமுடியாமல் இவ்வாறான காடுகளுக்குள் மறைவாக இருந்த ஆலயங்களுக்குள் தான் தஞ்சம் புகுந்திருந்து தான் போரிட்டும், தங்களைப் பாதுகாத்தும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இப்படியான ஆலயங்களுக்கு வந்த இன்னொரு ஆபத்து, இந்த நாட்டைத் தமது காலணியாக வைத்திருந்த பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து வந்தது. கம்போடியாவில் இருந்த இவ்வகையான ஆலயங்கள் புதர்களுக்குள் தொலைந்து போய் இருப்பதைக் கண்ட பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக Henri Mouhot என்ற பிரெஞ்சு ஆய்வாளரின் கண்டுபிடிப்புக்களின் பிரகாரம் அவை அகழப்பட்டதோடு மட்டும் நின்றுவிடாது, இந்த ஆலயங்களின் முக்கிய கேந்திரங்களில் இந்து மதச் சடங்கின் அடிப்படையில் புதைக்கப்பட்ட தங்க, வைர ஆபரணப் புதையல்களைச் சூறையாடினார்கள். புத்த விக்கிரங்களின் தலையைக் கொய்து அவற்றைத் தம் நாட்டுக்குக் கொண்டு போனார்கள். இன்றும் வெளிநாடுகளில் அலங்காரப் பொருளாக விற்கப்படும் கழுத்துக்கு மேல் உள்ள புத்தர் சிலைகள் இவ்வாறான களவாடல் மூலமே விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை.

உலகப் புகழ்பெற்ற இந்த அங்கோர் வாட் ஆலயத்தின் புராதனமும், பிரமாண்டமும் கம்போடிய நாட்டின் இருண்ட காலத்தில் நடந்த உள் நாட்டுப் போர்களால் வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் போயிற்று. அதன் சிறப்பனை உணர்ந்து இப்போது ஆண்டுக்குப் பல்லாயிரம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து குவிகின்றனர். யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புக்கள் பாதுகாப்புக் குடை பிடிக்க, தன்னார்வலர்கள் பலர் இந்த ஆலயத்தைப் பேணும் நோக்கோடு பணியாற்றி வருகின்றார்கள். அங்கோர் வாட் ஆலயத்தைக் கண்ட திருப்தியில் மெல்ல வெயிற்களைப்பும், பசிக்களைப்பும் சேர அங்கிருந்து நகர்கின்றேன். நண்பகலைக் கடக்கின்றது சூரியன்.

17 comments:

ஆயில்யன் said...

கடைசி படத்தினை பார்த்த பாதிப்பிலேயே இருக்கிறேன் பதிவுக்கு போகவில்லை இன்னும் :)))

எத்தனை அழகாய் ஆனால் பாழடைந்து...???? :(

பிரேம்ஜி said...

சிறப்பான படங்கள்,நல்ல விவரிப்பு. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கடையில நடந்த கதையாடல மறக்காமப் பதிவு போட்டதுக்கு நன்றி சகோதரம் :O)

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
கடைசி படத்தினை பார்த்த பாதிப்பிலேயே இருக்கிறேன் பதிவுக்கு போகவில்லை இன்னும் :)))

எத்தனை அழகாய் ஆனால் பாழடைந்து...???? :(//


உண்மை தான் ஆயில்யன், நேரில் காணும் போது மனம் கனக்கின்றது, எவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஆக்கியிருப்பார்கள், அழிக்க ஒரு நிமிடம் போதுமே

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்ஜி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றாக விவரிச்சிருக்கீங்க.. படங்களும் அருமை. அடுத்தவனை தோற்கடிச்ச பெருமையில் அவன் ஊரின் கலைகளை அழிப்பதை எல்லாருமே ஒரு குறிக்கோளா செய்திருக்காங்க..

நிஜமா நல்லவன் said...

காலத்தை வென்று எஞ்சி நிற்கும் அங்கோர்வாட் உன்னத கலை பொக்கிஷம். கல்லிலே கலை வண்ணம் என்பது இனி ஏட்டிலும் பேச்சிலும் மட்டுமே.

கானா பிரபா said...

//மழை` ஷ்ரேயா(Shreya) said...
கடையில நடந்த கதையாடல மறக்காமப் பதிவு போட்டதுக்கு நன்றி சகோதரம் :O)//


வாங்கோ கூகுள் றீடர்

உங்களைப் போல ஆட்கள் கடை தெருவில கண்டு சொன்னாத்தான் பதிவு வாசிக்கிறீங்கள் எண்டு தெரியுமாம் ;-)

ஆ.கோகுலன் said...

கம்போடியா குறித்தான சிறப்பான விரிவான பதிவுக்கு நன்றி. அடுத்து எங்கு போகப்போகின்றீர்கள்..?

கானா பிரபா said...

கோகுலன் வாங்கோ

கம்போடியா உலாத்தல் இன்னும் முடியவில்லை, இப்பதானே ஆரம்பிச்சிருக்கிறன், அங்கோர் வாட் தான் முடிஞ்சது. அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவனா அஸ்கு புஸ்கு

ஆ.கோகுலன் said...

:)) !!!???.... கம்போடியாவில்தான் அடுத்து எங்கே போகப்போகின்றீர்கள் என்றேன்..!! :))

கானா பிரபா said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நன்றாக விவரிச்சிருக்கீங்க.. படங்களும் அருமை. அடுத்தவனை தோற்கடிச்ச பெருமையில் அவன் ஊரின் கலைகளை அழிப்பதை எல்லாருமே ஒரு குறிக்கோளா செய்திருக்காங்க..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க, கலையை ரசிக்கத் தெரிய கயவர்களின் வேலை அது.

சித்தன் said...

அங்கோர் வாட் சிற்பங்கள் உயிருள்ள சிற்பங்கள். காலவோட்டத்தில் பல சிற்பங்கள் களவாடப்பட்டதும், சிதைக்கப்பட்டதும் வரலாற்றின் ஏடுகள் சிலவற்றைக் கிழித்ததற்குச் சமம். கலைகளை சிதைக்கிறவன், மனதளவில் சிதைந்தவனாகத்தான் இருக்க முடியும்.

இந்தியர்களின் மகோன்னதமான வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் கானா பிரபாவிற்கு பாராட்டுகள்.

தொடரட்டும் உங்கள் முயற்சி.

கானா பிரபா said...

// நிஜமா நல்லவன் said...
காலத்தை வென்று எஞ்சி நிற்கும் அங்கோர்வாட் உன்னத கலை பொக்கிஷம். கல்லிலே கலை வண்ணம் என்பது இனி ஏட்டிலும் பேச்சிலும் மட்டுமே.//

வாங்க நண்பா

இதுதான் வலிக்கும் நிஜம் :(


//ஆ.கோகுலன் said...
:)) !!!???.... கம்போடியாவில்தான் அடுத்து எங்கே போகப்போகின்றீர்கள் என்றேன்..!! :))//


அடுத்து ஒரு கலாச்சாரம் தழுவிய காட்சி, சொல்கிறேன் சீக்கிரமே

கோபிநாத் said...

தல

இப்போதைக்கு படங்கள் அனைத்தும் சூப்பரு ;))

கானா பிரபா said...

//சித்தன் said...
அங்கோர் வாட் சிற்பங்கள் உயிருள்ள சிற்பங்கள். காலவோட்டத்தில் பல சிற்பங்கள் களவாடப்பட்டதும், சிதைக்கப்பட்டதும் வரலாற்றின் ஏடுகள் சிலவற்றைக் கிழித்ததற்குச் சமம்.//

உண்மை நண்பரே, அவற்றின் அழிவு நம் வரலாற்றின் பெருமையை அழித்ததற்குச் சமன். மிக்க நன்றி தங்கள் வருகைக்கு


//கோபிநாத் said...
தல

இப்போதைக்கு படங்கள் அனைத்தும் சூப்பரு ;))//

தல

முடிஞ்சா பதிவையும் படீங்க.

கோவை விஜய் said...

நாடு பிடிக்கும் ஆசை ஒரு புறம்
கெடுக்கும் மத வெறி மறுபுரம்
இடிக்கப்பட்டதோ கலை அம்சங்கள்
வடிக்கப் பட்ட சிலைகளோ பாதிப்பில்


அருமையான படங்கள்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/